எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான தமிழக அரசின் தலைவிதியைத்
தீர்மானிக்கும் முடிவு 23 ஆம் திகதி வெளியாக உள்ள நிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகத்தின் மூன்று சட்ட சபை உறுப்பினர்களின் தகுதி நீக்கத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை
விதித்துள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் உறுதியான தலைமை இல்லாமல் அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகம் தடுமாறுகிறது. ஓ.பன்னிர்ச்செல்வத்தின் கையில் இருந்த முதல்வர் பதவி இருக்கும் வரை ஜெயலலிதா நிம்மதியாக இருந்தார்.
தமிழகமுதல்வர்
பதவி எடப்பாடி பழனிச்சாமியின் கைகளுக்குச் சென்ற பின்னர் தனது பதவியை காப்பாற்றுவதற்காக அவர் குறுக்கு
வழியால் காய் நகர்த்துகிறார். தமிழக சட்ட சபையில் 234 அங்கத்தவர்கள் உள்ளனர். அவர்களில்
18 அங்கத்தவர்களைத் தகுதி நீக்கம் செய்து அறுதிப்பெரும்பான்மையை தக்கவைத்துள்ளார் எடப்பாடி
பழனிச்சாமி. அந்தப் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் முடிந்து விட்டது. வழக்கு
நிலுவையில் இருந்த நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் எதிர் வரும் 19 ஆம் திகதி
நடைபெற உள்ளது. 22 சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் முடிவு தமிழக சட்டசபையின் தலைவிதியைத்
தீர்மானிக்கும் எனக் கருதப்படுகிறது. ஆகையால் தனது பதவியைக் காப்பாற்றுவதற்காக மேலும்
மூவரை தகுதி நீக்கம் செய்ய எடப்பாடி எடுத்த முடிவுக்கு ஸ்டாலின் முட்டுக்கட்டை போட்டுள்ளார்.
மாநில அசரைக் காப்பாற்றுவதற்காக சட்டத்தில் உள்ள சில சரத்துக்கள்
மூலம் தனது பதவியைக் காப்பாற்ற எடப்பாடி பழனிச்சாமி, சபாநாயகரின் துணையுடன் மேற்கொண்ட
முயற்சியை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுடன் ஸ்டாலின் இடை நிறுத்தியுள்ளார். சபாநாயகருக்கு
எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்கு ஸ்டாலின் முன்னறிவுப்புக் கொடுத்துள்ளார். அதேவேளை, சபாநாயகரின் செயற்பாட்டுக்கு
உச்ச நீதிமன்றம் மூலம் ஸ்டாலின், இடைக்காலத்தைடை வாங்கியுள்ளார். சபாநாயகரின் கையை
உச்ச நீதிமன்றம் கட்டிப்போடதால் மூவரைத் தகுதி நீக்கம் செய்ய முடியாத நிலை எழுந்துள்ளது.
அறந்தாங்கி, விருத்தாசலம், கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதி
சட்டமன்ற உறுப்பினர்களான ரத்தினசபாபதி,கலைச்செல்வம்,பிரபு ஆகியோர் தினகரனுக்கு ஆதரவாகச்
செயற்படுகிறார்கள். இதுவரை காலமும் அவர்கள்
மீது எதுவித நடவடிக்கையையும் எடப்பாடியின் அரசு செய்யவில்லை.தமிழக சட்ட மன்ற இடைத்தேர்தலில்
எதிர்பார்த்த வெற்ரியைப் பெறமுடியாது என்பதைத் தெரிந்துகொண்ட எடப்பாடி பழனிச்சாமி,
மூன்று சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்து பதவியை காப்பாற்ற முயற்சி செய்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தல், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில்
தினகரனுடன் இணைந்து பணியாற்றிய வீடியோ, புகைப்பட ஆதாரங்களுடன் ரத்தினசபாபதி,கலைச்செல்வம்,பிரபு
ஆகியோருக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நானும் ரெளடிதான் எஅன் வடிவேல் சொன்னதுபோல நாங்களும்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான். சசிகலாதான் பொதுச்செயலாளர். தினகரனும் எண்ணா
திராவிட முன்னேற்றக் கழகம் தான் என தகுதி நீக்க நோட்டீஸைப் பெற்றுக்கொண்ட மூவரும் தெரிவிக்கின்றனர்.
ரத்தினசபாபதி, கலைச்செல்வம் ஆகிய இருவரும் தகுதி நீக்க நோட்டீஸுக்கு எதிராக நீதிமன்றத்தை
நாடியுள்ளனர்.
அவசர வழக்காக எடுக்கப்பட்ட வழக்கின் பிரகாரம் தமிழக சபாநாயகரின்
செயற்பாட்டுக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் தான் மேலதிக விசாரணை
நடைபெறும் என்பதால் எடப்பாடிக்கு சிக்கல் எழுந்துள்ளது. எடப்பாடி பன்னீர்ச்செல்வத்துக்கு
எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த பன்னீர் உட்பட 11 உறுப்பினர்களை
எடப்பாடி தகுதி நீக்கம் செய்தார். அதனை எதிர்த்து பன்னீர்ச்செல்வம் தரப்பினர் தொடுத்த
வழக்கு நிலுவையில் உள்ளது. அதன் பின்னர் இருவரும் இருவரும் இணைந்ததால் பன்னீர்ச்செல்வம் குழு தகுதி நீக்கம்
செய்யப்படவில்லை.தினகரனின் ஆதரவாளர்கள் செய்த தவறைவிட கூடுதலான தவறை பன்னீர்ச்செல்வமும்
அவரது ஆதரவாளர்களும் செய்தனர். தினகரன் தரப்புக்கு தண்டனை கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி,
பன்னீரையும் அவரது ஆதர்வாளர்களையும் மன்னித்துவிட்டார். கட்சியும் இரட்டை இலைச்சின்னமும்
இல்லை என்றால் அரசியல் அரங்கில் காணாமல் போய்விடுவோம் என்ற உண்மையை அறிந்ததால் எடப்பாடியும்
பன்னீரும் ஒன்றாகச் செயற்படுகின்றனர்.
இரட்டை இலைச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமீம்
அன்சாரி, தேர்தல் பரப்புரையின் போது ராகுல் காந்தியுடன் ஒன்றாக மேடை ஏறினார். அவருகு
தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்படவில்லை. நானும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுபினர்தான்,
கழகத்தை எதிர்த்து செயற்படுகிறேன். எனக்கு ஏன் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பவில்லைஎனக்
கேட்கிறார் கருணாஸ்.
தமிழக சட்ட மன்றத்துக்கு குட்காவை எடுத்துச்சென்ற குர்ரச்சாட்டில்
ஸ்டாலின் உட்பட 21 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது.
அவர்களும் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்ற கருத்து உள்ளது. 23 ஆம் திகதி பின்னர்
பின்னர் மக்களின் தீர்ப்பு தெரிந்துவிடும்.
அதற்காகத்தான் தமிழக மக்களும் காத்திருக்கின்றனர்.
No comments:
Post a Comment