சர்வதேச ஸ்கையிங் அமைப்பால் விதிக்கப்பட்ட தடையை இரத்து செய்வதன் மூலம், 2026 குளிர்கால ஒலிம்பிக்கில் ரஷ்ய , பெலாரஷ்ய ஸ்கையர்கள் போட்டியிடுவதற்கான வழியை விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் செவ்வாயன்று திறந்தது.
ரஷ்யா
இந்த தீர்ப்பை வரவேற்றதுடன், அடுத்த ஆண்டு மிலன்-கோர்டினாவில் நடைபெறும் குளிர்கால
விளையாட்டுப் போட்டிகளில் ரஷ்ய பாப்ஸ்லீ மற்றும் லூஜ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க
அனுமதிக்கும் பிற முடிவுகளையும் சுட்டிக்காட்டியது.
ஒலிம்பிக்கிற்கான
தகுதிப் போட்டிகளில் ரஷ்ய , பெலாரஸைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்க தடை விதிப்பதாக
அக்டோபரில் FIS அறிவித்தது.
2022
ஆம் ஆண்டு மாஸ்கோ உக்ரைன் மீது படையெடுத்ததிலிருந்து இரு நாடுகளைச் சேர்ந்த ஸ்கையிங்
மற்றும் ஸ்னோபோர்டிங் போட்டியாளர்கள் FIS போட்டிகளில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளனர்,
ஆனால் பிப்ரவரி 6 முதல் 22 வரை நடைபெறும் மிலன்-கோர்டினா விளையாட்டுப் போட்டிகளில்
நடுநிலைப் பதாகையின் கீழ் பங்கேற்க அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
ரஷ்யா,பெலாரஸைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கடுமையான நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் நடுநிலைப் பதாகையின் கீழ் ஒலிம்பிக்கில் போட்டியிட அனுமதிக்கப்படுவார்கள் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு செப்டம்பர் மாதம் அறிவித்தது.
.jpeg)
No comments:
Post a Comment