Friday, August 2, 2013

நெஞ்சினில் நிறைந்த நினைவு!


   கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் ஓட்டோ நின்றதும் கையில் பொத்தி வைத்திருந்த காசைச்சாரதியிடம் செலுத்தி விட்டு மிச்சக் காசை எதிர்பார்க்காது பாக்குகளைத் தூக்கிக்கொண்டு அவசரமாகப் புகையிரத நிலையத்தினுள் ஓடினான் வேந்தன்.
    வவுனியா நோக்கிச் செல்லும் புகையிரதம் தயாராக நின்றது.இரண்டாம் வகுப்பு உறங்கலிருக்கையினுள் ஏறிய வேந்தன் தனது இலக்கத்தைத் தேடினான். பலர் இருக்கையில் அமர்ந்திருந்தனர்.வழி அனுப்ப வந்தவர்களின் இரைச்சல் அதிகமாக இருந்தது.கையிலும்,தோழிலும் பாக்குகளைச் சுமந்த படி தனது இலக்கத்துக்குரிய இடத்தை அடைந்தான்.அவன் எதிர்பார்த்தது போன்று யன்னலோரம் கிடைத்தது.
    பாக்குகளை மேலே வைத்து விட்டு ஆசுவாசமாக இருந்த வேந்தன் தனக்கு முன்னால் இருந்தவரை ஏறிட்டு நோக்கினான்.அவரின் ண்கள் கொவ்வைப்பமாகச் சிவந்திருந்த‌.வேந்தனைப் பார்த்தஅவர் மெதுவாகச் சிரித்தார்.வேந்தனும் வேண்டா வெறுப்பாகச் சிரித்தான்.
    காலையில் எழும்பத் தாமமானதால் தேனீர் கூடக் குடிக்காமல் ஓடிவந்தனான்.இவன் காலங்காத்தாலயே ண்ணி அடிச்சுப் போட்டு ந்திருக்கிறான்.காலையிலை அடிச்சானோ இல்லை இரவு அடிச்சது முறியவில்லையோ எனத் தெரியாது குமுறினான் வேந்தன்.யில் மெதுவாகத் தொடங்கியது.
"என்னம்பி க்கயோசிக்கிறியள் போலை?" முன்னால் இருந்தர் தையை ஆரம்பித்தார்.
"இல்லை" எனச்சமாளித்தான் வேந்தன்.
"ம்பி யாழ்ப்பாணமோ?"
"ஓம்"
"யாழ்ப்பாணத்திலை எவம்?"
"ராச்சி"
"வடமராச்சியோ? நானும் வடமராச்சி தான்.வடமராச்சியிலை எவடம்?"

"கரவெட்டி"

"கரவெட்டியோ நானும் கரவெட்டி தான்.கரவெட்டியிலை எவடம்?"

"கரவெட்டி கிழ‌க்கு"

"நான் கரவெட்டி வடக்கு"

   விடுத்து விடுத்து கேள்வி கேட்பவர்களை வேந்தனுக்குப் பிடிக்காது.அடுத்து ஏதாவது வில்லங்கமான கேள்வி கேட்டால் முகத்தில் அடித்தது போல் பதில் சொல்லத் தயாரானார் வேந்தன்.
    "தம்பி, நான் அவுஸ்திரேலியாவிலிருந்து வாறன். அவுஸ்திரேலியாவுக்குப் போய் இருவது வருசமாச்சு.இப்பத்தான் இலங்கைக்கு வாறன்.என்னைக் கூட்டிக்கொண்டு போறதுக்கு ஊரிலை இருந்து சொந்தக்காரர் வான் கொண்டு ந்தவை.சாமான் எல்லாத்தையும் வானிலை போட்டுட்டு நான் யிலிலை வுனியா போய் அங்கை இருந்து ஸ்ஸிலை ஊருக்குப் போகப்போறன்."
    புகைவண்டி வேகம் பிடித்தது.வேந்தனுக்கு முன்னால் இருந்தர் ன்னலினூடாகவெளியே பார்த்தார்.வானளாவிய கட்டங்களையும் புதியவாகங்களையும் பார்த்து எல்லாமே மாறிப்போச்சு எனமுணுமுணுத்தார். இளநீர் விற்பர் அருகே ந்தபோது இளநீர் ஒன்றை வாங்கி வேந்தனிடம் கொடுத்தார்.வேந்தன் வேண்டாம் என்று றுத்தபோதும் வில்லங்கமாகக் கையில் திணித்தார்.மேலும் இரண்டு இளநீர்களை வாங்கி அருகில் இருந்தரிடம் ஒன்றைக் கொடுத்து விட்டு தானும் ஒன்றைக் குடித்தார்.
    காலையில் ஒன்றும் குடிக்காது வெறும் யிற்றுடன் வந்தவேந்தனுக்கு இளநீர் தேவார்மிதம் போலஇருந்தது.இள்நீர் குடித்து முடிப்பதற்கிடையில் டை விற்பர் அருகே ந்தார்.நூறு ரூபா கொடுத்து டை வாங்கினார் முன்னால் இருந்தர்.இளநீர் கோம்பையை மூவரும் ன்னலால் எறிந்தர்.வேந்தனின் முன்னால் டையை நீட்டினார்.டையை எடுப்பற்குத் ங்கினான் வேந்தன்.

"கூச்சப்படாம எடுங்கம்பி.வெட்டி ரைக்கும் நாங்கஒன்டாத்தான் போகவேணும்."

வேந்தன் ஒரு டையை எடுத்தான்.அவரின் ற்புறுத்தலால் இன்னொரு டையை எடுத்தான்.

"சொந்தகாரரோடை வானிலை போயிருக்கலாம் தானே?" து ந்தேகத்தக் கேட்டான் வேந்தன்.

     "வானிலை போறதென்டால் லிலை போகேலாதாம்.வெய்யிலாம். எங்கடை ஆக்களுக்கு சொகுசுவாழ்க்கை பிடிச்சுப்போச்சு.ஊரியானாலையும், கிளாலியாலையும் ந்து போனதை ந்து போச்சினம்.அவையோடை போனா சாப்பிடுறதுக்கு பெரியகோட்டலிலை நிப்பாட்டுவினம்.அவுஸ்திரேலியாவிலை குடிச்சகொக்ககோலாவைத் தான் வேண்டித்தருவினம்.அவையோடை போனால் இந்தஇளனியும் டையும் கிடைச்சிராது.வீட்டை போறதுக்கிடையிலை கிடைக்கிறஎல்லாத்தையும் வேண்டிச் சாப்பிடுவம்.முறுகண்டிக் ச்சானைப் போலை உலத்திலை என்னகிடக்கு சொல்லு பாப்பம்?" என நீண்டதொரு விளக்கம் கொடுத்தார்.
      வேந்தன் அவரை உற்றுப்பார்த்தார்.வெளிநாட்டிலிருந்து ந்தற்கானஎந்தவிதமானஅடையாளமும் அவரிடம் இல்லை.ழுத்து நிறையச் ங்கிலி, விரல்களில் மோதிரம்,மினுமினுக்கும் கைக் டிகாரம், விலை உயர்ந்தஉடை என்றவெளி நாட்டுமோகம் அவரிடம் இல்லை. டுத்தக் குடும்பஸ்ரைப் போன்றே அவர் இருந்தார். அவரைப்பற்றி வேந்தன் ணித்ததெல்லாம் விடு பொடியாகின‌.
      வேந்தனுக்கு முன்னால் இருந்தர் தோளிலிருந்தபாக்கினுள்ளிருந்து ஒரு அல்பத்தை வேந்தனிடம் கொடுத்தார்.அப்போது பாடசாலிச் சீருடை அணிந்தஅழகியயுவதியின் ம் கீழேவிழுந்தது. அந்தப்பத்தைப் பார்த்து வேந்தனின் உடல் டுங்கியது.புகைவண்டியின் வேகத்தை விடஅதிகமாகவேந்தனின் இதம் த்து.கீழே விழுந்தத்தை எடுத்து இரண்டு ண்களிலும் ஒற்றியஅவது செய்கை வேந்தனுக்கு வினோதமாகத் தெரிந்தது.
      "என்ரை தெய்வம்..... என்ரை தெய்வம்.....என்ரை தெய்வத்துக்கு த்தியம் செய்ததாலை தான் நான் உயிரோடை இருக்கிறன்.இல்லாட்டி எப்பவோ ற்கொலை செய்திருப்பேன்."
       வேந்தன் அவரை உற்றுப் பார்த்தார்.சிவந்தண்கள் மேலும் சிவப்பாகின‌. அவர் ண்களில் நிறைந்தண்ணீர் ன்னத்தில் ழிந்தது. யார் இவன், எதற்காகஈஸ்வரியின் த்தை வைத்திருக்கிறான். வேந்தனின் சொந்தச்சாள் ஈஸ்வரி. ஈஸ்வரியை இவருக்கு எப்படித் தெரியும்? எனமூளையைப் போட்டுக் குழப்பினான் வேந்தன்.
          "என்ன தம்பி பேயறைஞ்சது போலை பாக்கிறியள்? பள்ளிக்கூடப் பிள்ளை எப்படித் தேவதையானாள் என்டு யோசிக்கிறியளோ? இந்த தெய்வம் ஒரு தேவதை.என்ரை காதல் தேவதை.சாகமாட்டேன் என்டு சொன்ன சத்தியத்தாலை ஒன்டிக் கட்டையா உயிரோடை இருக்கிறேன்.என்ரை பெயர் நந்தகுமார்."
     நந்தகுமார் என அவர் கூறியதும் தன்னையும் அறியாமல் நந்தகுமார் என முணுமுணுத்தான் வேந்தன்.புகைவண்டிக்கு இணையாக சிறிது தூரம் ஓடிக்குரைத்த நாய் களைத்துப்போய் நின்றது.ஈஸ்வரியின் வீட்டு நாய் விடாது குரைத்ததும் வீட்டுக்கு வந்த கள்ளனைத் துரத்தியதும் வேந்தனுக்கு ஞாபகத்துக்கு வந்தன.
     ஈஸ்வரியின் வீட்டுக்கு திருடன் வந்தபின்பு அவள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரித்தன.ஈஸ்வரியும் வேந்தனும் ஒரே பாடசாலையில் தான் படிக்கிறார்கள்.
ஈஸ்வரி உயர்தரத்திலும் வேந்தன் எட்டாம் வகுப்பிலும் கல்வி கற்கிறார்கள். பாடசாலைக்குச் செல்வதற்கு ஈஸ்வரியின் வீட்டுக்கு வேந்தன் சென்றபோது ஈஸ்வரி இன்று பாடசாலைக்கு மாட்டா எனஅவரின் அண்ணன் சொன்னான்.
     ஒருவாரத்தின் பின் அண்ணனுடன் சைக்கிளில் பாடசாலைக்குச் சென்றாள் ஈஸ்வரி.பாடசாலை முடிந்ததும் அண்ணன் வந்து கூட்டிச்சென்றான். ஈஸ்வரியின் வீட்டு நாய் குரைத்ததும் ப்பனும் அண்ணனும் ரோச்லயிற்றுடன் வெளியே வந்து விடுவார்கள்.ஈஸ்வரி எதிர் பார்த்தது போல் பரீட்சை முடிவு இல்லாததனால் அவளைப் பாடசாலையிலிருந்து நிறுத்திவிட்டார்கள்.நந்தகுமார் என்பவனை ஈஸ்வரி காதலித்ததும், நாய் குரைத்த அன்று ஈஸ்வரி அவனுடன் ஓடிப் போகத் திட்டமிட்டிருந்ததும் நீண்ட நாட்களின் பின்பே வேந்தனுக்குத் தெரிய வந்தது.அவர்களின் காதலுக்கு சாதிப்பிரச்சினை தான் தடையாக இருந்தது.நந்தகுமார் உயர் சாதி என்பதால் இரண்டு வீட்டாரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
       பெற்றோரின் மிரட்டலால் மனம் மாறிய ஈஸ்வரி தூரத்து உறவினரை மணந்தாள்.மூன்று வருடங்களில் ஈஸ்வரியின் குடும்பம் கனடாவில் குடியேறியது.ஈஸ்வரியின் திருமணத்தின் பின் நந்தன் பற்றிய நினைவுகளை வேந்தன் மறந்து விட்டான்.சிறியவயதில் தான் தேடிய நந்தன் தன் முன்னாஇ இருப்பதை வேந்தனால் நம்பவே முடியவில்லை.
       ஈஸ்வரி நந்தனைக் காதலித்ததை ஊரில் உள்ள பலர் மறந்து விட்டனர். நந்தன் இன்னமும் ஈஸ்வரியை மற்க்கவில்லை.கனடாவில் கார் விபத்தில் ஈஸ்வரி இறந்தது தெரியாதந்தன் அவள் உயிரோடு இருப்பதாகநினைத்து கிழ்ச்சியுடன் இருக்கிறான்


சூரன்..ரவிவர்மா
யாதும் 2012

No comments: