Tuesday, February 2, 2010

உலகக்கிண்ணம்2010


ஜப்பான்
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு ஆசியாவில் இருந்து தகுதி பெற்ற நான்காவது நாடு ஜப்பான். கடந்த ஐந்து வருடங்களில் மூன்று தடவை ஆசிய சம்பியனான பலம் வாய்ந்த நாடு ஜப்பான்.
உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் விளையாடுவதற்கு நடைபெற்ற மூன்றாவது சுற்று தகுதிகாண் போட்டியில் குழு 2 இல் ஜப்பான், பஹ்ரேன், ஓமான், தாய்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றன. நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியை சமப்படுத்தி ஒரே ஒரு போட்டியில் தோல்வி அடைந்தது ஜப்பான். 12 கோல்கள் அடித்த ஜப்பானுக்கு எதிராக மூன்று கோல்கள் அடிக்கப்பட்டன. 13 புள்ளிகள் பெற்ற ஜப்பான் நான்காவது சுற்றில் விளையாடத் தகுதி பெற்றது.
நான்காவது சுற்றில் குழு 1 இல் அவுஸ்திரேலியா, ஜப்பான், பஹ்ரேன், கட்டார், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் போட்டியிட்டன. நான்காவது சுற்றில் எட்டுப் போட்டிகளில் விளையாடிய ஜப்பான் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று மூன்று போட்டிகளை சமப்படுத்தி ஒரு போட்டியில் தோல்வி அடைந்தது. 11 கோல்கள் அடித்த ஜப்பானுக்கு எதிராக ஆறு கோல்கள் அடிக்கப்பட்டன. 15 புள்ளிகளுடன் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்ற ஜப்பான் தாய்லாந்துக்கு எதிரான போட்டியில் 4 1 என்ற கோல் கணக்கில் வென்று தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது ஜப்பான். எட்டுப் போட்டிகளில் ஜப்பானுக்கு எதிராக எந்த ஒரு நாடும் கோல் அடிக்கவில்லை. அவுஸ்திரேலியா 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பஹ்ரேன் 2 3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. அவுஸ்திரேலியாவும் பஹ்ரேனும் ஜப்பானுக்கு எதிராக தலா இரண்டு கோல்கள் அடித்தன. ஒரு போட்டியில் ஜப்பானுக்கு எதிராக அடிக்கப்பட்ட அதிகூடிய கோல்கள் இவையாகும்.
மூன்றாவது, நான்காவது தகுதி காண் போட்டிகளில் எட்டு போட்டிகளில் வெற்றி பெற்று நான்கு போட்டிகளை சமப்படுத்திட ஜப்பான் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தது. ஜப்பானுக்கு எதிராக 12 முறை மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இரண்டு தடவை சிவப்பு அட்டை காட்டப்பட்டது. ஜப்பான் 23 கோல்கள் அடித்தது. ஜப்பானுக்கு எதிராக ஒன்பது கோல்கள் அடிக்கப்பட்டன.
ஜப்பான் தேசிய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சன்சுகி நகா முரா, கெய்சுகி ஹொண்பா அணித் தலைவர் யுஜி காயாவா ஆகியோர் மீது ரசிகர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். அணியின் பயிற்சியாளராக ஒகாடா உள்ளார். மாசுஸ்ரிலியோ தனகா, சன்சுகி நகாமுரா, யூசு கிரோஎன்டோ, யுஜி நகா ஸாவா ஆகியோர் தலா மூன்று கோல்கள் அடித்துள்ளனர்.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் குழு ஈயில் ஹொலண்ட், கமரூன், டென்மார்க் ஆகியவற்றுடன் ஜப்பான் உள்ளது.

No comments: