Tuesday, October 1, 2024

ஆட்சியில் பங்கு கேட்கும் விடுதலைச் சிறுத்தைகள் செந்தில் பாலாஜியைக் கொண்டாடுகிறது திமுக


 

 ஆட்சியில் பங்கு கேட்கும் விடுதலைச் சிறுத்தைகள்

செந்தில் பாலாஜியைக்  கொண்டாடுகிறது திமுக 

மதுவிலக்கு மாநாட்டிற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு  அழைப்பு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பான வீடியோ வெளியீடு என்பனவற்றால் திராவிட முன்னேற்றக் கழகத்துகும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையே உரசல்கள் எழுந்துள்ளன. சிறுபொறியாக ஆரம்பித்த  சலசலப்பு விடுதலைச் சுருத்தைகளின்  பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனவினால்  உறுதிப் படுத்தப்படது. 

மதுவிலக்கு மாநாட்டுக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழைபீர்களா என திருமாவளவனிடம் பத்திரிகையாளர் கேட்ட போது யாரும் கலந்து கொள்ளலாம் என அவர் பதிலளித்தார். அந்த மூன்று சொற்கள் வதந் தீயாகப் பரவியது. கேட்டணியில் இருந்து வெளியேறும் திருமாவலவன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையப் போகிறார் என உலாவியது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மது விலக்கை வலியுறுத்தி மாநாடு நடத்தப்போவதாகவும் அதில் அ.தி.மு.கவும் கலந்துகொள்ளலாம் என செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன் பேசியதும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த மாநாடு தொடர்பான அழைப்பையும் தேர்தல் கூட்டணியையும் இணைத்துப் பார்க்க வேண்டாம் என அவர் குறிப்பிட்டாலும் இந்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.  திருமாவள‌வன் , ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியபின்னர் சலசலப்பு அடங்கியது

ஸ்டாலினின் தலைமையிலான கூட்டணி சிதறப்போகிறது என்று எடப்பாடி அடிக்கடி உச்சரிப்பதால்  அது வேகமாகப் பரவியது. அந்தச் செய்தி அடங்குவதற்கிடையில்  தமிழக ஆட்சியில் விடுதலைச் சிறுத்தைகள் பங்கு கேட்கும் விவகாரம் பூதாகரமாக எழுந்தது.  ஸ்டாலின் துணை முதல்வராகப்போகிறார்  என்ற செய்தி தினமும் தலைப்புச் செய்தியாகும் நிலையில் துணை  முதல்வராகும் தகுதி திருமாவளவனுக்கு இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கருத்து தெரிவித்துள்ளது.  

மதுவிலக்கு விவகாரத்தை வைத்து திராவிட முன்னேறக் கழக் கூட்டணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் அழுத்தம் கொடுக்கிறதா என்பதில் துவங்கி, கூட்டணியைவிட்டு வெளியேறுகிறதா என்பதுவரை பல்வேறு கருத்துகள் இதனைச் சுற்றி எழுந்தன. உள்ளூர் தொலைக்காட்சிகளும் இந்த விவகாரத்தை வைத்து விவாதங்களை நடத்தின.

செப்டம்பர் 14-ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியபோது, இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இதற்கு அவரே (திருமாவளவன்) விளக்கமளித்துவிட்டார், அதற்கு மேல் ஏதும் சொல்ல வேண்டியதில்லை என்று கூறினார்.

ஆனால், அதே நாளில், "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு" என்பது குறித்து திருமாவளவன் பேசிய வீடியோ ஒன்று அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. விரைவிலேயே அது நீக்கப்பட்டது. பிறகு மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, மீண்டும்  கூட்டணி குறித்த பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில்தான், திங்கட்கிழமையன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப்பேசியிருக்கிறார் திருமாவளவன். அதன் பின்னர் கூட்டணிக்குள் எந்த நெருடலும் இல்லை என அவர் அறிவித்தார். 1999 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் பங்கு வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் குரல் கொடுக்கின்றன. காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியனவுக்  கூட்டணியில் பங்கு வேண்டும் என அவ்வப்போது தெரிவித்தன.

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடந்துவரும் நவீனத்துவ மாற்றங்களுக்குப் பின்னணியில் இருந்து செயல்பட்ட பிரபல தேர்தல் வியூக நிறுவனமான வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் (Voice Of Commons) நிறுவனத்தின் தலைவரான ஆதவ் அர்ஜுனா அக் கட்சியின்  துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு நியமனம் செய்யப்பட்டார்.

கடந்த ஒரு வருடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில்  நிகழ்ந்து வரும் பல்வேறு மாற்றங்களுக்கும், திருமாவளவனுக்குப் பக்கபலமாகவும் செயல்பட்டு வருபவர் தான் Voice Of Commons நிறுவனத்தின் தலைவர் ஆதவ் ஆர்ஜுனா.

 திமுகவுக்குத் தேர்தல் வியூகங்கள் வகுத்துக் கொடுக்கும் பணிகளை மேற்கொண்டு வந்த ஆதவ் அர்ஜுனாவை விசிகவின் பக்கம் திருமாவளவன் அழைத்து வந்ததே கட்சியைப் பலப்படுத்தவும், கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி பயணம் செய்யவே என்று விசிக-வில் ஒரு பேச்சு இருந்து வந்தது. திருமாவளவனின் எண்ணத்தை நன்கு உணர்ந்தவரான ஆதவ் ஆர்ஜுனா, திருச்சியில் நடந்த மாநாட்டில், விசிக-வின் அடிப்படை உறுப்பினராக தம்மை இணைத்தும் கொண்டார்.

பின்னர் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மத்தியில் ஆதவ் அர்ஜுனாவின் திறமைகள் குறித்து திருமாவளவன் பல தருணங்களில் வெளிப்படையாகவே பேசியிருக்கிறார். கட்சியின் வளர்ச்சிக்குத் துடிப்பாகச் செயல்படக்கூடிய வகையில் இளைஞராகவும், அரசியல் நுண்ணறிவு கொண்டவராகவும், தேர்தல் வியூக நிபுணராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவராகவும் உள்ள ஆதவ் அர்ஜுனாவைத் தனது கட்சியின் செயல்பாடுகளில் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள திருமாவளவன் திட்டமிட்டார். அதன் அடையாளமாகவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பொறுப்பான துணை பொதுச் செயலாளர் பதவியை தற்போது ஆதவ் அர்ஜுனாவுக்கு வழங்கியிருக்கியுள்ளார் திருமாவளவன். 

வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் குறைந்தபட்சம் 3 தொகுதிகளையாவது திமுகவிடம் கேட்டுப் பெற வேண்டும் என்பதில் விசிக உறுதியாக உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த 3 தொகுதிகளில் 2 தனித் தொகுதிகளுடன் ஒரு பொதுத் தொகுதியும் தங்களுக்கு வழங்க வேண்டும் என்பதையும் விசிக, திமுகவிடம் உறுதியாக எடுத்துரைத்தது.  ஆனால் அது நடைபெறவில்லை.  இரண்டு தொகுதிகள் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால்  ஆதவ் அர்ஜுன எம்பியாகவில்லை.அவரைத் தேர்தலில்  வேட்பாளராக்குவதற்கு  திருமாவளவன் விரும்பியபோதும் திராவிட முன்னேற்றக் கழகம் விரும்பவில்லை

 அது ஆதவ் அர்ஜுனவின் தனிப்பட்ட கருத்து என விடுதலைச் சிறுத்தைகளின்  இரண்டாம் கட்டத் தலைவர்கள் கூறுகின்றனர். திருமாவின் ஒப்புதல் இல்லாமல் அவரால் அப்படிப்பேச முடியாது  இதுபற்றி திருமா  இன்னமும் வாயைத் திறக்கவில்லை.  இப்போதிக்கு  அடங்கி இருக்கும் இந்தப் பிரச்சனை தேர்தல் நேரத்தில் விஸ்வரூபம் எடுக்கு. அல்லது காணாமல் போய்விடும்.

ஸ்டாலினின் நம்பிக்கைகுருய தளபதியான செந்தி பாலாஜி பிணையில் விடுதலையானதை திராவிட முன்னேற்றக் கழகத்தினர்  கொண்டாடி வருகின்றனர்.  2023ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் திதி அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின்னர் அவருக்கு நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சையெல்லாம் நடந்தது. அதன் பிறகு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த 15 மாதமாக வெறும் விசாரணைக் கைதியாகவே தான் சிறையில் அடைபட்டிருப்பதாகவும், உடல் நிலை சரியில்லை என்றும் கூறி தனக்கு பிணை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மே  மாதம் மேல் முறையீடு மனுவை தாக்கல் செய்தார்.  இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்து பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பை   ஒத்திவைத்திருந்தது.

 உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்த்தரவிட்டது. அதன்படி தினசரி அமலாக்கத்துயுடன் பிணை வழங்கியது.  அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். சாட்சிகளைக் கலைக்கக் கூடாது, விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.இரண்டு நபர் உத்தரவாதத்தின்பேரில் செந்தில் பாலாஜி  பிணை  பெறலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் கிடைத்துள்ளதால் திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். கரூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் திமுகவினரர் பட்டாசு வெடித்தும் லட்டு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

செந்தில் பாலாஜியை அமைச்சராக்ககூடாது  என்பதில் தமிழக ஆளுநர் பிடிவாதமாக  இருந்தார். செந்தில் பாலாஜி அமைச்சராவதில் எந்தத் தடையும் இல்லை என்பதால்  இன்னொரு பிரச்சனைக்கு அடித்தளம் இடப்பட்டுள்ளது.

ரமணி

30/8/24

No comments: