Sunday, February 14, 2010

உலகக்கிண்ணம்2010


இங்கிலாந்து
உலகில் உள்ள மிக அதிகமான உதைபந்தாட்ட ரசிகர்களின் கனவு நாயகனான டேவிட் பெக்கம், வேர்ன் ரூனி ஆகியோரின் பலத்தினால் எதிரணிகளை கலங்கச் செய்யும் நாடு இங்கிலாந்து 10 போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து ஒன்பது போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வி அடைந்து 27 புள்ளிகளுடன் ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து தெரிவான அணிகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இங்கிலாந்து, உக்ரேன், குரோசியா, பெலாரஸ், கஸகஸ்தான், அன்டோரா ஆகிய ஆறு நாடுகளும் குழு 6இல் போட்டியிட்டன. உக்ரேன், இங்கிலாந்துக்கு சவால் விடும் என எதிர்பார்க்கப்பட்டது. அது போன்றே முதலாவது போட்டியில் தோல்வி அடைந்தாலும் உக்ரேன் இரண்டாவது போட்டியில் தனது நாட்டில் இங்கிலாந்தை தோற்கடித்தது.
அன்டோராவுக்கு எதிரான போட்டியில் 6 0, கஸகஸ்தான், குரோசியா ஆகிய நாடுகளுக்கு எதிரான போட்டியில் தலா 5 1 என்ற கோல் கணக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது இங்கிலாந்து. நான்கு போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக எந்த ஒரு நாடும் கோல் அடிக்கவில்லை. ஏனைய ஐந்து போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக தலா ஒருகோல் அடிக்கப்பட்டது.
உக்ரேனுக்கு எதிரான போட்டியில் 1 0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து தோல்வி அடைந்தது. இத்தகுப் போட்டியில் இங்கிலாந்து கோல் அடிக்கவில்லை.
34 கோல்கள் அடித்த இங்கிலாந்துக்கு எதிராக ஆறு கோல்கள் அடிக்கப்பட்டன. ஏழு தடவை மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. ஒருமுறை சிகப்பு அட்டை காட்டப்பட்டது. ரூனி, பெக்கம், பிராங்ளம், பேட்டு, ஸ்டீபன் கெராட், பீற்றர் குரூஸ், ஜேமய்ன் டிபோ ஆகியோரை கட்டுப்படுத்துவது எதிரணிகளுக்கு சிரமமானதாக இருக்கும். ரூனி ஒன்பது கோல்கள் அடித்து அசத்தி உள்ளார். ஸ்டீபன்கொரட் ஒரு போட்டியில் நான்கு கோல்களும் இன்னொரு போட்டியில் மூன்று கோல்களும் அடித்துள்ளார். 135 நிமிடங்கள் மட்டும் விளையாடிய ஜேமய்ன் டிபோ மூன்று கோல்கள் அடித்துள்ளார். பீற்றர் குரோஸ், பிராங்கலம் பேட் ஆகியோர் தலா நான்கு கோல்கள் அடித்துள்ளனர். டேவிட் பெக்கம் கோல் எதுவும் அடிக்கவில்லை என்றாலும் அச்சுறுத்தும் வீரராக உள்ளார்.
"சி' பிரிவில் அமெரிக்கா, அல்ஜீரியா, சுலோவேனியா ஆகிய நாடுகளுடன் இங்கிலாந்து உள்ளது.

No comments: