Friday, July 18, 2008
முஷாரப்பின் இரட்டைவேடம்
இராணுவச் சீருடையுடன் ஜனாதிபதியாக கோலோச்சும் முஷாரப்பின் இராணுவச்சீருடையைக் களையும்படி உலகெங்கிலும் இருந்து கோரிக்கை விடப்படுகிறது. அந்தக் கோரிக்கைகளுக்கு செவி மடுக்காது இராணுவச் சீருடையுடன் நாட்டை ஆட்சி செய்து வருகிறார் முஷாரப்.
இரத்தம் சிந்தாத இராணுவப் புரட்சியின் மூலம் 1999 ஆம் ஆண்டு நவாஸ் ஷெரீப்பின் அரசை அகற்றிவிட்டு இராணுவ ஆட்சியை ஏற்படுத்தினார் ஜெனரல் முஷாரப். இராணுவ ஆட்சியினால் நாட்டைக் கட்டிöயழுப்ப முடியாது என்பதை எதிர்க்கட்சிகள் கூறிய போதும் அதனை பொருட்படுத்தாது தன்னை எதிர்ப்பவர்களை அடக்கும் நடவடிக்கையில் முனைப்புக் காட்டினார் முஷாரப்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், பெனாசீர் பூட்டோ ஆகிய இருவரும் தமது
தாய்நாட்டுக்கு வரமுடியாத நிலையில் உள்ளனர். முஷாரப்பை எதிர்த்து அரசியல் நடத்த முடியாதுள்ளதால் அவர்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டு ஜனநாயகத்துக்காகப் போராடுகின்றனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் அரசி
யல் வாதியுமான இம்ரான்கான் முஷாரப்பை எதிர்த்து அரசியல் நடத்த முடியாத நிலை
இருப்பதால் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் ஜனநாயகம் இல்லை என்பதை உலக நாடுகள் அறிவித்து வந்த நிலையில் தேர்தல் ஒன்றை நடத்த முஷாரப் முன்வந்தார். 2002 ஆம் ஆண்டு எதிர்க்கட்சிகள் பலவீனமான நிலையில் உள்ள வேளையில் தேர்தல் ஒன்றை நடத்தி தன்னைத்தானே
ஜனாதிபதியாக்கினார். முஷாரப் ஜனாதிபதியானதும் பாகிஸ்தானின் பிரச்சினைகள் மேலும் அதிகரித்தன. முஷாரப்பை எதிர்த்து அரசியல் நடத்துவதற்காக ஷெரீப்பும், பெனாசீரும் வெளிநாட்டில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரான நவாஸ் ஷெரீப் 30 ஆம் திகதி நாடு திரும்பப் போவதாக அறிவித்துள்ளார். முஷாரப் பினால் பதவியிலிருந்து அகற்றப்பட்டு தாய்நாட்டை விட்டு தப்பி ஓடிய நவாஸ் ஷெரீப் மீண்டும் பாகிஸ்தானில் கால்பதித்தால் அவரின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள். ஆனால் அவரின் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி முஷாரப்பின் அரசு அனுமதியளிப்பது சந்தேகம். உயர் நீதிமன்ற நீதிபதி இட்திகார் சௌத்திரி யை ஜனாதிபதி முஷாரப் பதவி நீக்கம் செய்ததனால் ஏற்பட்ட வன்செயல்கள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. ஜனாதிபதி முஷாரப்புக்கு எதிராகவும் இப்திகார் சௌத்திரி
க்கு ஆதரவாகவும் பல நீதிபதிகள், தமது பதவியை இராஜினாமாச் செய்தனர். வக்கீல்கள் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்செய்தனர்.
இந்தக் கலவரங்களினால் பலர்கொல்லப்பட்டனர். வன்செயல்களினால் பாகிஸ்தானின் மக்கள்
நிம்மதி இழந்துள்ளனர். ஜனாதிபதி, இராணுவத் தளபதி ஆகிய இரு பதவிகளில் ஒன்றை முஷாரப் விட்டு விட வேண்டும் என்ற அழுத்தம் உலகில் இருந்து எழுந்துள்ளது. இராணுவ சீருடை எனது இரண்டாவது தோல் என்று கூறிய ஜனாதிபதி முஷாரப் இரண்டு பதவிகளை
யும் கெட்டியாகப் பிடித்துள்ளார்.
இராணுவத் தளபதியும் ஜனாதிபதியும் வெவ்வேறானவர்களாக இருக்க வேண்டும் என்றே அமெரிக்காவும் விரும்புகிறது. அமெரிக்காவின் விருப்பத்தை நிறைவேற்ற முஷாரப் முன்வர
மாட்டார். அவரின் உடலிலே இராணுவ இரத்தம் ஓடுகிறது. ஜனாதிபதி முஷாரப்புக்கு எதிராக
பாகிஸ்தானில் ஆங்காங்கே கலவரங்கள் ஏற்படுகின்றன. கலவரங்களை அடக்குவதற்கு கடுமையான சட்டங்களைப் போட முடியாத நிலையில் முஷாரப் உள்ளார். முதலாவது, இரண்டாவது உலகப் போரின் போது எதிரெதிர் அணியில் இருந்து யுத்தம் புரிந்த நாடுகள்
அனைத்தும் ஒற்றுமையாகி விட்டன.
ஒரே நாடாக இருந்து பிரிந்த இந்தியாவும், பாகிஸ்தானும் எதிரிகளாகவே இருக்கின்றன. அண்டைநாடுகளுடனும் பாகிஸ்தான் சுமுகமான உறவுகளைக் கொண்டிருக்கவில்லை. இலங்கையுடன் பாகிஸ்தான் நெருங்குவதை இந்தியா விரும்பவில்லை. இலங்கைக்கு
பாகிஸ்தான் உதவ முன்வரும் வேளைகளில் இந்தியா தலையிட்டு தனது பங்களிப்பையும் இலங்கைக்கு வழங்கியது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பூட்டோவின் வரவு பாகிஸ்தானில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. இரட்டை வேடத்திலிருந்து முஷாரப் மாறப்
போவதில்லை.
ரமணி மெட்ரோநியூஸ் 28 07 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment