9வது ஐ.சி.சி. மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டி ஐக்கிய அரபு எமரேட்ஸில் உள்ள சார்ஜா, துபாய் ஆகிய மைதானங்களில் ஒக்டோபர் 3ம் திகதி முதல் ஒக்டோபர் 20ம் திகதி வரை நடைபெற உள்ளது.
கடந்த
மகளிர் ரி20 உலகக் கிண்ண இறுதிப்போட்டியில்
தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி அவுஸ்திரேலியா சம்பியன் பட்டம் பெற்றது. 10 அணிகள் ஏ பி என இராண்டு
குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
குரூப்
ஏ இந்தியா,
அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் , இலங்கை .
குரூப்
பி இங்கிலாந்து,
ஸ்காட்லாந்து, மேற்கு இந்தியா,பங்களாதேஷ் , தென்னாப்பிரிக்கா .
மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தை அதிக முறை வென்ற நாடு என்ற பெருமையை அவுஸ்திரேலியா தன்வசம் வைத்துள்ளது. 8 முறை நடைபெற்றுள்ள மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியா 6 முறை சம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. இங்கிலாந்து, மேற்கு இந்தியா ஆகியன தலா 1 முறை வெற்றி பெற்றுள்ளன.
No comments:
Post a Comment