வடக்கே
போகும் மெயில் நூல் வெளியீட்டு
விழாவில் திரு. ஏ.ஆர்.வி.லோஷன் ஆற்றிய
சிறப்புரை
தலைவர்
அவர்களுக்கும் உரையாற்றிய அறிஞர்களுக்கும் சபையோருக்கும் வணக்கம்.
கருத்துரை என்ற தலைப்பிலே எனக்குக்கொடுக்கப்பட்ட
விடயம் விழாவின் நாயகன் திரு.ரவிவர்மா
அவர்களின் விளையாட்டுக்கட்டுரைகள் பற்றிய கருத்துரைகளை வழங்குவது.
1998 முதல்
கிரிக்கெற்,கால்பந்து,டெனிஸ் ஆகிய விளையாட்டுக்கள்
பற்றி ஒலிபரப்புச்செய்துள்ளேன். வலைப்பதிவில்
கட்டுரைகளை எழுதியுள்ளேன்.ரவிவர்மாவும் நானும் சமகாலத்தில் வலைப்பதிவில்
தடம் பதித்தோம்.இவருடைய திரைக்கு வராத
சங்கதிகள் மூலம் தான் வலை
உலகில் அறிமுகமானோம்.எனது நண்பன் வந்தியத்தேவன்
என்று வலை
உலகில் அறியப்படுகின்ற பெரி.மயூரனின் உறவினர்
என்பதால் நன்கு பரிச்சியமானவர்.
ஆரம்பதிலே நிகழ்ச்சிகளை வழங்கும் போது எமக்கு ஆங்கிலஇணையதளங்கள்
தான் உதவிசெய்தன. ஆனால் தமிழ் பத்திரிகைகளில்
கட்டுரைகள் வாசிக்கும் போது ரமணி என்ற
பெயரில் உள்ள இவரது கட்டுரைகளை
வாசிப்பேன் ஆனால் இவர் தான்
ரமணி என்று அறியவில்லை. இவரது
சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். அப்போதும் இவர் தான் அவர்
என்று அறியவில்லை.
நேற்றையதினம் இவரது
சிறுகதையை வாசித்தேன். எனக்குக்கொடுக்கப்பட்ட பணிக்கு
அப்பால் சென்று சிறுகதை பற்றி
சொல்ல விரும்புகின்றேன்.வடக்கே போகும் மெயில்
சிறுகதைத்தொகுப்பின் தலைப்புக்குரிய முதல் கதை.1979ஆம்
ஆண்டு இதனை எழுதி உள்ளார்.
இந்தக்காலத்திலும் ரயில்
பாதையின் தடங்கல் களை நாம்
பார்க்கும் போது அந்தத்தண்டவாளங்கள் இருந்த
அடையாளங்களை நாம் பார்க்கும் போது
அந்தச்சிறுகதையில் இவர் சொன்ன உருவகங்கள்
ஞாபகத்துக்கு வரும்.சிறுகதைகளில் இவர்
காட்டியுள்ள பாத்திரங்கள் பொன்னுக்கிழவி,வேலுச்சட்டம்பியார் ஆகிய பாத்திரங்கள் நாங்கள்
நாளாந்தம் காணுகின்ற அந்தந்தக்கால கட்டத்தின் வடிவங்கள் என்றுதான் கூற வேண்டும்.
ஒரு விளையாட்டு ஒலிபரப்பாளனுக்கு,விளையாட்டு நிகழ்ச்சிப்பொறுப்பாளருக்கு,விளையாட்டு எழுத்தாளனுக்கு தேவயான முக்கியமான விசயங்களை
இவர் தெரிந்து வைத்திருக்கிறார். அந்தவிளையாட்டுப்பற்றி முழுமையாக இல்லாவிட்டாலும் தொண்ணூறு சதவீதமாவது தெரிந்திருக்க வேண்டும்.விளையாட்டு விதி முறைகளை அறிந்து
வைத்திருக்க வேண்டும்.விளையாடு வீரர்களின் பெயர்களை சரியாக நாம் சொல்லுகிறோமோ
இல்லையோ மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில்
இவரைப்பற்றித்தான் இவர்
சொல்லுகின்றார் என்று புரிந்து கொள்ளும்
வகை
யில் எழுத வேண்டும்.
எமதுஇலங்கை வீரர்களின் பெயர்கள் சில வெளி நாடவர்களின்
வாயில் நுழைவது சிக்கலாக உள்ளது.அதுபோல் வெளிநாட்டு வீரர்களின்
பெயர்கள் சிம்பாவே,தென்.ஆபிரிக்கா ஆகிய
நாட்டு வீரர்களின் பெயர்கள் சரியாக வாசிக்கும்போது சிக்கலாக
இருக்கும்.2000ஆம் ஆண்டு ஏப்ரலில்
ரவிவர்மா எழுதிய கட்டுரயில் ஹன்ஸி
குரொஞ்ஜே பற்றி உள்ளது.ஹன்ஸி
குரொஞ்ஜே சூதாட்ட முகவர்களிடம் பணம்
வாங்கிக்கொண்டு கிரிக்கெட் முடிவுகளை மாற்றினார். இதை நாங்கள் அந்தக்காலத்திலே
ஆங்கிலத்தில் வாசித்தபோது முழுமையான அர்த்தம் அல்லது முழுமையான வரலாறை
நாங்கள் புரிந்து கொள்ளவில்லை. ஆங்கிலத்திலே சஞ்ஜே சாவ்லாவுக்கும், ஹன்ஸி
குரொஞ்ஜேக்கும் இடையே நடந்த உரையாடலை
இவ்வளவு சுவாரஸ்சியமாக யாரும் தந்திருக்க முடியாது.ரவிவர்மாவின் கட்டுரையில் காசேதான் கடவுளப்பா அந்தக்கடவுளுக்கும் கிரிக்கெற் தெரியுமப்பா என்ற தலைப்பில்வெளிவந்துள்ளது. அந்தக்காலத்திலே மிக
அற்புதமாக எழுதியுள்ளார். இந்தக்காலத்திலே இணையங்கள் துணை புரிகின்றன.மொழிபெயர்ப்புகள்
உள்ளன எடுத்துப்போட்டாலும் கண்டுபிடிப்பது கடினம்.
விளையாட்டுக்கட்டுரை எழுதுபவர்கள் வரிக்கு வரி மொழிபெயர்ப்பார்கள்.ஆனால் இவரது கட்டுரையில்
முக்கியமான விசயம் பின்னணி, வரலாறு
அத்தோடு தனக்குத்தெரிந்த தரவுகளையும் தருவார்.முக்கியமான ஒரு
விசயத்தை இவரில் நான் காணுகிறேன்.ரமணி என்ற பெயரில்
எழுதும் போதும் சரி விளையாட்டுக்கட்டுரைகள்
எழுதும்போதும் சரி திரைக்கு வராத
சங்கதிகள் எழுதும் போதும் சரி
தனக்கென்று ஒவ்வொருகட்டுரைக்கும் ஒவ்வொரு பாணியை வைத்துள்ளார்.அதுபோல் பத்திரிகைக்குப் பத்திரிகை
தன்னுடைய எழுத்துக்களையும் வித்தியாசப்படுத்தியுள்ளார்.தினக்குரலில் ஆரம்பத்தில் எழுதும்போது இவரது விளையாட்டுக்கட்டுரைக்கு இருந்த வடிவத்துக்கும்,
மெட்ரோநியூஸில் 2006ஆம் ஆண்டும் 2010 ஆம்
ஆண்டும் உலகக்கிண்ண கால் பந்தாட்டப்போட்டி பற்றிய
காட்டுரைகளுக்குமிருந்த வித்தியாசம் மிக ரசனைக்குரியதாக உள்ளது.மெட்ரோநியூஸ் இளைஞர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட வாரப்பத்திரிகை நாளாந்தப்பத்திரிகையாக மலர்ந்தபோது ஜேர்மனியில் நடைபெற்ற உலகக்கிண்ண கால் பந்தாட்டப்போட்டிக்காக இவர் கொடுத்த
அறிமுகம் “கோ[ல்}லாகல
ஆரம்பம்” வாசகர்களைக்கவர்ந்தது.
விளையாட்டுக்கட்டுரைகளை எழுதுபவர்கள் மிகமுக்கியமாகக்கவனிக்கவேண்டியது
மிகத்தெளிவாக இருக்க வேண்டும்.கொடுக்கும்
விசயங்கள் புதியதாக இருக்க வேண்டும்வெள்ளிக்கிழமை வெளியாகும் பத்திரிகையில்
புதிய விசயங்களையும் கடைசியாக வந்த தகவல்களையும் தருவார்.
அந்தளவுக்கு மிகக்கடுமையாக உழைத்துள்ளார். சகலதுறையிலும் அகலக்கால் பதித்த ஒருவர் விளையாட்டுத்துறையில்தனக்கென
ஒரு விசேட தகமை கொண்டுள்ளார்.
மினி உலகக்கிண்ணங்கள்
பற்றி நிறைய எழுதிஉள்ளார்.என்னை
ஆச்சையப்படவைத்த கட்டுரை.2001 அம்ம் ஆண்டு ஒக்டோபர்
மாதம்தினக்குரலில் 2002 ஆம் ஆண்டு நடைபெற
உள்ள மினி உலலக்கைண்ணம் பற்றியகட்டுரையில்
ஒவ்வொரு அணியும் தயாராகும் விதத்தையும்
2003 ஆம் ஆண்டு தென். ஆபிரிக்காவில்
நடைபெற உள்ள உலகக்கிண்ண கிரிக்கெட்போட்டிபற்றியும்
எழுதியுள்ளார்.2003 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தை
தென். ஆபிரிக்கா அல்லது இந்தியா வெல்லும்
என்றுதான் அனைவரும் எழுதினார்கள்.அவுஸ்திரேலிய அணியைப்பற்றி அந்தக்காலத்திலே சிலாகித்து எழுதியவர்கள் குறைவு. ஆனால் ரவிவர்மா
அவர்கள் 2003 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்திப்பெறுவதற்கு
அவுஸ்திரேலியா தகுதியானது என எழுதி உள்ளார்.
அதேபோல் இலங்கை அரை இறுதிக்குச்செல்லும்
என யாரும் சொல்லவில்லை.ரவிவர்மா
சொல்லியுள்ளார்.
இவருடைய எழுத்துநடை அலாதியானது.வசனக்கோர்வையில் நாம் தவறு விடுவோம்
. ஆனால் ரவிவர்மா ரமணி என்ற பெயரில்
எழுதிய கட்டுரைகளில் எந்தப்பிழையையும் காணமுடியவில்லை.வாய்புத்தந்தமைக்கு நன்றிகூறி விடைபெறுகிறேன்.
No comments:
Post a Comment