Thursday, July 2, 2026

நோர்வேயில் வெற்றிக்கோலை அடித்த ஹாலண்ட்

  டெக்சாஸில்  செவ்வாய்க்கிழமைநடந்த போட்டியில் ஐவரி கோஸ்ட்டை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம், உலகக்  கிண்ண காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிறேஸிலுடன் மோத நோர்வே தகுதி பெற்றது. இந்த ஆட்டத்தில் எர்லிங் ஹாலண்ட் கடைசி நிமிடத்தில் வெற்றி கோலை அடித்தார்.

மான்செஸ்டர் சிட்டி வீரரான அவர், 86-வது நிமிடத்தில் மிக அருகில் இருந்து பந்தை தட்டிவிட்டார். பந்து மெதுவாக உருண்டு சென்று கோலாக மாறியது. இது இந்தத் தொடரில் அவரது ஐந்தாவது கோலாகும். உலகக்கிண்ண வரலாற்றில்  வரலாற்றில் நொக்-அவுட் சுற்றில் நோர்வே வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும்.

டல்லாஸ் நகரில் நடைபெற்ற இப்போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. ஆட்டத்தின் முதல் பாதியில் ஐவரி கோஸ்ட் அணி தொடர்ந்து தாக்குதல் நடத்தி  நோர்வே அணிக்கு அழுத்தம் கொடுத்தது. இருப்பினும், முதல் பாதி முடிவடைய 6 நிமிடங்கள் இருந்தபோது நார்வே அணியின் அன்டோனியோ நுசா, பந்தை அற்புதமாக வளைத்து கோல் கம்பத்தின் மேல் மூலைக்கு அனுப்பி நோர்வேக்கு 1-0 என்ற கணக்கில் முன்னிலை தேடித்தந்தார்.

இரண்டாவது பாதியில் ஐவரி கோஸ்ட் அணியின் மாற்று ஆட்டக்காரராக களம் புகுந்த அமத் தியாலோ ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். முதலில் நார்வே அணி அடிக்கவிருந்த உறுதியான கோலை கோல் கோட்டிற்கு அருகே தடுத்து நிறுத்தி காப்பாற்றினார். பின்னர், நிக்கோலஸ் பெபேயுடன் இணைந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், நார்வே தடுப்பாட்ட வீரர்களை ஏமாற்றி ஒரு சோலோ கோல் (Solo Goal) அடித்து போட்டியை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தார்.

போட்டி சமநிலையை நோக்கிச் சென்ற நிலையில், ஆட்டம் முடிய 4 நிமிடங்கள் மட்டுமே இருந்தபோது நோர்வேயின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலாண்ட் தனது அசத்தலான திறமையைக் காட்டினார். ஆஸ்கர் பாப் கொடுத்த பாஸை பெற்று பேட்ரிக் பெர்க் கோல் கம்பத்தை நோக்கி அனுப்பிய பந்தை, எர்லிங் ஹாலாண்ட் மிக நேர்த்தியாக கோலாக மாற்றி நார்வே அணியின் வெற்றியை 2-1 என உறுதி செய்தார். கூடுதல் நேரத்தில் ஐவரி கோஸ்ட் அணி கோல் அடிக்கப் போராடிய போதிலும் நோர்வேயின் தடுப்பாட்டம் அதனை முறியடித்தது.

ஐவரி கோஸ்ட் அணியின் அமத் தியாலோவின் அபாரமான ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது.

  

 

எம்பாப்வே இரட்டைக்கோல் வென்றது பிரான்ஸ்


 நியூயார்க் நியூ ஜெர்சியில்  சுவீடனை எதிர்த்து விளையாடிய பிரான்ஸ்  3-0 என்ற கோல் கணக்கில் எளிதாக வீழ்த்தி ,   உலகக்  கிண்ண  காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.  

முதல் பாதி ஆட்டம் முடியும் தறுவாயில் கைலியன் எம்பாப்பே முதல் கோலை அடித்தார். அதனைத் தொடர்ந்து, 65-வது நிமிடத்தில் மைக்கேல் ஒலிஸ், பிராட்லி பார்கோலாவுக்கு பந்தை வழங்க, இரண்டாவது கோல் அடிக்கப்பட்டது.

74-வது நிமிடத்தில் எம்பாப்பேவுக்கு ஓலிஸ் மற்றொரு கோலை அடிக்க உதவினார். இதன் மூலம், பட்டத்தை வெல்லும் தகுதி தனக்கு உண்டு என்பதை பிரான்ஸ் மீண்டும் ஒருமுறை நிரூபித்தது.     

இப்போட்டியில் அடித்த  இரண்டு கோல்களின் மூலம் உலகக் கிண்ண  வரலாற்றில் எம்பாப்பே தனது கோல்களின் எண்ணிக்கையை 18 ஆக உயர்த்தியுள்ளார். இதன் மூலம் லியோனல் மெஸ்ஸியின் 19 கோல்கள் என்ற சாதனையை நெருங்கியுள்ளார். மேலும், உலகக் கிண்ண நொக்கவுட் சுற்றுகளில் அதிக கோல்கள் (9 கோல்கள்) அடித்த வீரர் என்ற தனது சாதனையை எம்பாப்பே மேலும் நீடித்துள்ளார்.நான்கு போட்டிகளில் இது அவரது மூன்றாவது இரண்டு கோல்கள் ஆகும்.

தனது சக வீரர்களுக்குப் பல உதவிகளைச் செய்தபோதிலும், ஒலிஸால்  கோல் அடிக்கவில்லை.முதல் பாதியில் அவர் அடித்த அபாரமான பைசைக்கிள் கிக், கோல் கம்பத்தில் பட்டது.மைக்கேல் ஒலிஸ் ஐந்து கோல்களுக்கு உதவியுள்ளார்.

இந்தத் தொடரில் 6 கோல்களுடன் தங்கக் காலணி விருதுக்கான பந்தயத்திலும் அவர் முதலிடத்தில் உள்ளார்.  இந்தத் தொடரில் பிரான்ஸ் அணி விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று, 13 கோல்களை அடித்து, 2 கோல்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளது.

 80,663 ரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர். விரிவாக்கப்பட்ட 104-போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் மொத்த பார்வையாளர் எண்ணிக்கையை 5 மில்லியனுக்கும் அதிகமாக உயர்த்தியது.

ஜூலை 4 ஆம் திகதி நடைபெறும் அடுத்த சுற்றில் பிரான்ஸ், பராகுவேயை எதிர்கொள்ளும்.

  

 

40 வருடங்களின் பின்னர் நொக் அவுட் சுற்றில் வெற்றி பெற்ற மெக்சிகோ

 உலகக்  கிண்ண உதைபந்தாட்டத் தொடரின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில், ஈக்வடோர் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்சிகோ அணி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் உலகக் கிண்ணத் தொடரில்  தென் அமெரிக்க அணியை வெளியேற்றிய முதல் வட அமெரிக்க அணி என்ற வரலாற்றுச் சாதனையை மெக்சிகோ படைத்துள்ளது.   40 ஆண்டுகளில் முதல் முறையாக உலகக்கோப்பை நாக் அவுட் போட்டி ஒன்றில் வெற்றி பெற்று இருக்கிறது மெக்சிகோ அணி.

இடியுடன் கூடிய பலத்த மழையால் இந்தப் போட்டி தொடங்குவது 1 மணி நேரம் தாமதமானது. பின்னர் ஆட்டம் தொடங்கியதும் மெக்சிகோ அணி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. ஆட்டத்தின் ஆரம்பத்தில் 17 வயதான கில்பர்டோ மோரா கோல் அடிக்க முயன்றார். ஈக்வடோர் அணியின் ஜான் யெபோவாவின் முயற்சி கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியது. பின்னர், ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் ராபர்டோ அல்வராடோ கொடுத்த பாஸை பயன்படுத்தி ஜுலியன் குயினோனஸ் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில், குயினோனஸ் கொடுத்த துல்லியமான பாஸை ரவுல் ஜிமினெஸ் கோலாக மாற்றி மெக்சிகோவை 2-0 என முன்னிலை பெறச் செய்தார்.

இந்த உலகக்  கிண்ணத் தொடரில்  3 போட்டிகளில் கோல் அடித்த இரண்டாவது மெக்சிகோ வீரர் என்ற பெருமையை 29 வயதான ஜுலியன் குயினோனஸ் பெற்றுள்ளார். இதற்கு முன் 1998-இல் லூயிஸ் ஹெர்னாண்டஸ் இந்தச் சாதனையைச் செய்திருந்தார். இந்தத் தொடரில் விளையாடிய 4 போட்டிகளிலும் மெக்சிகோ அணி ஒரு கோல் கூட எதிரணிக்கு விட்டுக்கொடுக்காமல் (கிளீன் ஷீட்) தடுப்பாட்டத்தில் மிக வலுவாக உள்ளது.

2006-ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து அணிக்குப் பிறகு, உலகக் கோப்பையின் முதல் 4 போட்டிகளிலும் கோல் ஏதும் விட்டுக் கொடுக்காத இரண்டாவது அணி மெக்சிகோ ஆகும். அத்துடன் உலகக் கீண்ணத் தொடரில் கடந்த 15 போட்டிகளின் முதல் பாதியில் மெக்சிகோ அணி ஒரு கோல் கூட விட்டுக் கொடுக்காமல் புதிய சாதனை படைத்துள்ளது. 

ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் ஈக்வடோர் வீரர் பியரோ ஹின்காபி, மெக்சிகோவின் சாண்டியாகோ கிமினெஸிடம் பேசும்போது தனது வாயை மூடிக்கொண்டதற்காக விஏஆர் (VAR) பரிசோதனைக்குப் பின் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். 

ஜூலியன் குவினோன்ஸ் ஒரு கோல் அடித்தும், ஒரு கோல் அடிக்க உதவிசெய்தார்.

 

  

Tuesday, June 30, 2026

கூட்டணிக் கட்சிகளின் விமர்சனத்தைச் சமாளிப்பாரா முதல்வர் விஜய்?


 

சட்டசபையில் குட்டிக்கதை சொல்லி குட்டு வாங்கிய முதல்வர்.  கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனம்

எங்களுடைய திட்டங்களுக்கு ஸ்டிகர் ஒட்டுகிறது தவெககுற்றம் சாட்டுகிறது திமுக. onRiya 

அதிமுகவினரிடமிருந்து பறித்த பதவிகளை திரும்பக் கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி. 

தாய்மாமன் சீர் தங்க மோதிரம் திட்டத்துக்கு அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு

 

  தமிழக அரசியல் களத்ம் வழ்மையை விட அதிக சூடாக உள்ளதுஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கும்பிரதான எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையேயான அரசியல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறதுஇந்த நிலையில்சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் விஜய் எழுப்பிய விமர்சனக் குட்டிக்கதைக்குதிமுக தலைவர் மு..ஸ்டாலின் மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார்தவெக அரசுக்கு முட்டுக்கொடுக்கும் கட்சித்தலைவர்களும்  கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்குப் பதிலளித்த‌  முதல்வர்  விஜய் ஒரு குட்டிக்கதை சொன்னார்அந்தக்கதை ஸ்டானினை நேரடியாகத் தாக்குவதாக இருந்தது.  அப்போது திமுகவை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் அவர் ஒரு குட்டிக்கதையைக் கூறினார்அதில், "ஒரு ஊரில் பெரியவர் ஒருவர் வெயில் அதிகமாக இருக்கிறது என்பதற்காக கண்ணுக்கு மேல் கையை வைத்துக்கொண்டு யாரையோ தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்தார்அதைப் பார்த்த ஒரு சிறுவன் அவரிடம் சென்று, ‘என்ன தேடுகிறீர்கள்?’ என்று கேட்டான்அதற்கு அந்தப் பெரியவர், ‘தம்பிஉன்னுடைய அப்பா இங்கேதான் இருப்பார் என்று சொன்னார்கள்அதனால் தேடுகிறேன்ஆனால்எங்க உங்க அப்பாவையே காணோம்?’ என்று பதிலளித்தார்எனக் கூறி முதல்வர் விஜய் அரசியல் ரீதியாக விமர்சித்தார்.

திருமாவளவன்,  கொம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் முத்தரசன்  ஆகியோர் அதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர்.  எதிர்க் கட்சி வரிசையில் இருந்த எடப்பாடி குட்டிக்கதையைக் ரசித்துக் கேட்டார்

செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிரமின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லைஎதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கதுகுட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

திருவாரூரில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு..ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் இந்த விமர்சனத்திற்கு பதிலளித்தார்அவர் பேசுகையில், "‘எங்க உங்க அப்பாவைக் காணோம்’ என்று முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் குறிப்பிட்டிருக்கிறார்நான் சட்டமன்றத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும்என்றைக்கும் மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறேன்அப்பாவை நீங்கள் தேடும் இடத்தில் தேடாதீர்கள்அவர் மக்கள் மனதில் இருக்கிறார்நீங்கள் தேடும் இடத்தில் இந்த ஸ்டாலின் இருக்க மாட்டான்ஆனால் மக்கள் எங்கு தேடுகிறார்களோஅங்கு முதல் ஆளாக நிற்பான்என்றார்

 தமிழக முன்னாள் அமைச்சரும்திமுகவின் முக்கிய நிர்வாகிகளுள் ஒருவருமான ..வேலுவுக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில்   லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.  சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மொத்தம் 13 இடங்களில் இந்த சோதனை ஒரே நேரத்தில் தொடங்கி நடைபெற்றது

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ..வேலுவின் குடியிருப்புக்கு  அதிகாலையில் சென்ற இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்தங்களது சோதனையைத் தொடங்கினர்வீட்டின் நுழைவு வாயில்கள் மூடப்பட்டுவெளிநபர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படாத வகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.. அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகார்கள் மற்றும் சில திட்டப்பணிகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக‌ முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை மட்டுமின்றி..வேலுவுக்கு நெருக்கமானவர்கள்அவரது உறவினர்கள் மற்றும் அவருக்குத் தொடர்புடைய கல்வி நிறுவனங்கள்அலுவலகங்கள் என மொத்தம் 13 இடங்களில் இந்தச் சோதனை நீடித்ததுஆதாரங்களைக் கைப்பற்றியதாகவும். 40 இலட்சம் ரூபா பறிமுதல் செய்யப்பட்டாதாகவும் தெரிகிறது.

இந்தச் சோதனையை சட்டப்படி எதிர் கொள்ளப் போவதாக வேலு தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் முதல்வரைப் பார்த்து கேள்வி கேட்டதால்  தனக்கு சோதனை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


  தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்வரும் செப்டம்பர் 15-ஆம் திதி முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

ஏழைஎளிய குடும்பங்களைச் சேர்ந்த தாய்மார்களுக்கு உதவும் வகையிலும்அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த அதிரடித் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தகுதிபெறும் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா 1 கிராம் நிறை உள்ள‌ தங்க மோதிரம் இலவசமாக வழங்கப்படும்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் திகதி இத்திட்டம் மாநிலம் முழுவதும் முறைப்படி தொடங்கி வைக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன் பெற அரசு சில முக்கிய தகுதி நெறிமுறைகளை வகுத்துள்ளது:

தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்தாலுகா அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த தங்கம் வழங்கப்படும்.

குழந்தையின் தாய் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்இதற்கான முறையான இருப்பிடச் சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.

கர்ப்பிணிப் பெண்கள் தங்களது கர்ப்ப காலத்தின் போது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தங்களின் பெயர்களை முறையாகப் பதிவு செய்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழைநடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பிரசவத்திற்காகப் பெருமளவில் அரசு மருத்துவமனைகளையே நம்பியுள்ளனர்அவர்களுக்குப் பொருளாதார ரீதியாக ஆதரவளிக்கும் வகையில்தாய்மாமனின் சீர்வரிசையாக இந்த 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது.

இணையதளங்களில் இத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயேபொதுமக்கள் மத்தியில் இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறதுஇத்திட்டத்திற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் விரைவில் அரசிடமிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டம் தொடங்கவிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தவெகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலான இந்தத் திட்டத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் 755 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிசேரியன் மூலம் நடக்கும் பிறப்பு எனில் ரூ.2.5 லட்சம் வரை கட்டணம் வசூல் செய்கின்றனர்கட்டணம் அதிகம் என்றாலும்ஏழை எளிய குடும்பத்தினர் கூட தாய்-சேய் பாதுகாப்புக் கருதி தனியார் மருத்துவமனைகளையே நாடுகின்றனர்.

இந்நிலையில்,தங்க மோதிரம் வழங்குவதற்காக செலவு செய்யும் இந்த 755 கோடி ரூபாயைக் கொண்டு அரசு மருத்துவமனைகள் ஒவ்வொன்றிலும் தனியார் மருத்துவமனைகளைப்போல அனைத்து உயரிய வசதிகளையும் கொண்டபிரசவ வார்டுகளை உருவாக்கு வதோடு,தேவையான மருத்துவப் பணியாளர்களை யும் நியமிப்பது அனைத்துத் தரப்பினருக்கும் பயன் அளிப்பதாக அமையும்எனவேஅரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்  என திருமாவளவன் கோரிக்கை  விடுத்துள்ளார்.

மேலும்,சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் மு..ஸ்டாலின் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு இழந்ததை ஏளனம் செய்யும் வகையில் பேசியிருப்பது முதல்வர் என்னும் பொறுப்புக்குரிய மாண்புக்கு உகந்தது அல்ல.

கட்சி மேடைகளில் பேசும்போதுகூட தவிர்க்க வேண்டிய ஒன்றை,சட்டப்பேரவையில் பேசாமல் தவிர்த்திருக்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் சட்டப்பேரவைக்கான மரபையும் முதல்வர் என்னும் மகத்தான பதவிக்குரிய உயரிய மாண்பையும் பேணிப் பாதுகாக்கவேண்டும் எனவுத் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை மூலம் ஒரேநேரத்தில்,தவெக அரசின் திட்டத்திற்கும் விஜய்யின் சட்டமன்றப் பேச்சுக்கும் திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்திருப்பது அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.

தங்க மோதிரமாதரமான மகப்பேறு சிகிச்சையாஎன்று தமிழக அரசு தனது முன்னுரிமைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்கீழ் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் அளிக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்ஏற்கெனவே அவர் அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதுஇதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரேசேரக் கிளம்பியுள்ளது.

இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: 

பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளின் பிரசவ அறைகளை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிமுகவில் முக்கிய நிர்வாக மாற்றங்களை அறிவித்துள்ள எடப்பாடி பழனிசாமிமுன்னாள் அமைச்சர் எஸ்.பிவேலுமணியை துணைப் பொதுச்செயலாளராக நியமித்துள்ளார்எம் ஆர் விஜயபாஸ்கர்மணிகண்டன்அருண்மொழித் தேவன் ஆகியோர் கொள்கை பரப்பு இணைச் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்மேலும் பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கும் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தல் தோல்வியால் அதிமுகவில் உள்கட்சி பூசல் அதிகரித்ததுசட்டசபையில் விஜய் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவி சண்முகம்எஸ்பி வேலுமணி தலைமையில் 25 எம்.எல்.ஏக்கள் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய எம்.எல்.ஏக்கள் தனி அணியாக செயல்பட்ட நிலையில்தகுதி நீக்க நடவடிக்கையை தவிர்க்க மீண்டும் எடப்பாடியுடன் இணக்கமாக சென்றனர்

தனக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் பதவியை பறித்த எடப்பாடி புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்தார்அதேநேரத்தில்எடப்பாடி பழனிசாமி அணிக்கே மீண்டும் திரும்பிய எம்.எல்.ஏக்களுக்கு பழைய பதவியை கொடுக்க முடியாது என கைவிரித்தார்எஸ்பி வேலுமணிஎம்.ஆர்விஜயபாஸ்கர்நத்தம் விஸ்வநாதன் என முக்கிய தலைகளுக்கு கூட எடப்பாடி பழனிசாமி பழைய பொறுப்பை வழங்காமல் இருந்தார்இது அவர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது

 வேலுமணி உள்ளிட்டோரின் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்த நிலையில்மீண்டும் முக்கிய பொறுப்புகளை வழங்கியுள்ளார்கட்சியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக எடப்பாடி பழனிசாமி இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.