இலங்கையிலிருந்து வெளிவரும் சிற்றிதழ்களின் ஆயுள் மிகக் குறைவு என்பது கசப்பானஉண்மையே.திட்டமிடப்படாமையினாலும், நிறுவனமயப்படுத்தாமையினாலும் இலங்கையில்சிற்றிதழ்களினால் நீண்ட தூரம் பயணிக்கமுடியவில்லை.பிரபல்யமான சில நிறுவனங்கள்அவ்வவ்போது சில சிற்றிதழ்களை வெளியிட்டன.தகுதியான ஆசிரியரும்,ஆசிரியபீடமும்,இல்லாமையால் அவையும் கால ஓட்டத்தில் மறைந்து போயின.இதே வேளை பிரபல எழுத்தாளர்களினால்
ஆரம்பிக்கப்பட்டசிற்றிதழ்களும் கால ஓட்டத்தில் மூழ்கிவிட்டன.
உதயதாரகையுடன் 1841ஆம் ஆண்டு இலங்கையின் பத்திரிகைத் துறை
ஆரம்பமானது.கலை,இலக்கியம்,சமூகம்,மருத்துவம்,விஞ்ஞானம்,அரசியல், நகைச்சுவை,இசை,
விவசாயம்,சிறுவர்,வானொலி ஆகிய துறைகளை முன்னிலைப்படுத்தி பல சஞ்சிகைகள்
வெளிவந்தன.இன்றும் சுமார் 15 சஞ்சிகைகள் வெளிவருகின்றன.48 வருட காலம் தனி நபர்
சாதனையாக வெளிவந்த மல்லிகை தடுமாறிக் கொண்டிருக்கிறது.தாயகம், ஞானம்,ஜீவநதி ஆகியன
இன்று வெளிவருகின்றன.யாத்ரா, நீங்களும் எழுதலாம் ஆகிய சஞ்சிகைகள்
கவிஞர்களின் அபிலாஷையைப் பூர்த்தி செய்கின்றன.
மறுமலர்ச்சி,கலைச்செல்வி,மல்லிகை,,சிரித்திரன்,,சுடர் ஆகிய சிற்றிதழ்கள் பல
எழுத்தாளர்களை இனம் கண்டு வளர்த்ததோடு புதிய சகாப்தத்தையும் உருவாக்கின.இதே பாணியை
ஞானம்,ஜீவநதி ஆகியன முன்னெடுக்கின்றன.
சிரித்திரனின் வரவு தமிழ் வாசகர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தது. சவாரித்தம்பர். மிஸ்டர்
அன்ட் மிஸிஸ் டாமோ டிரன் போன்ற பாத்திரங்கள் இன்று நினைத்தாலும் சிரிப்பை
வரவழைக்கின்றன,மகுடி கேள்வி பதில்கள். சிந்திக்கவும்
சிரிக்கவும் தூண்டின. கொத்தியின் ,காதல்,ஆச்சி பயணம் போகிறாள் போன்ற தரமான தொடர்களையும்
தந்தது.
சிரித்திரனின் பாதிப்பினால் கலகலப்பு,கிறுக்கன்,சுவைத்திரள் போன்ற
நகைச்சுவச்சிற்றிதழ்கள் வெளிவந்தன.என்றாலும் சிரித்திரனைப்போன்று வாசகர்களிடம் அவை
வரவேற்பைப்பெறவில்லை.
இலங்கையில் விவசாயம் உச்சக்கட்டமாக இருந்த காலத்தில் கமத்தொழில்
விளக்கம் எனும் சஞ்சிகையை கமத்தொழில் திணைக்களம் வெளியிட்டது.பல ஆக்கபூர்வமான
அறிவுரைகளையும் வழிகாட்டல்களையும் இது வழங்கியது.பாடசாலையில் விவசாயம் ஒருபாடமாக
இருந்ததனால் மாணவர்களும் இச்சஞ்சிகையினால் பயனடைந்தனர்.
சமூகஜோதி நா.முத்தையாவினால் வெளியிடப்பட்ட ஆத்மஜோதி,சிவத்தொண்டன்
நிலையம் வெளியிட்ட சிவத்தொண்டன் ஆகியவை ஆன்மீகக்கருத்துக்களை முன்னிறுத்தி
வெளிவந்த சஞ்சிகைகளாகும்.செல்வச்சன்னதி ஆலய மடத்தினால் வெளியிடப்படும் சஞ்சிகை
ஆன்மீகக்கருத்துக்களை முன்னிறுத்தி வெளிவருகின்றது.
மில்க்வைற் சவர்க்கார நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட
மில்க்வைற் செய்தி எனும் சஞ்சிகை பல்துறை ஆக்கங்களைக்கொண்டு வெளிவந்தது.க.சி.
குலரத்தினத்தை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த இச்சஞ்சிகை வாசகர்களிடம்
பெரு வரவேற்பைப்பெற்றது
1992 ஐப்பசி,மார்கழி முதல் காலாண்டிதழாக மாற்றம் எனும் சஞ்சிகை மலர்ந்தது.1995 ஆம்ஆண்டு ஜூன் மாதம் இது முடக்கப்பட்டது.மார்க்கின் கை வண்ணத்தில் அட்டைப்படங்கள்அதிசயிக்கவைத்தன.நவீன தொழில்நுட்பம் அறிமுகமாகாதகாலத்தில் மாற்றத்தின் அட்டைப்படவடிவமைப்பு சிலாகிக்கப்பட்டது.ஆண்டுதோறும் ஆளுமைமிக்க ஒருவரைத்தேர்வுசெய்துதேசாபிமானி பட்டம் வழங்கிக்கெளரவித்தது. பல போட்டிகள் மூலம் வாசகர்களுக்குப்பலபரிசுகளை வழங்கியது.1995 ஆம் ஆண்டு கணனியைப்பற்றி அதிகமானோர்அறிந்திராதவேளையில் ஆசிரியர் வே. நவமோகனின் முயற்சியினால் கணனிச்சிறப்பிதழ்வெளியானது.
வே.நவமோகனை ஆசிரியராகக்கொண்டு 2000 ஆம் ஆண்டு கொம்பியூட்டர் ருடேவெளியானது.கொம்பியூட்டரைப்பற்றி தமிழில் அறிவதற்கு ஆர்வமுள்ளவர்களின்ஆவலைப்பூர்த்தி செய்தது.கொம்புயூட்டர் ருடே என்றபெயர் பலரிடம் கைமாறி இன்றும்வெளிவந்து கொண்டிருக்கிறது.கொம்பியூட்டர் துறையில் ஆர்வமுள்ள நவமோகன்கொம்பியூட்டர் ரைம்ஸ் எனும் சஞ்சிகையை வெளியிட்டார்.சிறிதுகாலத்தில் அது நின்றுவிட்டது.இதேகாலகட்டத்தில் வெளிச்சம்,நங்கூரம்,அறிவுக்களஞ்சியம்,சாளரம் ஆகியன தோன்றிமறைந்துவிட்டன.
இளையதம்பி தயானந்தாவை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த இருக்கிறம் எனும் சஞ்சிகைபுதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.அவர் நாட்டைவிட்டுவெளியேறியபின் னர் புதியவர்கள் பொறுப்பேற்றனர்.நிதி நிலைமையால் தள்ளாடிய இருக்கிறம்சஞ்சிகையின் வினியோகப்பொறுப்பை மிகப்பெரிய நிறுவனம் பொறுப்பேற்றது.சர்ச்சைக்குரியபேட்டி பிரசுரமானதால் விற்பனைக்கு விடப்பட்ட பிரதிகள் மீளப்பெறப்பட்டன.காலவெள்ளத்தில்இருக்கிறம் மூழ்கிவிட்டது.
குமுதம் சஞ்சிகையை நினைவூட்டும்விதமாக வெளிவந்த அமுதம்,ஆனந்த விகடனை ஒத்தஇலங்கை விகடன் ஆகியவையும் காணாமல் போய்விட்டன.சிறுவர்களுக்காக உதயன்வெளியிட்ட அர்ஜுணா,மாணவர்களுக்காக வீரகேசரி வெளியிட்ட புது யுகம் ஆகியனஅமுங்கிவிட்டன.
கலைக்கேசரி,சமகாலம்,ஆனந்தம் ஆகியன உயர்தர கடதாசியில் அழகிய படங்களுடன்வெளிவருகின்றன.இவற்றின் விலை காரணமாக வாசகர்களினால் நெருங்கமுடியாத நிலைஉள்ளது. செங்கதிர்,கொளுந்து,சுகவாழ்வு, காயத்திரி சித்தம்,தின மகுடி ஆகிய சஞ்சிகைகள்தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.இந்தியச்சோதிடர்களையும்,இந்தியஆலயங்களையும் முதன்மைப்படுத்தி சோதிடகேசரி வெளிவருகின்றது.
இவை தவிர ஒருசில இலவச்சிற்றிதழ்களும் சத்தமில்லாமல் வருகின்றன.உயர்தர கடதாசியில்அழகியவண்ணப் படங்களுடன் விளம்பரங்களை இலக்காகக்கொண்டு அருள்,,ஃபிளட்ஸ்கைட்ஸ்,,கொட்டாஞ்சேனை அன்ட் யுனைட்,,அலை ஓசை,வெள்ளவத்தை கைட் ஆகியனவெளிவருகின்றன.பிரபல வியாபார நிலையங்களிலும்,விமானங்களிலும்,விமானநிலையத்திலும் இவை இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன.
தினபதி,சிந்தாமணி,தினகரன்,வீரகேசரி ஆகியபத்திரிகை நிறுவனங்கள் சிறுசஞ்சிகைகளைவெளியிட்டுத்தோல்வியடைந்தன. வீரகேசரி பத்திரிகை நிறுவனம் சலிக்காதுசிறுசஞ்சிகைகளைத்தொடர்ந்தும் வெளியிட்டு வருகிறது.
மாணவர்களைக்குறிவைத்து பல சஞ்சிகைகள் வெளிவருகின்றன.ஐந்தாம் ஆண்டுபுலமைப்பரிசில் பரீட்சைக்குத்தோற்றும் மாணவர்களுக்காக பிரபலஆசிரியர்களும்,நிறுவனங்களும் பரீட்சை வழிகாட்டி என்றபெயரில் சஞ்சிகைகளைவெளியிடுகின்றன.மூன்றாம்,நான்காம் வகுப்பு மாணவர்களைக்குறிவைத்தும் இப்படியானசஞ்சிகைகள் வெளிவருகின்றன.இவற்றுக்கு வெளிநாட்டில் நல்ல கிராக்கி உள்ளது.
பல்கலைக்கழகங்கள்,உயர்கல்விப்பீடங்கள்,பாடசாலைகள்,சனசமூகநிலையங்கள்,ஆலயங்கள்ஆகியன ஆன்டுதோறும் சஞ்சிகையை வெளியிடுகின்றன.அவை கடைகளில் விற்பனைசெய்யப்படுவதில்லை என்றாலும் அவற்றையும் சிற்றிதழ்களுக்குள் அடக்கலாம்.
இலங்கையில் இருந்து வெளிவரும் சிற்றிதழ்கள் சந்தாக்காரர்களையும்,இலக்கியஆர்வலர்களையும் நம்பியே உள்ளன. பிரதான தொழில் உள்ளவர்களே சிற்றிதழ்களைவெளியிடுகின்றனர். மல்லிகை ஆசிரியர் மட்டும் மல்லிகையின் வருமானத்தையே அதிகமாகநம்பினார்.மிகக்குறைந்தளவு பிரதிகளே அச்சிடப்படுகின்றன.சிற்றிதழ்களின் விற்பனையைஅதிகரிப்பதற்குரிய கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டும்.
ஆனந்தவிகடன்,குமுதம்,கல்கி,அவள்விகடன்,பக்தி,சக்தி ஆகிய சஞ்சிகைகளில் இலங்கைவாசகர்களின் ரசனை கட்டுண்டு கிடப்பதனால் அதனை உடைத்து வெளிவரும் சூழ்நிலையைஇலங்கையிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகளினால் உருவாக்க முடியவில்லை.
No comments:
Post a Comment