ஜெயலலிதாவின்
மரணம்,கூவத்தூர் கூத்து, சசிகலாவின் சிறைவாசம் பன்னீரின் தர்ம யுத்தம் என்பனவற்றால்
பழனிச்சாமி பதவியில் நீடிக்க மாட்டார் என்ற கருத்து மேலோங்கியது. அண்ணா திராவிட முன்னேற்றக்
கழக ஆட்சி நீடிக்காது என்ற எண்ணத்தில் ஸ்டாலின் காலக்கெடு விதித்தார்.
இரட்டை
இலையை தாமரையின் கீழ் பத்திரமாகச் செருகியதால்
நான்கு வருட முதலமைச்சர் பதவியை எடப்பாடி முழுமையாக அனுபவித்தார். ஜெயலலிதா எதிர்த்த திட்டங்கள் அனைத்தையும் செங்கம்பளம் விரித்து வரவேற்றார். பதவியை முழுமையாக அனுபவுக்க வேண்டும் என்றால் பாரதீய
ஜனதாவின் ஆசீர்வாதம் வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்ட
எடப்பாடி அதற்கேற்ப காய் நகர்த்தினார்.
பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்ததால் தான் தேர்தலில் தோற்றோம் என்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் குற்றச் சாட்டும், தமிழகத்தில் ஊழ அரசாங்கம் என்ற பாரதீய ஜனதாவின் குற்றச்சாட்டும் மூடி மறைக்கப்பட்டுள்ளன.
தமிழக
சட்ட சபைத் தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு 20 தொகுதிகளை மட்டும் ஒதுக்கி தனது பலத்தைக்
காட்டியுள்ளார் எடப்பாடி. ஆட்சியில் இருக்கும்போது பாரதீய ஜனதாவின் தாளத்துக்கு ஏற்ப
ஆடினார் எடப்பாடி. தேர்தல் அறிவிக்கப்பட்டதும் பாரதீய ஜனதாவை ஆட்டுவிக்கிறார் எடப்பாடி.
அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பலவீனத்தை அறிந்து கொண்ட மத்திய அரசு தான் நினைத்த அனைத்தையும்
தமிழகத்தில் செயற்படுத்தியது. எடப்பாடியின்
குடுமியை தமிழக பாரதீயஜனதா பிடித்து ஆட்டியது. தமிழக பாரதீய ஜனதாக் கட்சித்தலைவர் முருகன், வேலுடன் யாத்திரை சென்றதைத் தடுக்க தமிழக
அரசு மேற்கொண்ட முயற்சி பலிக்கவில்லை.
தமிழக
முதல்வரை பாரதீய ஜனதாதா முடிவு செய்யும், தமிழக ஆட்சியில் பங்கு 100 தொகுதிகளில் பாரதீய
ஜனதா போட்டியிடும், 60 தொகுதிகளில்
தமிழகத்தில் பாரதீயஅனதா போட்டியிடும் என கொடுக்கப்பட்ட குடைச்சல்களை எரிச்சலுடன் பார்த்தது தமிழக அர்சு.
சசிகலாவுடன்
சமரசமாகப் போனால்தான் வெற்றி பெறலாம் என்பதை பாரதீய ஜனதா தெரிந்து வைத்துள்ளது. சசிகலாவிச்
சேர்ப்பதற்கு எடப்பாடி துளியும் விரும்பவில்லை. தேர்தலில் வெற்றி தோல்வி ஏற்படுவது
வழமை இந்த்த் தேர்தலில் தோல்வியடைந்தால் அடுத்த தேர்தலில் வெற்றி பெறலாம் அப்போது தலைமையைத் தக்க வைக்கலாம் என்ற நம்பிக்கை
எடப்பாடியிடம் இருக்கிறது.
சசிகலாவின் உதவியால் வெற்றி பெற்றால் சாசிகலாவுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். பழைய படி மன்னார் குடி உறவுகளுக்கு அடிமையாக இருக்க வேண்டும். இதனை முன்னிறுத்தியே தனது கட்சியில் உள்ள சசிகலாவின் ஆதரவாளர்களை அடக்கினார் எடப்பாடி.
தமிழகத்தில்
செல்வாக்கு இல்லாத பாரதீய ஜனதாவுக்கு அதிக தொகுதிகளை விட்டுக்கொடுக்கக் கூடாது எனபதில்
உறுதியாக நின்று எடப்பாடி வெற்றி பெற்று விட்டார்.இந்தியாவின் மற்றைய மாநிலத் தலைவர்கள் எல்லோரும் அமித் ஷாவுக்குக் கட்டுப்பட்டு விட்டுக்கொடுத்தார்கள். அமித் ஷாவே டெல்லி செல்வதைத்
தாமதப் படுத்தி எடப்பாடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.அமித் ஷாவின் மாயா ஜாலம் எடப்பாடியிடம்
எடுபடவில்லை.
திராவிட
முன்னேற்றக் கழகத்தில் இருந்து சென்ற இரண்டு தலைவர்களும் குஷ்பு, கெளதமி போன்ற சினிமாப் பிரபலங்களும் தம் கட்சியில் சேர்ந்ததால்
தமது பலம் கூடிவிட்டதாக பாரதீய ஜனதாவினர் நம்புகின்றனர்.
இந்தியாவின் வட மாநிலங்களில் காங்கிரஸை அகற்றி விட்டு தாமரையை
மலரச் செய்தது பாரதீய ஜனதா. தென் மாநிலங்களை
தாமரை மொட்டு கூர அரும்பவில்லை என்பது கெளரவப்
பிரச்சினையாகும்.
தோழமைக் கட்சித் தொண்டர்களின் தயவில்தான் தமிழகத்தில் தாமரையின் எதிர் காலம் தங்கி உள்ளது.
No comments:
Post a Comment