Tuesday, August 19, 2025

அமெரிக்க ஓபனில் மூத்த வீராங்கனையான வீனஸ்


 

  இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு அமெரிக்க ஓபனில் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸுக்குத் திரும்பும் வீனஸ் வில்லியம்ஸ் , புதன்கிழமை 45 வயதில் ஃப்ளஷிங் மெடோஸில் ஒற்றையர் பிரிவில் 

சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் கூற்றுப்படி, 1981 ஆம் ஆண்டு ரெனீ ரிச்சர்ட்ஸ் 47 வயதாக இருந்த பிறகு, இந்தப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் நுழைந்த மிக வயதான வீராங்கனையாக  வீனஸ் ர் இருப்பார்.

அடுத்த வாரம் நடைபெறும் கலப்பு இரட்டையர் போட்டிக்காக வில்லியம்ஸுக்கு ஏற்கனவே அமெரிக்க டென்னிஸ் சங்கத்தால் வைல்ட் கார்டு நுழைவு வழங்கப்பட்டது. ஒற்றையர் போட்டிகள் ஆகஸ்ட் 24 அன்று நியூயார்க்கில் தொடங்குகின்றன.

2000 , 2001 ஆம் ஆண்டுகளில் நடந்த அமெரிக்க ஓபன் உட்பட ஏழு முக்கிய ஒற்றையர் சம்பியன்ஷிப்களுக்கு அவர் சொந்தக்காரர் - மகளிர் இரட்டையர் பிரிவில் மேலும் 14 சம்பியன்ஷிப்கள், அனைத்தும் அவரது தங்கை செரீனாவுடன் வென்றது, மேலும் கலப்பு இரட்டையர் பிரிவில் இரண்டு. 2022 அமெரிக்க ஓபனில் விளையாடிய பிறகு செரீனா 23 ஸ்லாம் ஒற்றையர் கோப்பைகளுடன் ஓய்வு பெற்றார்.

மூத்த வீராங்கனையான  வீனஸ் வில்லியம்ஸ் கடைசியாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 2023 அமெரிக்க ஓபனில் பங்கேற்று முதல் சுற்றில் தோல்வியடைந்தார். 2019 முதல் அவர் அங்கு ஒற்றையர் போட்டியில் வெற்றி பெறவில்லை.

  கிளெர்வி நுகௌனோவ், ஜூலியட்டா பரேஜா, கேட்டி மெக்னலி, வலேரி குளோஸ்மேன், அலிசா அஹ்ன், ஓய்வு பெறுவதற்கு முன்பு தனது கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடும் பிரான்சின் கரோலின் கார்சியா , அவுஸ்திரேலியாவின் டாலியா கிப்சன் ஆகியோரும்  மகளிர் பிரிவில்  வைல்ட் கார்ட் பெற்றுள்ளனர்

No comments: