தமிழக
சட்டசபையில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளுக்கும் ஒக்டோபர்
1 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத் தேர்தலில் கட்சியின்
கொள்கை வேட்பாளர் அனைத்தையும் தாண்டி கவனிப்புத்தான்
முக்கியத்துவம் பெறுகிறதென்பதை கடந்தகால முடிவுகள்
வெளிப்படுத்துகின்றன. தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னதாக இடைத்தேர்தல் நடைபெறுவதால் கவனிப்புகள் பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத்
தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மோசமாகத் தோல்வியடைந்தாலும் மினித் தேர்தல்
போல் நடைபெற்ற தமிழக சட்டசபையி 22 தொகுதிளின்
இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி
பெற்று பெரும்பான்மையைத் தக்கவைத்தது. மீண்டும் ஒரு முறை செல்வாக்கை வெளிப்படுத்துவதற்கு
தமிழக ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இடைத் தேர்தலில்
வெல்ல வேண்டிய கட்டாயம் திராவிட முன்னேற்றக் கழகம்,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,காங்கிரஸ்
ஆகிய மூன்று கட்சிகளுக்கும் உள்ளது.
விக்கிரவாண்டி
தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினரான
ராதாமணி உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார். நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினரான வசந்தகுமார்,
நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதும் இராஜினாமாச் செய்தார். ஆகையால் இரண்டு
தொகுதிகளிலும் இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்குநேரி தொகுதிய திராவிட முன்னேற்றக்
கழகத்துக்கு விட்டுத்தரும்படி உதயநிதி கோரிக்கை விடுத்தார். அதற்கு காங்கிரஸ் கட்சிக்குள்
கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழக சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற
நாங்குநேரியை அக்கட்சிக்கே கொடுத்துள்ளார் ஸ்டாலின். விக்கிரவாண்டியில் திராவிட முன்னேற்றக்
கழகம் போட்டியிடுகிறது.
நாங்குநேரி
தொகுதியில் 2.56 வாக்களர்கள் உள்ளனர்.
1.27 இலட்சம் ஆன்கள்,.129 இலட்சம் பெண்கள், மூன்று திருநங்கையர் உள்ளனர்.
170 இடங்களில் 299 வாக்குச்சாவடிகள் அமைக்கபப்ட உள்ளன.
விக்கிரவாண்டியில்
2.22 இலட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 1.11 இலட்சம் ஆண்களும், 1.11 இலட்சம் பெண்களும், 25 திருநங்கையரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
கமலின்
கட்சியும், தினகரனின் கட்சியும் இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடவில்லை. சீமான் தனது கட்சியில் வேட்பாளர்களை
நிறுத்தவுள்ளார். இரண்டு தொகுதிகளின் வெற்றி முதலமைச்சர் எடப்பாடி பன்னீர்ச்செல்வத்துக்கும்,
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கும் மிக
முக்கியமானது
No comments:
Post a Comment