Thursday, January 24, 2008

சென்று தான் பாருங்களேன்



ஆசைக்கனவுகளுடன்
அரண்மனை புகுந்தவள்
சந்தோஷ நினைவுகளுடன்
வாழ்க்கையை சுமந்தவள்

தோசம் புகுந்து
சந்தோஷம் இழந்தாள்
வாசம் பிடித்தனர் சிலர்
சகவாசம் யாதென தேடினர்

சுடச்சுட செய்திகள்
வண்ணப்படங்களுடன்
சுதந்திரமாய் திரிந்தவளை
சுற்றியே வந்தனர்

பரபரப்பாக செய்தி போட
பம்பரமாய் சுழன்றனர்
தங்குமிடம் தேடி
ஏங்கியே தொடர்ந்தனர்
இப்போது....
இருக்குமிடம் தெரியும்
சென்றுதான் பாருங்களேன்.

தினக்குரல் 7.9.1997

No comments: