ஐபிஎல்
தொடரில் முதல் இடத்தில் இருக்கும் டெல்லி கெப்பிட்டல், இரண்டாவது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகியவற்றுக்கிடையே சென்னையில் நடைபெற்ற போட்டியில்
80 ஓடங்களா வெற்றி பெற்ற சென்னை முதல் இடத்துக்கு
முன்னேறியது. டெல்லி இரண்டாவது இடத்துக்கு
இறங்கியது. முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை
20 ஓவர்களில் நான்கு விக்கெற்களை இழந்து 179 ஓட்டங்கள் எடுத்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய
டெல்லி 16.2 ஓவர்களில் சகல விக்கெற்களையும்
இழந்து 99 ஒட்டங்கள் எடுத்தது.
டோனி
விளையாடாத இரண்டு போட்டிகளிலும் சென்னை தோல்வியடைந்தது. இந்த சீசனில் சென்னையில் சென்னை
அணி விளையாடும் கடைசிப் போட்டி என்பதால் காய்ச்சல் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கும்
டோனி விளையாடுவாரா இல்லையா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. மஞ்சள் சீருடையுடன்
டோனியைக் கண்டதும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
நாணயச்சுழற்சியில்
வெற்றி பெறும் அணி பந்து வீச்சைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என பிச் ரிப்போட்டில் சொல்லப்பட்டது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணித்தலைவர் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.
ஆரம்பமே சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. முதல் 10 ஒவர்கள் போட்டி முழுவது டெல்லியின் கைகளில் இருந்தது. சென்னை
வீரர்கள் தடுமாறினார்கள். ரசிகர்கள் அமைதியாகினர். அடுத்த 10 ஒவர்களில் சென்னையின் ராஜ்ஜியம் உச்சத்தைத்
தொட்டது.
டுபிளிசிஸ்,
வட்சன் ஜோடி களத்தில் இறங்கியது. டெல்லியின்
பந்து வீச்சைச் சமாலிக்க் முடியாமல் இருவரும் திணறினர். ஒன்பது பந்துகளைச் சந்தித்த
வ்டசன் ஓட்டம் எடுக்காது 3.2 ஓவரில் ஆட்டமிழந்தார் . அப்போது சென்னையின் ஓட்ட
எண்ணிக்கை நான்கு மட்டுமே. டுபிளிஸுடன் ரெய்னா
ஜோடி சேர்ந்தார். ரெய்னா அடித்தாட டுபிளிசிஸ் நிதானமாக விளையாடினார். இந்த ஜோடி 41 பந்துகளில் 50 ஒட்டங்கள் எடுத்தது. பிளே
ஃஓவ்வில் ஒரு விக்கெற்றை இழந்து 27 ஒட்டங்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. 10 ஓவர்களில் 58 ஓட்டங்கள் எடுத்தது
சென்னை. சென்னையால் 150 ஓட்டங்கள் எடுக்க முடியிமா
என்ற சந்தேகம் எழுந்தது. 160 ஓட்டங்கள் எடுத்தால் டெல்லியைக் கட்டுப்படுத்தலாம் என
வர்ணனையாளர் தெரிவித்ததால் சென்னை ரசிகர்கள்
பதற்றமாக இருந்தனர். 13 .3 ஓவர்கலில் 39 ஓட்டங்கள் எடுத்த டுபிளிசிஸ் ஆட்டமிழந்தார்.
ரெய்னா, டுபிளிசிஸ் ஜோடி 83 ஓட்டங்கள் எடுத்தது.
ரெய்னாவுடன்
இணைந்து விளையாட ராயுடு வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நேரத்தில் டோனி களம்
புகுந்தார். ரசிகர்கள் உற்சாகமானார்கள் அதன் பின்னர் போட்டி முடியும் வரை ரசிகர்களின்
உற்சாகம் அடங்கவில்லை. 59 ஒட்டங்களில் ரெய்னா ஆட்டமிழந்தார். ஐபிஎல் தொடரில் 37 அரைச்சதம்
அடித்த ரெய்னா, தவானுடன் இரண்டாவ்து இடத்தைப் பகிர்ந்துகொண்டார். 44 அரைச் சதங்களுடன்
முதல் இடத்தில் வானர் இருக்கிறார்.
14.5
ஓவர்களில் மூன்ரு விக்கெற்களை இழந்த சென்னை
102 ஓட்டங்கள் எடுத்தபோது டோனியுடன் ஜடேஜா
இணைந்தார். டோனியும் ஜடேஜாவும் போட்டிபோட்டு பவுண்டரி, சிக்சர் என அடுத்து ஓட்ட எண்ணிக்கையை
உயர்த்தினர். 10 பந்துகளைச் சந்தித்த ஜடேஜா
25 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 18.3 ஓவர்களில் நான்கு விக்கெற்களை இழந்து 145 ஓட்டங்கள் எடுத்த சென்னை 20 ஓவர்களில் 179 ஓட்டங்கள்
எடுத்தது. 22 பந்துகளுக்கு முகம் கொடுத்த டோனி நான்கு பவுண்டரி, மூன்று சிக்சர் அடங்கலாக ஆட்டமிழக்காமல்
44 ஓட்டங்கள் எடுத்தார். ராயுடு ஆட்டமிழக்காமல் ஐந்து ஓட்டங்கள் எடுத்தார். டோனி ஜடேஜா
ஜோடி 43 ஓட்டங்களும் டோனி, ராயுடு ஜோடி 43 ஓட்டங்களும் எடுத்தன.
180
என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய டெல்லி வீரர்கள்,
சென்னை வீரர்களின் பந்து வீச்சுக்கு முகம் கொடுக்கமுடியாது வரிசையாக ஆட்டமிழந்தனர்.
ஆரம்பத்தில் அடித்துவிளையாடிய டெல்லி வீரர்கள் பின்னர் சென்னையின் பந்து வீச்சுக்கு
முகம் கொடுக்க முடியாமல் வெளியேறினர். ஸ்ரேயாஸ் அய்யர் அதிக பட்சமாக 44 ஓட்டங்களும்
தவான் 19 ஓட்டங்களும் எடுத்தனர். ஏனையோர் ஒற்றை
ஒலக்கங்களில் ஆட்டமிழந்தனர். 3.2 ஓவர்கள் பந்துவீசிய இம்ரான் தாஹிர் 12 ஓட்டங்களைக்
கொடுத்து 4 விக்கெற்களை வீழ்த்தினார். மூன்ர்4உ ஓவர்கள் பந்து வீசிய ஜடேஜா ஒன்பது ஓட்டங்களை
விட்டுக்கொடுத்து மூன்று விக்க்கெற்களை வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருது டோனிக்கு வழங்கப்பட்டது.
சென்னையிடம்
தோற்றதால் டெல்லியின் இரண்டாவது இடம் பறி போகும் வாய்ப்பு உள்ளது. 16 புள்ளிகளுடன்
மூன்றாவது இடத்தில் இருக்கும் மும்பை வெற்றி பெற்றால் அது இரண்டாவது இடத்தைப் பிடித்துவிடும் டெல்லி மூன்றாவது
இடத்துக்குத் தள்ளப்படும். 14 புள்ளிகளுடன்
நான்காவது இடத்தில் இருக்கும் ஹைதராபாத், மும்பையுடனான போட்டியில் வெற்றி பெற்றால்
டெல்லிக்கு பாதிப்பு இல்லை. மும்பை,ஹைதராபாத்,பஞ்சாப்,கொல்கத்தா ஆகியவற்ரின் வெற்றி
தோல்வி, ஒட்ட சராசரி என்பன டெல்லியின் இடத்தைத் தீர்மானிக்க
உள்ளன.
No comments:
Post a Comment