அதிகாரத்துக்கு
ஆசைப்பட்ட சசிகலா தமிழக முதல்வராக விரும்பினார். சிறைத்தண்டனை அதற்கு முட்டுக்கட்டை
போட்டது. ஜெயலலிதாவின் விசுவாசியான பன்னீர்ச்செல்வதை
நீக்கிவிட்டு எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினார் சசிகலா.
வருமானத்துக்கு
மீறிய சொத்துக்குவிப்பு, ஊழல் குற்றச்சாடுகளில் சைலலா சிறைக்குச் சென்றபோது ஆட்சியைத் தக்க வைப்பதற்காக சசிகலாவைத் தூக்கி எறிந்துவிட்டு
பன்ன்னீருடன் கைகோர்த்தார் எடப்பாடி.
நான்கு வருட சிறைவாசத்தின் பின்னர் சசிகலா வெளியே வரும் ஜனவரி 27 ஆம் திகதி அண்ணா திரா விட முன்னேற்றக் கழகத்தலைவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. ஊடக வெளிச்சம் சசிகலாவின் மீது பட்டுவிடக்கூடாது என்பதற்காக அதே நாள் ஜெயலலிதாவின் நினைவிடத்தைத் திறக்க ஏற்பாடு செய்தார்கள்.
சிறைச்சாலையில்
ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த சசிகலா வைத்திய சாலையில் விடுதலையானார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் எதிர்பார்த்தது போன்று சசிகலா தமிழகத்துக்கு வரவில்லை. ஜெயலலிதா பாவித்த
காரில் அண்ணா திராவிட முன்னேறக் கழகக் கொடியை ஏற்றி தனது அரசியல் எதிரிகளைக் கதிகலங்க வைத்தார். சசிகலாவின்
இச்செயல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருப்பதை தான்
இருப்பதை வெளிக்காட்டுவதாக உள்ளது.
சிறையில்
இருந்து விடுதலையான சசிகலா நிறையப் பேசுவார் என்ற எதிர் பார்ப்பு இருந்தது. ஜெயலலிதாவின்
காரில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கொடியைக் கட்டி அமைதியாகத் தனது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளார்.
சசிகலாவை
கட்சியில் சேர்க்க மாட்டேன் என எடப்பாடியார் டில்லியில் முழக்கமிட்டார். ஆனால், அவரின்
கட்சியின் முக்கைய பிரமுகர்கள் சசிகலாவுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
சசிகலாவுக்கு ராஜ்யசபா எம்பி பதவு கொடுக்க வேண்டும் என்ற கருத்தும் அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகத்துக்குள் இருக்கிறது. கழகக் கொடியைக் கட்டியதற்காக சசிகலாவுக்கு எதிராக சட்ட
நடவடிக்கை எடுக்கப்போவதாக அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசமாகக் கூறினார். ஆனால், இதுவரை
அப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
சசிகலாவை
மீண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைப்பதற்கு பாரதீய ஜனதாக் கட்சி முயற்சி
செய்கிறது. எடப்பாடியும், பன்னீரும் தங்கள் பதவியைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார்களே தவிர கட்சியின் முன்னேற்றத்துகுரிய
வேலைத் திட்டங்களை முறையாக முன்னெடுக்கவில்லை. கட்சியை ஒழுங்கமைப்பதற்கு சசிகலாவின்
தலைமைத்துவம் தேவை எனப்தை பாரதீய ஜனதா நம்புகிறது.
சசிகலாவின்
வருகையால் தனது முதல்வர் பறிக்கப்படும் என்பதை
எடப்பாடி நன்கு அறிவார். தனக்குத்ட் ஹுரோகம்
செய்த எடப்பாடியின் பதவியை பறிப்பதே சசிகலாவின் முதல் வேலையாக இருக்கும். அமைதியாக
நீட்டம் பார்க்கும் பன்னீருக்கு சிலவேளை அதிர்ஷ்டம் அடிக்கக்கூடும்.
திராவிட
முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வருவதைத் தவிர்ப்பதே பாரதீய ஜனதா, அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகம் ஆகியவற்றின் குறிக்கோள். இரண்டு கட்சிகளும் இரண்டு துருவங்களாக நிற்பதால்
ஸ்டாலின் பதற்றமிலாமல் பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து பத்து வருடங்களாக அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகம் ஆட்சியில் இருப்பதால் தமிழக மக்கள் மிகுந்த
கோபத்தைல் இருக்கிறார்கள். மக்களின் கோபத்தைத்
தணிப்பதற்காக கவர்ச்சிகரமான திட்டங்களை எடப்பாடி அறிவிகிறார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்க்கும் திட்டங்களை பாரதீய ஜனதாவும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து நடை முறைப் படுத்துகின்றன.அமைச்சர்களும், தொண்டர்களும் சசிகலாவுடன் தொரபில் இருக்கிறார்களா என்பதை உளவுத் தகவல் மூலம் எடப்பாடி தெரிந்து வைத்துள்ளார். இதை எல்லாம் மீறி சசிகலாவை வரவேற்று சுவரொட்டி ஒட்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் தொகை அதிகரித்துள்ளது.
ஒன்றிரண்டு
சுவரொட்டிகள் முளைத்தபோது முன் எச்சரிக்கையாக
அவற்றை வெளியிட்டவர்களை கட்சியில் இருந்து எடப்பாடி நீக்கினார். சசிகலாவை
வரவேற்று பன்னீரின் ம்கனும் ஒரு சுவரொட்டி வெளியிட்டார். அவர் மீது எடப்பாடி நடவடிக்கை
எடுக்கவில்லை. ஜெயலலிதாவின் படமும் சசிகலாவின்
படமும் இணைந்த சுவரொட்டி, சசிகலா, ஜெயலலிதா, தினகரன் ஆகியோரின் படங்களுடனான சுவரொட்டி,
தினகரனின் படம் இல்லாத சுவரொட்டி என வகைவகையான சுவரொட்டிகளை அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகத் தொண்டர்கள் வெளியிடுகின்றனர்.
இவை
எல்லாவற்றையும் மிஞ்சும் வகையில் வெளியான சுவரொட்டி எடப்பாடிக்கும், பன்னீருக்கும்
சவால் விடுவது போல் அமைந்துள்ளது. சசிகலாவை வரவேற்ரு ஒட்டப்பட்ட சுவரொட்டியில் எடப்பாடி,
பன்னீர் ஆகியோரின் படங்கள் இடம் பெற்றுள்ளன. சசிகலாவை எதிர்க்கும் இருவரின் படங்களுடன் வெளியான சுவரொட்டி அரசியல் அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில்
ஓய்வெடுக்கும் சசிகலா அடுத்த மாதம் 7 ஆம் திகதி
தமிழகத்துகு விஜயம் செய்யவுள்ளார். நான்கு வருடங்கலுக்கு முன்னர் ஜெயலலிதாவின் சமாதியில் மூன்று முறை அடித்து சத்தியம் செய்தபினர் சிறைக்குச் சென்ற சசிகலா தமிழகத்துக்குள் நுழைந்ததும் ஜெயலலிதாவின்
நினைவிடத்துக்குச் செல்வார். அங்கிருந்து ஆரம்பமாகும் அவர் மீதான் ஊடக
வெளிச்சம் அண்ணா திராவிட முன்னாற்றக் கழகத் தலைவர்களின் கண்களில் கூச்சத்தை
ஏற்படுத்தப்போவது உண்மை.
தமிழக சட்ட மன்றத் தேர்தலில் சசிகலாவின் வகிபாகம் தவிர்க்க முடியாதது. ஆனால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வீழ்ச்சியை சசிகலாவால் தடுத்து நிறுத்த முடியாது. அண்ணா திராவிட உரிமைப் பிரச்சினை சம்பந்தமாக சசிகலா தோடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது. சசிகலா தனி ஆவர்த்தனம் தொடங்கினால் அண்ணா திராவிட முன்னாற்றக் கழகத்தில் பிளவுஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது.ஜெயலலிதா உயிர்ப்புடன் இருக்கும் வரை அவரைப் பாதுகாக்கும் அரணாக விளங்கியவர் சகிகலா. சசிகலா கண் அசைத்தால்தான் ஜெயலலிதாவைச் சந்திக்க முடியும். ஜெயலலிதாவை ”அம்மா” என்றும் சசிகலாவை “சின்னம்மா” என்றும் போற்றியவர்கள் பதவியை அனுபவிப்பதற்காக சசிகலாவைத் தூக்கி எறிந்தனர்.
அதிகாரத்துக்கு
ஆசைப்பட்ட சசிகலா தமிழக முதல்வராக விரும்பினார். சிறைத்தண்டனை அதற்கு முட்டுக்கட்டை
போட்டது. ஜெயலலிதாவின் விசுவாசியான பன்னீர்ச்செல்வதை
நீக்கிவிட்டு எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினார் சசிகலா.
வருமானத்துக்கு
மீறிய சொத்துக்குவிப்பு, ஊழல் குற்றச்சாடுகளில் சைலலா சிறைக்குச் சென்றபோது ஆட்சியைத் தக்க வைப்பதற்காக சசிகலாவைத் தூக்கி எறிந்துவிட்டு
பன்ன்னீருடன் கைகோர்த்தார் எடப்பாடி.
நான்கு வருட சிறைவாசத்தின் பின்னர் சசிகலா வெளியே
வரும் ஜனவரி 27 ஆம் திகதி அண்ணா திரா விட முன்னேற்றக்
கழகத்தலைவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
ஊடக வெளிச்சம் சசிகலாவின் மீது பட்டுவிடக்கூடாது என்பதற்காக அதே நாள் ஜெயலலிதாவின் நினைவிடத்தைத்
திறக்க ஏற்பாடு செய்தார்கள்.
சிறைச்சாலையில்
ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த சசிகலா வைத்திய சாலையில் விடுதலையானார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் எதிர்பார்த்தது போன்று சசிகலா தமிழகத்துக்கு வரவில்லை. ஜெயலலிதா பாவித்த
காரில் அண்ணா திராவிட முன்னேறக் கழகக் கொடியை ஏற்றி தனது அரசியல் எதிரிகளைக் கதிகலங்க வைத்தார். சசிகலாவின்
இச்செயல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருப்பதை தான்
இருப்பதை வெளிக்காட்டுவதாக உள்ளது.
சிறையில்
இருந்து விடுதலையான சசிகலா நிறையப் பேசுவார் என்ற எதிர் பார்ப்பு இருந்தது. ஜெயலலிதாவின்
காரில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கொடியைக் கட்டி அமைதியாகத் தனது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளார்.
சசிகலாவை
கட்சியில் சேர்க்க மாட்டேன் என எடப்பாடியார் டில்லியில் முழக்கமிட்டார். ஆனால், அவரின்
கட்சியின் முக்கைய பிரமுகர்கள் சசிகலாவுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
சசிகலாவுக்கு ராஜ்யசபா எம்பி பதவு கொடுக்க வேண்டும் என்ற கருத்தும் அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகத்துக்குள் இருக்கிறது. கழகக் கொடியைக் கட்டியதற்காக சசிகலாவுக்கு எதிராக சட்ட
நடவடிக்கை எடுக்கப்போவதாக அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசமாகக் கூறினார். ஆனால், இதுவரை
அப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
சசிகலாவை
மீண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைப்பதற்கு பாரதீய ஜனதாக் கட்சி முயற்சி
செய்கிறது. எடப்பாடியும், பன்னீரும் தங்கள் பதவியைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார்களே தவிர கட்சியின் முன்னேற்றத்துகுரிய
வேலைத் திட்டங்களை முறையாக முன்னெடுக்கவில்லை. கட்சியை ஒழுங்கமைப்பதற்கு சசிகலாவின்
தலைமைத்துவம் தேவை எனப்தை பாரதீய ஜனதா நம்புகிறது.
சசிகலாவின்
வருகையால் தனது முதல்வர் பறிக்கப்படும் என்பதை
எடப்பாடி நன்கு அறிவார். தனக்குத்ட் ஹுரோகம்
செய்த எடப்பாடியின் பதவியை பறிப்பதே சசிகலாவின் முதல் வேலையாக இருக்கும். அமைதியாக
நீட்டம் பார்க்கும் பன்னீருக்கு சிலவேளை அதிர்ஷ்டம் அடிக்கக்கூடும்.
திராவிட
முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வருவதைத் தவிர்ப்பதே பாரதீய ஜனதா, அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகம் ஆகியவற்றின் குறிக்கோள். இரண்டு கட்சிகளும் இரண்டு துருவங்களாக நிற்பதால்
ஸ்டாலின் பதற்றமிலாமல் பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து பத்து வருடங்களாக அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகம் ஆட்சியில் இருப்பதால் தமிழக மக்கள் மிகுந்த
கோபத்தைல் இருக்கிறார்கள். மக்களின் கோபத்தைத்
தணிப்பதற்காக கவர்ச்சிகரமான திட்டங்களை எடப்பாடி அறிவிகிறார்.
திராவிட
முன்னேற்றக் கழகத்தை எதிர்க்கும் திட்டங்களை பாரதீய ஜனதாவும், அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகமும் இணைந்து நடை முறைப் படுத்துகின்றன.அமைச்சர்களும், தொண்டர்களும் சசிகலாவுடன்
தொரபில் இருக்கிறார்களா என்பதை உளவுத் தகவல் மூலம் எடப்பாடி தெரிந்து வைத்துள்ளார்.
இதை எல்லாம் மீறி சசிகலாவை வரவேற்று சுவரொட்டி
ஒட்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் தொகை அதிகரித்துள்ளது.
ஒன்றிரண்டு
சுவரொட்டிகள் முளைத்தபோது முன் எச்சரிக்கையாக
அவற்றை வெளியிட்டவர்களை கட்சியில் இருந்து எடப்பாடி நீக்கினார். சசிகலாவை
வரவேற்று பன்னீரின் ம்கனும் ஒரு சுவரொட்டி வெளியிட்டார். அவர் மீது எடப்பாடி நடவடிக்கை
எடுக்கவில்லை. ஜெயலலிதாவின் படமும் சசிகலாவின்
படமும் இணைந்த சுவரொட்டி, சசிகலா, ஜெயலலிதா, தினகரன் ஆகியோரின் படங்களுடனான சுவரொட்டி,
தினகரனின் படம் இல்லாத சுவரொட்டி என வகைவகையான சுவரொட்டிகளை அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகத் தொண்டர்கள் வெளியிடுகின்றனர்.
இவை
எல்லாவற்றையும் மிஞ்சும் வகையில் வெளியான சுவரொட்டி எடப்பாடிக்கும், பன்னீருக்கும்
சவால் விடுவது போல் அமைந்துள்ளது. சசிகலாவை வரவேற்ரு ஒட்டப்பட்ட சுவரொட்டியில் எடப்பாடி,
பன்னீர் ஆகியோரின் படங்கள் இடம் பெற்றுள்ளன. சசிகலாவை எதிர்க்கும் இருவரின் படங்களுடன் வெளியான சுவரொட்டி அரசியல் அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில்
ஓய்வெடுக்கும் சசிகலா அடுத்த மாதம் 7 ஆம் திகதி
தமிழகத்துகு விஜயம் செய்யவுள்ளார். நான்கு வருடங்கலுக்கு முன்னர் ஜெயலலிதாவின் சமாதியில் மூன்று முறை அடித்து சத்தியம் செய்தபினர் சிறைக்குச் சென்ற சசிகலா தமிழகத்துக்குள் நுழைந்ததும் ஜெயலலிதாவின்
நினைவிடத்துக்குச் செல்வார். அங்கிருந்து ஆரம்பமாகும் அவர் மீதான் ஊடக
வெளிச்சம் அண்ணா திராவிட முன்னாற்றக் கழகத் தலைவர்களின் கண்களில் கூச்சத்தை
ஏற்படுத்தப்போவது உண்மை.
தமிழக சட்ட மன்றத் தேர்தலில் சசிகலாவின் வகிபாகம் தவிர்க்க முடியாதது. ஆனால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வீழ்ச்சியை சசிகலாவால் தடுத்து நிறுத்த முடியாது. அண்ணா திராவிட உரிமைப் பிரச்சினை சம்பந்தமாக சசிகலா தோடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது. சசிகலா தனி ஆவர்த்தனம் தொடங்கினால் அண்ணா திராவிட முன்னாற்றக் கழகத்தில் பிளவுஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது.
No comments:
Post a Comment