சினிமாஆரம்பமானதிலிருந்துஇன்றுவரைதிரைஉலகைஅலங்கரித்த ஜோடிகள்
எண்ணற்றவை. தியாகராஜ பாகவதர்,ரி.ஆர்.ராஜகுமாரிஜோடியாக நடித்த "ஹரிதாஸ்" போன்று மூன்று தீபாவளி
கண்ட திரைப்படம்இன்று
வரைஎதுவுமே இல்லை. பி.யு.
சின்னப்பாவும் கண்ணாம்பாவும் ஜோடியாக நடித்த "கண்ணகி",
"மங்கையற்கரசி" போன்ற படங்கள் வெற்றி
பெற்றபின் இந்த ஜோடி ரசிகர்களின்
மனதில் இடம் பிடிக்கத்தொடங்கியது.1946 ஆம் ஆண்டு
அறிமுகமான பானுமதியுடன் ஜோடி சேருவதற்கு இருவருமே
போட்டி போட்டனர்.
ரி.ஆர்.ராஜகுமாரி,கே.மாலதி,ஜி.சகுந்தலா பி.கே.சரஸ்வதி, ஸ்ரீ
ரஞ்சனி,பி,எஸ். சரோஜா,அஞ்சலிதேவி என்று பலருடன் எம்.ஜி.ஆர் ஜோடி சேர்ந்து
நடித்தார்." மருத
நாட்டு இளவரசி","நாம்" ஆகிபடங்களில் நடித்த
வி.என்.ஜானகியையேஎம்.ஜி.ஆர்.தனதவாழ்க்கைத்துணையாகத்தேர்ந்தெடுத்தார்.
தேசிய
விருது பெற்ற முதல்
தமிழ்த்திரைப்படமான் "மலைக்கள்ளன்" என்றபடத்தின்மூலம்எம்.ஜி.ஆருடன்
ஜோடிசேர்ந்தார் பானுமதி."அலிபாபாவும்
நாற்பது திருடர்களும்","மதுரை வீரன்","காஞ்சித்தலைவன்","கலை அரசி"
ஆகிய படங்களில் இந்த ஜோடி
கலக்கியது.பானுமதிக்குப்பின்னர் எம்.ஜி.ஆருடன் ஜோடிசேர்ந்த
நடிகைகள்
அனைவரும் பேசப்பட்டன.சில அரசபடங்களில் பத்மினி
ஜோடி சேர்ந்தார்.
ர்
"நாடோடிமன்னன்"மூலம்எம்.ஜி.ஆருடன்அறிமுகமானார்
சரோஜாதேவி."எங்கவீட்டுப்பிள்ளை","திருடாதே","அன்பே வா","பெற்றால்தான்
பிள்ளையா"போன்ற வெற்றிப்படங்களில் இந்த
ஜோடி பவனி
வந்தது. தேவர்
பிலிம்ஸின் "தா" வரிசைப்படங்கள் இந்த
ஜோடியின் சிருங்கார நடிப்பில் பிரபல்யமாகின.
"ஆயிரத்தில் ஒருவன்"மூலம் எம்.ஜி.ஆருடன்
இணைந்த ஜெயலலிதா,
சினிமா அரசியல்இரண்டிலும்இணைவதும்பிரிவதுமாக இருந்தார்."அடிமைப்பெண்","மாட்டுக்கார வேலன்" போன்ற
வெள்ளி விழாப்படங்களின் மூலம்
புகழ் பெற்ற இந்த
ஜோடி 28 படங்களில் ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது.
எம்.ஜி.ஆரும் கே.ஆர்.விஜயாவும்
ஒரு சில குடும்பப்படங்களில்
ஜோடியாக நடித்தார்கள்.
நடிகையர்
திலகம் என
புகழ்பெற்ற சாவித்திரி மூன்று படங்களில்மாத்திரம்
எம்.ஜி.ஆருடன்
நடித்தார்."உலகம் சுற்றும்
வாலிபன்","ரிக் ஷாக்காரன்","இதயக்கனி","ராமன் தேடியசீதை","மதுரையை மீட்ட
சுந்தரபாண்டியன்"போன்ற படங்களின் மூலம் மஞ்சுளாவும்
லதாவும் எம்.ஜி.ஆரின் திரைஉலக இறுதி அத்தியாயத்தை நிறைவு செய்தவர்களாகப் பரிணமிக்கின்றனர்.
சிவாஜியின் இரண்டாவது
படமான "பணம்" என்ற படத்திலிருந்து
"லட்சுமி வந்தாச்சு" வரை 38 படங்களில் அவருடன் ஜோடியாக நடித்தவர் பத்மினி.காதல்,சோகம்,நகைச்சுவை
என நவரசங்களையும் போட்டி போட்டு வழங்கிய இந்த
ஜோடி தமிழ்த்திரையை ஆக்கிரமித்தது போன்று வேறு எந்த ஜோடியும் ஆக்கிரமிக்கவில்லை.இந்த
ஜோடியின் புகழைப்பற்றிப்பேசுவசுதற்கு
"தில்லானா மோகனாம்பாள்" ஒன்றுமட்டும் போதும்."கள்வனின் காதலி","ரங்கோன்
ராதா","மக்களைப்பெற்ற மகராசி""வியட்நாம் வீடு" போன்ற பல படங்களில்
இந்த ஜோடி வலம் வந்தது.இந்த ஜோடியின் நடிப்பில் பல படங்கள் வெள்ளி விழாக்கொண்டாடின.
பத்மினிக்குப்பின் சிவாஜியுடன் மிகக்குறுகிய காலத்தில் அதிக படங்களில் நடித்தபெருமைசரோஜாதேவியையும்தேவிகாவையும்சாரும்."பாவமன்னிப்பு","பாகப்பிரிவினை","இருவர்
உள்ளம்","கர்ணண்","அன்னை இல்லம்""பாலும் பழமும்","புதிய
பறவை" போன்ற வெள்ளி விழாப்படங்கள் மூலம் இவர்கள் புகழ்பரவியது.சிவாஜியுடன்பலபடங்களில்நடித்தவர்சாவித்திரி."பாசமலர்","நவராத்திரி","திருவிளையாடல்"
ஆகியன மறக்கமுடியாத படங்கள்.
நல்லதொரு குடும்பம் எப்படி இருக்க வேண்டுமென்று
பத்மினிக்குப்பின்னர் ஜோடி சேர்ந்து வெளிப்படுத்தியவர் கே.ஆர்.விஜயா."தங்கப்பதக்கம்","இருமலர்கள்","சத்தியம்
சுந்தரம்"போன்ற வெள்ளி விழாப்படங்களில் இந்தஜோடி போட்டி போட்டு நடித்தது."பார்மகளேபார்","உயர்ந்த
மனிதன்"ஆகிய படங்களில் சிவாஜிக்கு இணையாக நடித்தார் செளகார் ஜானகி.
எம்.ஜி.ஆருடன்
ஜெயலலிதா முரண்பட்டபோது "வந்த இடம் நல்ல இடம் வரவேண்டும் காதல்
மகராணி" என்று ஜெயலலிதாவை கலாட்டாக்கல்யாணத்தில் வரவேற்றார் சிவாஜி."பட்டிக்காடா
பட்டணமா","நீதி","ராஜா","சவாலே சமாளி","தெய்வமகன்","எங்கிருந்தோ
வந்தாள்" போன்ற வெள்ளி விழாப்படங்கள் மூலம் இந்தஜோடி பொருத்தமான ஜோடி
என்று புகழப்பட்டது.
சிவாஜியுடன் சுஜாதா இணைந்து பல படங்களில் நடித்தபோது
ம் "அந்தமான் காதலி" மனதை விட்டு நீங்காத படமாக உள்ளது."தீர்ப்பு","வா
கண்ணா வா","பரீட்சைக்கு நேரமாச்சு" ஆகியவை மனதில் நிற்கவில்லை."வசந்தமாளிகை","சிவகாமியின்
செல்வன்" படங்களின் மூலம் சிவாஜிக்கு ஈடு கொடுத்து நடித்தவர் வாணிஸ்ரீ.
"எங்கள் தங்கராஜா" மஞ்சுளா,'சிவகாமியின் செல்வன்" லதா,"வைர
நெஞ்சம்" பத்ம்ப்பிரியா,"பொன்னூஞ்சல்","ரா ஜபாட் ரங்கதுரை" உஷா நந்தினி,"வாழ்க்கை"
அம்பிகா ஆகியோரும் மறக்கமுடியாத சிவாஜியின் நாயகிகள்.
முதியவரான சிவாஜி இளம் பெண்ணான ராதாவை நினைத்து
உருகும் "முதல் மரியாதை" என்றைக்கும் மறக்கமுடியாத படம். மகளாக
சகோதரியாக பல படங்களில் சிவாஜிக்கு ஈடு கொடுத்து நடித்தவர் லக்ஷ்மி.
ஒருத்தியைக்காதலித்து
இன்னொருத்தியைத்திருமணம் செய்வது,இரண்டு பெண்களைத்திருமணம் செய்து திண்டாடும்
கதாபாத்திரங்களில் சிவாஜியும் ஜெமினியும் கலக்கினார்கள்.காதலை இயல்பாக வெளிப்படுத்தியதில்
முன்னிலை வகிப்பது ஜெமினி சாவித்திரி ஜோடி. சிவாஜி பத்மினி பட வரிசையை நெருங்கும்
இன்னொரு ஜோடி இது."மிஸ்ஸியம்மா","மாயா பஜார்,"களத்தூர் கண்ணம்மா","காத்திருந்த
கண்கள்,"கற்பகம்","கொஞ்சும் சலங்கை","கப்பலோட்டிய
தமிழன்"ஆகியன ஜெமினி சாவித்திரி காதலைச்சொல்லும் படங்கள்.
"கல்யாணப்பரிசு,"பணமா
பாசமா" ஆகிய வெள்ளி விழாப்படங்களும்"கைராசி",தாமரை நெஞ்சம்"
ஆகிய வெற்றிப்படங்களும்ஜெமினி சரோஜாதேவி நடிப்பில் பரிமணித்தன.சாவித்திரியைக்கலங்கடித்த
ஜோடி இது."பூவாதலையா" "பத்தாம் பசலி"ஆகிய படங்களில் ஜெமினியின்
ஜோடியாக ராஜ ஸ்ரீ நடித்தார். அந்தக்காலத்தில்
இந்த ஜோடியைப்பற்றி அதிக கிசுகிசு வெளிவந்தது.
"இரு கோடுகள்","காவியத்தலைவி,"ஸ்கூல்
மாஸ்டர்" ஆகியன செளகார் ஜானகி ஜெமினி இணைந்த மறக்கமுடியாத படங்கள்."வஞ்சிக்கோட்டை
வாலிபன்,"சித்தி,"வீரபாண்டிய கட்டப் பொம்மன்"," மீண்ட சொர்க்கம்"
ஆகியன ஜெமினி பத்மினி ஜோடி நடிப்பில் வெளிவந்த மனதில் நிற்கும் படங்கள்.ஜெமினியுடன்
அஞ்சலிதேவி நடித்த படங்களும் வரவேற்பைப்பெற்றன.
எம்.ஜி.ஆர்,சிவாஜி,ஜெமினி
என்ற மூவேந்தர்களுடன் 60களில் அதிக வெற்றிப்படங்களில்
ஜோடி சேர்ந்து நடித்தவர் சரோஜாதேவி.அதே 60 களில் சிறப்பான வசன உச்சரிப்பின் மூலம்
ரசிகர்களில் மனதைக்கவர்ந்தவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.தமிழ்த்திரை உலக ரசிகர்களில் மனதில்
எஸ்.எஸ். ராஜேந்திரன் ,விஜயகுமாரி ஜோடிக்கு தனி இடம் உண்டு."சாரதா","குமுதம்","நானும்
ஒரு பெண்", "சாந்தி","பச்சை விளக்கு","ஆனந்தி","காஞ்சித்தலைவன்"
என்ற பட்டியல் இந்த ஜோடியின் சிறப்பை வெளிப்படுத்தும்.
"கற்பூரம்","தரிசனம்","பார்மகளேபார்","துணைவன்"
போன்ற படங்களின் மூலம் ஏ.வி.எம்.ராஜன்,புஸ்பலதா ஜோடி வலம் வந்தது.எம்.ஜி.ஆருக்குப்பின்
ஜெயலலிதாவின் சரியான ஜோடி என "நான்","மூன்றெழுத்து","மோட்டார்
சுந்தரம் பிள்ளை","குமரிப்பெண்"ஆகியபடங்களின் மூலம் வியந்து பேசப்பட்டவர்
ரவிச்சந்திரன்.
நடிப்புக்கு நடிகர் திலகம், சண்டைக்கு மக்கள்
திலகம் எம்.ஜி.ஆர் காலத்திலேயே மக்கள்
கலைஞர்,தென்னகத்து ஜேம்ஸ்பொண்ட் போன்ற பட்டங்களினால் ரசிகர்களால் புகழப்பட்டவர்
ஜெய்சங்கர். சிவாஜிக்குப்பின் அதிகபடங்களில்கதாநாயகனாக நடித்தவர்.எல்.விஜயலக்ஷ்மி,கே.ஆர்.விஜயா,லக்ஷ்மி,வாணி
ஸ்ரீ,ஜெயலலிதா,ஸ்ரீ வித்யா,ஜெயசித்ரா, ஸ்ரீதேவி, ஸ்ரீ ப்ரியா என இவருடன் ஜோடியாக நடித்தவர்களின்
பட்டியல் மிக நீளமானது.என்றாலும் லக்ஷ்மி,ஜெயசித்ரா ஆகிய இருவருமே இவருடன் நடித்தவர்களில் மறக்க முடியாதவர்களாவர்.
எந்த வேடமானாலும் சிறப்பாகச்செய்யக்கூடியவர் நவரசத்திலகம்
முத்துராமன்.கே.ஆர்.விஜயாவுடன்
இணைந்து நடித்த "தீர்க்க
சுமங்கலி",சுஜாதாவுடன் "மயங்குகிறாள் ஒரு மாது" ஆகியன
மறக்கமுடியாத படங்கள். முகத்தில் உணர்ச்சிகளை வெளிக்காட்டிய இன்னொரு நடிகர் சிவகுமார்.
"சொல்லத்தான் நினைக்கிறேன்","வெள்ளிக்கிழமை விரதம்","பொண்ணுக்குத்தங்க மனசு"ஆகிய வெற்றிப்படங்களில் சிவவகுமாருடன்
ஜோடி சேர்ந்தவர் ஜெயசித்ரா.ஜெயசித்ரா, கமல் ஜோடியும் வரவேற்பைப்பெற்றது.
1976 ஆம்
ஆண்டுமுதல் 1982ஆம் ஆண்டுவரை கமல்,ஸ்ரீ தேவி ஜோடி
ரசிகர்களைச்சிறைப்படுத்தியது."மூன்றுமுடிச்சு"முதல்,"மூன்றாம்
பிறை" வரை இந்த
ஜோடி வரலாறு
படைத்தது."16
வயதினிலே","கல்யாணராமன்","சிகப்புரோஜாக்கள்","வாழ்வேமாயம்","வறுமையின் நிறம் சிவப்பு","குரு"ஆகியபடங்களில் கமல்,ஸ்ரீ
தேவி நடிப்பை மறக்கமுடியாது.
ரஜினியின் முதல் கதாநாயகி ஸ்ரீ
பிரியா."பில்லா","பைரவி","தாய்மீது
சத்தியம்","தனிக்காட்டு ராஜா"ஆகிய படங்களில் ரஜினியுடன் ஜோடி
சேர்ந்தவர் ஸ்ரீ பிரியா.எம்.ஜி.ஆருக்குப்பின் பாமர மக்களின் மனங்களில் ரஜினி இடம்
பிடிக்க இப்படங்கள் உதவி
செய்தன.
கமல்,ரஜினி,ஸ்ரீ பிரியா,ஸ்ரீ தேவி ஆகியோர்
மாறி மாறி ஜோடியாக நடித்த "சட்டம்என்கையில்","இளமைஊஞ்சலாடுகிறது","அவள்அப்படித்தான்"."ப்ரியா","காயத்திரி","தர்மயுத்தம்","ஜானி"எல்லாம் வெற்றிப்படங்கள். கமல்,அம்பிகா
நடித்த "சகலகலா வல்லவன்" ரஜினி,அம்பிகா நடித்த "எங்கேயோ கேட்ட குரல்" ஆகிய இரண்டு
படங்களும் ஒரே நாளில்
வெளியாகி வெள்ளி விழாக்கொண்டாடின.
கமல், ரஜினிக்குப்பின் வந்த நாயகர்களில்
அதிக வெள்ளி விழாப்படங்களில் நடித்தவர்
மோகன்.தமிழில்
பேசாது வாயசைத்து வெற்றி
பெற்ற ஒரே நடிகர் இவர்தான்.மோகன் மைக்கும்
கையுமாக நடித்த படங்கள் அனைத்தும்
வெற்றி பெற்றன. மொகன் பூர்ணிமா ஜெயராம் நடித்த
"கிளிஞ்சல்கள்","பயணங்கள் முடிவதில்லை","விதி" ஆகியன வெள்ளி
விழாக்கொண்டாடின.முத்திரை பதித்த நாயகியான ரேவதி, மோகனுடன் நடித்த சில படங்கள் வெற்றி
பெற்றன.
பொன் விழாப்படமான
" கிழக்கே போகும் ரயில்" மூலம் அறிமுகமான சுதாகர்,
ராதிகாஜோடி நடித்த "நிறம் மாறாத பூக்கள்"தவிர
வேறு படங்கள் பேசப்படவில்லை.விஜகாந்த்,ராதிகா நடித்த "பூந்தோட்டக்காவல்காரன்"
மனதைவிட்டு
நீங்காத படங்களில் ஒன்று."அலைகள் ஓய்வதில்லை"
படத்தின்
மூலம் அறிமுகமான
கார்த்திக்,ராதா ஜோடி பல படங்களில் நெருக்கமாகநடித்தாலும்எதுவும்மனதில்நிற்கவில்லை."இதயத்தாமரை","கிழக்கு வாசல்","மெளன ராகம்" ஆகிய வெற்றிப்படங்களில் கார்த்திக்குடன் ரேவதி
ஜோடி சேர்ந்தார். தமிழ்த்திரை உலகில் அதிகமாக
கிசு கிசுவில் அகப்பட்டவர்
கார்த்திக். அன்றிலிருந்து இன்றுவரை கார்த்திக்குடன் நடிக்கும்
நடிகைகளைப்பற்றிய கிசு கிசு
தொடர்கிறது.
"கோழி
கூவுது","சூரக்கோட்டை சிங்கக்குட்டி"ஆகிய படங்களின் வெற்றிக்குப்பின்னர் பிரபுவின்
ஜோடி சில்க்தான் என்று பத்திரிகைகள் கட்டியம் கூறின.வெள்ளை
ரோஜா","திருப்பம்","ராகங்கள் மாறுவதில்லை" ஆகிய படங்களில் பிரபுவுடன் ஜோடியாக
நடித்த அம்பிகா
அவரது மனதிலும் இடம் பிடித்தார்.இதன் காரணமாக இவர்களிப்பற்றிய கிசுகிசுக்கள் பத்திரிகைகளின் பக்கங்களை நிரப்பின."தர்மத்தின்
தலைவன்",முதல்"சின்ன
வாத்தியார்" வரை இணைந்த
பிரபு, குஷ்பு பற்றிய தலைப்புச்செய்தி
எழுதாத பத்திரிகைகளே
இல்லை."சின்னத்தம்பி"
தந்த மகத்தான வெற்றிக்குப்பின்னர் இருவரும்
சிலகாலம் இணந்து
வாழ்ந்ததாக பத்திரிகள் செய்தி வெளியிட்டன.மிக அதிகமான நகைச்சுவைத்துணுக்குகளும் இவர்களைப்பற்றியே எழுதப்பட்டன.
சிவகுமார்,முத்துராமன்,ஜெய்சங்கர்
போன்று கதாநாயகியைப்பற்றி
கவலைப்படாது நடிப்பவர் சத்தியராஜ்.என்.எஸ்.கிருஷ்ணன்
-மதுரம்,தங்கவேல் -சரோஜா,
நாகேஷ்- மனோரமா,
நாகேஷ் -சச்சு, சுருளி
ராஜன்- மனோரமா, தேங்காய் சீனிவாசன்- மனோரமா ஆகிய ஜோடிகளும் திரைப்படத்தின் வெற்றிக்குத் துணை
புரிந்தன.
என்.எஸ்.கிருஷ்ணன்-
மதுரம்,
எம்.ஜி.ஆர் வி-.என்.ஜானகி,
தங்கவேல்-
சரோஜா, ஏ.வி.எம்.ராஜன்- புஷ்பலதா,ஜெமினி -சாவித்திரி,
எஸ்.எஸ்.ஆர் -விஜயகுமாரி ஆகியோர்
திரையில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் இணந்தனர்.
எம்.ஜி.ஆர்- சரோஜாதேவி, எம்.ஜி.ஆர்
-ஜெயலலிதா,சிவாஜி-
கே.ஆர்.விஜயா
சிவாஜி -பத்மினி போன்று
ரசிகர்களின் மனதில் இடம்
பிடித்தது பிரபு,குஷ்பு ஜோடி.பிரபு, குஷ்புவுக்குப்பின் வெற்றிகரமான ஜோடிதிரையில்
இன்னமும் வரவில்லை.
ரமணி
No comments:
Post a Comment