ரோயல் சலஞ்ச் பெங்களூர், ராஜஸ்டான் ரோயல்ஸ்
ஆகியவற்றுக்கு எதிராக பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டி மழைகாரணமாக கைவிடப்பட்டு இரண்டு
அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. காலதாமதமாக போட்டி ஆரம்பிக்கப்பட்டதால் ஐந்து ஓவர்
போட்டியாக மாற்றப்பட்டது. 13 போட்டிகளில் 10 ஆவது முறையாக கோலி, நாணயச்சுழற்சியில் தோல்வியடைந்தார். ராஜஸ்தான் பந்து வீச்சைத்
தேர்வு செய்தது. முதலில்
துடுப்பெடுத்தாடிய பெங்களூர் ஐந்து ஓவர்களில் ஏழு விக்கெற்களை இழந்து 63 ஓட்டங்கள்
எடுத்தது. ஏழு பந்து8களைச் சந்துத்த கோலி
25 ஓட்டங்களும்,நான்கு பந்துகளுக்கு முகம் கொடுத்த டிவில்லியஸ் 10 ஓட்டங்களும்
எடுத்தனர். நான்கு வீரர்கள் ஒற்றை
இலக்கங்களில் ஆட்டமிழந்தனர். மூவர் ஓட்டம் எதுவும் எடுக்கவில்லை.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் 3.2
ஓவர்களில் ஒரு விக்கெற்றை இழந்து 41 ஓட்டங்கள் எடுத்தபோது போட்டி தொடர முடியாத
வகையில் மழை பெய்ததால் போட்டி அகைவிடப்பட்டு இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி
வழங்கப்பட்டது. அதிகளவு ஓட்ட எண்ணிக்கையுடன் வெற்ரி பெற்று 12 புள்ளிகளுடன் முன்னணிக்குச் செல்ல விரும்பிய
ராஜஸ்தான் சிக்கலில் அகப்பட்டுள்ளது.
ஆனால், ராஜஸ்தான் பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால் ஹட்ரிக் சாதனை செய்தார்.
கோலி,டிவில்லியஸ், ஸ்டேய்ன் ஆகிய பிரபல வீரர்களை வீழ்த்து ஐபிஎல்லில் சாதனை
செய்துள்ளார்.
இந்த சீசனில் இது இரண்டாவது ஹட்ரிக். முன்னதாக
சையத் முஷ்டாக் ஹட்ரிக் சாதனை செய்தார். அது மட்டுமல்லாது கோலி,டிவில்லியஸ் ஆகிய
இருவரையும் தொடர்ந்து இரண்டு முறை ஆட்டமிழக்கச்செய்துள்ளார். கடந்த சீசனில் கோலி,
டிவில்லியஸ் ஆகிய இருவரும் ஸ்ரேயாஸ் கோபாலின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.அடுத்த
போட்டியில் ஹைதராபாத்தை வீழ்த்தினாலும் கோலியால் பிளே ஃஓவ் சுற்றுக்குச் செல்ல
முடியாது.
No comments:
Post a Comment