Showing posts with label ஸ்மித். Show all posts
Showing posts with label ஸ்மித். Show all posts

Sunday, February 2, 2025

டெஸ்ட்கிரிக்கெட்டில் உச்சம் தொட்ட ஸ்மித்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ஓட்டங்களை எட்டி அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் புது சாதனை படைத்துள்ளார்.

கிறிக்கெற் உலகின் தலைசிறந்த வீரராக திகழ்பவர் ஸ்டீவ் ஸ்மித். இவர் இந்தியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரிலே 10 ஆயிரம் ஓட்டங்களை எட்டும் வாய்ப்பு கிட்டியது. ஆனால், ஒரே ஒரு ஓட்டத்தால்   அந்த சாதனையைத் தவறவிட்டார்.ஸ்டீவ் ஸ்மித் ஒரு ஓட்டம் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ஓட்டங்களை எட்டினார். க‌ப்டனாக இருக்கும்போது இந்த சாதனையை அவர் எட்டியிருப்பது தனிச்சிறப்பாக கருதப்படுகிறது.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ஓட்டங்ளை எட்டிய 15வது வீரர் ஸ்மித் ஆவார். அவுஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம்  ஓட்டங்களை எட்டிய 4வது வீரர் ஸ்மித் ஆவார். இதற்கு முன்பு அலன் பார்டர், ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங்  ஆகியோர்மட்டுமே இந்த சாதனையை எட்டியிருந்தனர்.

35 வயதான ஸ்மித் பாகிஸ்தானுக்கு எதிராக 2010ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். தற்போது வரை 115 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஸ்மித் 4 இரட்டை சதங்கள், 34 சதங்கள், 42 அரைசதங்களுடன் 10 ஆயிரத்து 68 ஓட்டங்கள் எடுத்துள்ளார். 205 இன்னிங்ஸ்களில்  விளையாடிய‌ ஸ்மித்தின் அதிகபட்சமாக்  239 ஓட்டங்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் சராசரி 56.25 வைத்துள்ளார். பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்துக்குப் பின்னர் ஒரு வருட   தடையில் இருந்து மீண்டு வந்த ஸ்மித் சிறப்பாக ஆடி இந்த சாதனையைப் படைத்துள்ளார். ஸ்மித்திற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஸ்மித் 165 ஒருநாள் போட்டியில் ஆடி 12 சதங்களும், 34 அரைசதங்களும் விளாசி 5 ஆயிரத்து 662 ரன்கள் எடுத்துள்ளார். 67 டி20 போட்டிகளில் ஆடி 1094 ரன்களும், 103 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 485 ரன்களும் எடுத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன்வசம் வைத்துள்ளார். அவர் 15 ஆயிரத்து 921 ஓட்டங்களுடன் உள்ளார். ஸ்டீவ் ஸ்மித் இந்த டெஸ்ட் தொடரிேல யூனிஸ் கான், கவாஸ்கர்  ஆகியோரின் சாதனைகளை முறியடிப்பார் என எதிர் பார்க்கப்படுகிறது.