Friday, August 1, 2014

கும்பலாக எரிந்த குழந்தைகள்

உலகத்தையே ஒரு கணம் உறைய வைத் திருக்கிறது கும்பகோணக் கொடூரம். உலகின் நாளைய தலைவர்கள்,சிற்பிகள் என வர்ணிக்கப்பட்ட 95 பிஞ்சுகள் தீயின் அகோரபசிக்கு இரையாகியுள்ளனர். உதவிக்குச்சென்றவர்கள் தீயின் அகோரத்தைத் தாண்டமுடியாது எரியும் நெருப்பில் பொசுங்கும் மொட்டுக்களைப் பார்த்துத் துடித்தனர்.

மாணவர்களை கண்ணின்மணி போன்று பாதுகாக்க வேண்டிய ஆசிரியர்கள் தமது உயிர் தப்பினால் போதுமென்று ஓடித்தப்பி விட்டனர். எரியும் நெருப்பில் சிக்கித்தவித்த பிஞ்சுகளை காப்பாற்றச்சென்ற பலர் தீக்காயங்களுக்குள்ளானார்கள். ஒருவர் மரணமானார்.

ஆஸ்திக்கும் ஆசைக்கும் பெற்றெடுத்த பிள்ளைகளைக் கரிக்கட்டையாகப் பார்த்த துர்ப்பாக்கியசாலிகள் சித்தப்பிரமை பிடித்ததுபோல் கதறி அழுதனர்இந்திய மக்கள் தொகையைக்குறைப்பதற்காக நாமிருவர் நமக்கிருவர் என்ற தாரக மந்திரத்தால் கட்டுண்டு இரண்டு பிள்ளைகளை மட்டுமே பெற்றெடுத்த தாய் ஒருவர் இரண்டு பிள்ளைகளையும் தீயில் பறிகொடுத்து பரிதவிக்கிறார்.

என் சிதைக்குத்தீவைப்பான் மகன் என நினைத்திருந்த தகப்பன் தீயில் கருகிய தன் பிள்ளையைத்தூக்கி உயிர்ப் பிச்சைகேட்டு வைத்தியசாலைக்கு ஓடிய காட்சி, பார்த்தவர்கள் மனதை உருகச்செய்தது.

வாழைஇலை குவிந்திருந்தால் அங்கே  அன்னதானம் நடைபெறுகிறது என்ற எண்ணமே ஏற்படும்ஆனால் தீயில் பொசுங்கிய பிஞ்சுகளை தூக்கிச்செல்வதற்காக கும்பகோணபாடசாலையிலும் வைத்தியசாலைகளிலும் வாழைஇலைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

தமிழகத்தின் ஏழைக்குழந்தைகளை பாடசாலைக்கு வரவழைப்பதில் சத்துணவுத்திட்டம் மிகமுக்கிய பங்காற்றுகிறது. மாணவர்களின் பசியைப்போக்குவதற்கு உணவு தயாரிப்பதற்ற்கு கொளுத்தப்பட்ட தீயே மாணவர்களை இரையாக்கியுள்ளது.

தமிழகத்தில் அரசாங்கப்பாடசாலைகள், அரச உதவி பெறும் பாடசாலைகள், தனியார் பாடசாலைகள் என்பன புற்றீசல்போல் தோன்றி போட்டியிட்டு மாணவர்களைக் கவர்ந்திழுக்கின்றன.

ஆங்கிலமோகம்  தமிழகத்தை ஆட்டிப்படைப்பதனால் தனது பிள்ளை ஆங்கிலக்கல்விபெற வேண்டும்  என்ற துடிப்பு பெற்றோர் மத்தியில் காணப்படுகின்றது. இந்த ஆங்கில மோகமே ஆரம்ப வகுப்பு சிறார்களின் உயிரைக்குடித்தது
பாடசாலைக் கட்டடம் கட்ட கலெக்டர் தலைமையிலான குழுவிடமும் அரசபொறியியலாளர்களிடமும் வரை படம் கொடுத்து அனுமதிபெறவேண்டும். வகுப்பறைகள் தரையில் அமையவேண்டும். 40 அடி நீளமான வகுப்பறையில் நான்கு யன்னல்கள் இருக்கவேண்டும். யன்னலில் இரும்பு வலைகள், கிரில் என்பன இருக்கக்கூடாது.

பாடசாலை ஆரம்பிக்க மூன்று ஏக்கர் நிலம் இருக்கவேண்டும் இருபாலர் பாடசாலை என்றால்  ஐந்து ஏக்கர் நிலத்தில் அமைய வேண்டும். மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கட்டட ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்று பல விதி முறைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவை எல்லாவற்றுக்கும் கட்டுப்பட்ட பாடசாலைகள் சில இடங்களில் அமைவதில்லை. ஒருபாடசாலை எந்தவிதமான குற்றச்சாட்டுமின்றி சிலகாலம் இயங்கி விட்டால்  நிரந்தர அங்கீகாரம் வழங்கப்பட்டுவிடும்.


கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா உயர் நிலைப்பள்ளி மத்திய அரசின் உதவித்திட்டத்தின் கீழ் இயங்கி வருகிறது. தமிழக ஆளும் கட்சி உறுப்பினர் சிவசாமி இப்பாடசாலையைத்திறந்து வைத்தார்.  

பாடசாலையின் மொட்டை மாடியில் கீற்ற்றுக்கொட்டகை அமைக்கப்பட்டு ஆரம்ப வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையான மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர். மிகவும் குறுகலான ஒரேஒரு மாடிப்படியும் அவசரத்துக்கு வெளியேறக்கூடிய வசதியும் இல்லாமையே உயிரிழப்புக்கு முக்கிய காரனம்.தமிழ் மூல மாணவர்களின் தொகை குறைந்திருந்ததனால் அதிகாரிகளுக்குக் கணக்குக்காட்ட மேல் மாடிக்கு ஆசிரியர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட ஆங்கில மொழிமூல மாணவர்களும் தீயில் பொசுங்கி மரணமானார்கள்.



மாணவர்களின் மரணத்துக்குரிய முழுப்பொறுப்பும் ஆசிரியர்களையேசாரும் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வருகிறது. தீ பரவ ஆரம்பித்ததும் யாரும் அசைய வேண்டாம் தீ இங்கே வராது என் கூறிவிட்டு  ஆசிரியர்கள் கீழேசென்றுவிட்டனர். ஆசிரியர்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டிருந்த இளம் பிஞ்சுகளை தீ தனது கோரப்பசிக்கு இரையாக்கி யுள்ளது.

தேர்தல் திருவிழா முடிந்து ஓய்வாக இருந்த வேளையில் கும்பகோணச்சம்பவம் அரசியல்வாதிகளை மீண்டும் உயிர் பெற வைத்துள்ளது. தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும், டில்லித்தலைவர்களும்  கும்பகோணத்தை நோக்கிப் படை எடுக்கத் தொடங்கி விட்டனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா,சோனியா,ராகுல் எதிர்க்கட்சித்தலைவர் எல்.கே. அத்வானி பாரதிய ஜனதாக் கட்சித்தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழக அமைச்சர்கள் ஆகியோர் கும்பகோணத்துக்குச்சென்று து அஞ்சலியைச் செலுத்தியதுடன் உதவி நிதிகளையும் அள்ளி ங்கி உள்ளர்.

கும்பகோணஅனர்த்தம் அரசியலாகமாறிக்கொண்டிருக்கிறது. மிழஅரசின் அதிரடி டிக்கையினால் சுமார் 200 பாடசாலைகள் மூடப்பட்டு விட்ட‌. இதே போன்று சுமார் 4500 பாடசாலைகள்  இருப்பதாகப் த்திரிகைத் ல்கள் தெரிவிக்கின்ற‌. ஆனால், இந்தத்த‌‌டை எத்தனை நாளைக்கு நீடிக்கும்  என்பது ற்றியல்கள் எதுவும் தெரியவில்லை.

இந்தியாவில் தீராதபெரும் பிரச்சினைகளில் தீயும் ஒன்று. வீட்டுக்கு ரும்  ருமள்களின் பிரச்சினைகளைத்தீர்ப்பற்கு காஸ்சிலிண்டர் அல்லது ண்ணெண்ணெய் அடுப்பு வெடிப்பது மை.

அரசியல் லைவரின் றைவைத்தாங்கமுடியது அல்லது அவருக்கு எதிரான‌‌ ஒரு ம்பத்தின் போது தொண்டர்கள் தீக்குளிப்பார்கள். தீக்குளித்ததொண்டனின் குடும்பத்தையோ அப்படிப்பட்டர்களையோ ட்சியிலிருந்து நீக்குவது கிடையாது. மாறாகஅவர்களை ஊக்குவிக்கநிதி ங்குவார்கள்.

க்குப்பிடிக்காதஅரசியல் லைவரின் கொடும்பாவியை எரிக்கும் நிகழ்ச்சியும் ‌‌மிழத்தில்  அடிக்கடி நடைபெறுகிறது. இது ற்போது சினிமா சிகர்களிடமும் விவிட்டது.

1979 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் உள்ள  கீற்றுக்கொட்டகைச் சினிமாத் தியேட்டரில் ம் ஓடிக்கொண்டிருந்தபோது தீப்பிடித்தனால் 150 பேர் மானார்கள் 115 பேர் எரிகாயமடைந்தர். 2002 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி  ஏர்வாடியில் ம் பாதிக்கப்பட்டர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிலையம் எரிந்தனால்  ம் பாதிக்கப்பட்ட‌‌ 28 நோயாளிகள் எரிந்து சாம்பலானார்கள்.கீற்றுக்கொட்டகையில் கைவிலங்கிடப்பட்டநிலையில் மான‌ 28 பேரில் 11 பெண்களும் அடங்குவர்.






ஆத்தூரில் 2002 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 11 ஆம் திகதி ஏற்பட்ட வெடி விபத்தில் 20 பேர் பலியானதுடன் 224 பேர் காயமடைந்தனர். கோவில்பட்டி தீப்பெட்டித்தொழிற்சாலையில்  2002 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 20 ஆம் திகதி ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் லியாகி 55 பேர் காயடைந்தர்.

விழுப்புரத்தில் அனுமதிபெறாது இயங்கியட்டாசு யாரிக்கும் நிலையத்தில் தீ  பிடித்தபோது 10 பேர் லியானார்கள். ஸ்ரீரங்கத்தில் 2003 ஆம் ஆண்டுஜூன் மாதம் 25 ஆம் திகதி ந்ததிருமவைபத்தில் ஏற்பட்டதீவிபத்து மிகவும் கொடூரமானது. மொட்டை மாடியில் அமைக்கப்பட்டற்காலிககொட்டகை எரிந்ததில் ன் உட்ப‌ 59 பேர் லியானார்கள். இந்தத்தீ விபத்தில் அநியாயமாக‌ 20 பெண்களும் 11 குழந்தைகளும் லியானார்கள்.

தீவிபத்து டைபெற்றம்பங்கள் அனைத்திலும் ஒரேவிதமானபாதுகாப்பு குறைபாடுகளே இருந்த‌. அரசாங்கத்தின் ட்டதிட்டங்களுக்குக் ட்டுப்படாதபாடச்டாலைகள் உள்ள‌. அரசுகள் மாறும்போது அதற்கேற்றவாறு  தாமும் மாறி க்குரியஅங்கீகாரத்திப்பெற்று ருகின்ற‌.

மிழத்தையும்தாண்டி டில்லியின் ண்களையும் திறந்து விட்டஇந்தச்சம்பவத்தின் மூலம் இந்தியாவில் உள்ளகீற்றுக்கொட்டகைகளுக்கு முடிவு ட்டப்பட  வேண்டும். இல்லையேல் மிழகத்தைப்போன்று அவத்தை
 எதிர் நோக்கவேண்டிவரும்.

பூகம்பம் ,சூறாவளி,ல்கொந்த‌‌ளிப்பு,யில்விபத்து,ங்கவாதம் போன்றவை  அவ்வப்போது கொத்துக்கொத்தாகஉயிர்களைப்பறிகின்ற‌.இவற்றுக்கிடையில் குஜராத்தில் கோத்ரா யில் எரிப்பு, ஜெயலிதா குற்றவாளி எனதீர்ப்பளிக்கப்பட்டபோது ர்மபுரியில் ஸ்ஸினுள் மூன்று மாணவிகள் எரித்துக்கொல்லப்பட்டமை  போன்றற்றினாலும் அநியாயமாகஉயிர்கள் றிக்கப்படுகின்ற‌.


ணி
மெட்ரோநியூஸ் 23/06/2004

No comments: