Monday, January 9, 2012

தகர்ந்தது இந்திய அணி

சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாடிய அவுஸ்திரேலியா ஒரு இன்னிங்ஸில் 68 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்திய அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே கவாஸ்கர் போடர் கிண்ண டெஸ்ட்போட்டி அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. நான்கு டெஸ்கள் கொண்ட இறுதி தொடரில் முதல் இர ண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அவுஸ்திரேலியõ வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் டோனி, துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். சிட்னி ஆடுகளம் முதலில் வேகப் பந்து வீச்சுக்கும் பின்னர் துடுப்பாட்டத்துக்கும் சாதகமாக இருந்து வருகிறது. 2010 ஆம் ஆண்டு முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலியா 127 ஓட்டங்களிலும் 2011 ஆம் ஆண்டு 281 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தது. இம் மைதானத்தில் இரண்டாவதõக களமிறங்கிய பாகிஸ்தான் 333 ஓட்டங்களும் இங்கிலாந்து 664 ஓட்டங்களும் எடுத்தன. இந்த வியூகம் அனைத்தும் தெரிந்த டோனி களத்தடுப்பைத் தெரிவு செய்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது.
அவுஸ்திரேலிய @வகங்களுக்கு ஈடு கொடுக்க முடியாத இந்திய துடுப்பாட்ட வரிசை பொல பொலவென விழுந்தது. டோனி ஆட்டமிழக்காது 57, டெண்டுல்கர் 41, ஷேவாக் 30, @காஹ்லி 23, அஸ்வின் 20 ஓட்டங்களை எடுத்தனர். கம்பீர், ச‌ஹீர்கான், இஷாந்த் ச‌ர்மா, யாதவ் ஆகியோர் ஓட்டமெதுவும் எடுக்காது ஆட்டமிழந்தனர். ஏனையோகர் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 191 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.
அவுஸ்திரேலிய அணி 37 ஓட்டங்களில் மூன்று விக்கெட்டுக்களை இழந்ததால் இந்தியாவுக்கு ஓரளவு நம்பிக்கை பிறந்தது. முதல் நாள் அவுஸ்திரேலியா 3 விக்கெட்டுகளை இழந்து 116 ஓட்டங்களை எடுத்தது.
அணித்தலைவர் மைக்கல் கிளார்க்கும் முன்னாள் தலைவர் பொண்டிங்கும் விளையாட்டைத் தமது கைகளில் எடுத்துக் கொண்டனர். இவர்களின் அபார துடுப்பாட்டம் இந்திய பந்து வீச்சாளர்களை துவம்ச‌ம் செய்தது. டோனியின் கள வியூகங்கள் எவையும் இவர்களைக் கட்டுப்படுத்தவில்லை.
கிளார்க் பொண்டிங் ஜோடி 74.5 ஓவர்கள் விளையாடி 288 ஓட்டங்களை எடுத்தது. பொண்டிங் 134 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இரண்டு வருடங்களின் பின் சதம் அடித்து தனது திறமையை மீண்டும் நிரூபித்தார் பொண்டிங். இரண்டாம் நாள் நான்கு விக்கெட்டுகளை இழந்து 482 ஓட்டங்கள் எடுத்தது அவுஸ்திரேலியா. கிளார்க் 255 ஓட்டங்களையும் ஹசி 55 ஓட்டங்களையும் எடுத்தனர்.
கிளார்க் முதலாவது இரட்டைச் சதம் அடித்தார் என்று பத்திரிகைகளில் பிரசுரமானமை காய்வதற்கிடையில் மூன்றாம் நாள் முச்சதமடித்து பல புதிய சாதனைகளை நிலை நாட்டினார் கிளார்க். இந்த ஜோடியை பிரிக்க முடியாத இந்திய வீரர்கள் தவித்தபோது அவுஸ்திரேலியா ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. நான்கு விக்கெட்டு இழப்புக்கு 659 என்ற பிரமாண்ட ஓட்ட எண்ணிக்கையுடன் இந்தியாவைத் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.
கிளார்க் ஆட்டமிழக்காது 329 ஓட்டங்களும், ஹஸி ஆட்டமிழக்காது 150 ஓட்டங்களும் எடுத்தனர். அவுஸ்திரேலியா 468 ஓட்டங்கள் முன்நிலை பெற்றது. வெற்றியை மறந்து போட்டியைச் சமப்படுத்த வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது இந்தியா.
கம்பீர் 83 சச்சின் 80, லக்ஷ்மன் 66, அஸ்வின் 62 ஓட்டங்கள் எடுத்தனர். இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 460 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.
ஹல் பொன்ஸீ ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டு டெஸ்ட்போபாட்டிகளிலும் டெண்டுல்கர், அஸ்வின் மட்டும் தான் சிறப்பாக விளையாடினார்கள். ஏனையோர்போராடாது அவுஸ்திரேலியப் பந்து வீச்சாளர்களிடம் சரணடைந்தனர். கம்பீரும்,ஷேவாக்கும் இன்னமும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. பொண்டிங்கும் ஹசியும் தமக்கெதிரான விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ளனர். 99 ஆவது ஓட்டம் எடுத்த போது ரன் அவுட் வாய்ப்பில் இருந்த பொண்டிங் 40 ஆவது ச‌தமடித்தார்.
33 இனிங்ஸ்களில்ச‌தமடிக்காத பொண்டிங் சதமடித்தார். சச்சின் 51 களின் 41 ச‌தங்களுடன் முன்னிலையில் உள்ளõர். 182 ஓட்டங்கள் எடுத்திருந்த கிளார்க் அடித்த பந்தை இஷாந்த் ச‌ர்மா தவறவிட்டதால் புதியசாதனைகள் பல வற்றைச்செய்தார்

சிட்னி மைதானத்தில் முதல் நாளில் இந்தியாவின் 10 விக்கெட்டுகளையும் அவுஸ்திரேலியாவின் மூன்று விக்கெட்டுகளை இழந்தனர். இரண்டாம் நாள் இந்திய வீரர்கள் அவுஸ்திரேலியாவின் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் விழுத்தினர். மூன்றாம் நாள் இந்தியாவின் இரண்டு விக்கெட்டுக்களை விழுந்தன. நான்காம் நாள் இந்தியாவின் எஞ்சிய எட்டு விக்கெட்டுகளும் வீழ்ந்தன.
முச்சதம் அடித்து கிளார்க் சாதனை
சிட்னி டெஸ்டில் அவுஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கேல் கிளார்க் மூன்று சதம் அடித்ததன் (329) மூலம் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். அது பற்றிய விவரங்கள் வருமாறு,
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை மொத்தம் 25 முறை முச்சதம் அடிக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 4 பேர் தலா இரு முறை முச்சத சாதனையை செய்துள்ளனர்.
கடந்த 2000 ஆம் ஆண்டில் இருந்து மட்டும் 10 டிரிபிள் செஞ்சரி எடுக்கப்பட்டுள்ளன.
முச்சதம் விளாசிய 6 ஆவது அவுஸ்திரேலிய வீரர் மற்றும் 7 ஆவது தலைவர் என்ற பெருமையும் கிளார்க்குக்கு கிடைத்துள்ளது. ஏற்öகனவே @மற்கிந்தியத் தீவுகளின் லாரா 400, இலங்கையின் மஹேல ஜயவர்த்தன 374, அவுஸ்திரேலியாவின் மார்க் டெய்லர் 334, இங்கிலாந்தின் கிரகாம் கூச் 333, பாகிஸ்தானின் யூனிஸ்கான் 313, அவுஸ்திரேலியாவின் பாப் சிம்ப்சன் 311 ஆகியோர் கேப்டனாக இருந்து 300 ஓட்டங்களுக்கு மேல் குவித்தவர்கள் ஆவர். மைக்கல் கிளார்க் 5 ஆவது வரிசையில் களமிறங்கி இந்த முச்சதத்தை ருசித்துள்ளார். டொப் 4 துடுப்பாட்ட வீரர்களை தவிர்த்து அதற்கு அடுத்த வரிசைகளில் முச்சதம் கண்ட 2 ஆவது வீரர் கிளார்க் ஆவார். இதற்கு முன்பு அவுஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் (304 ஓட்டங்கள்) இங்கிலாந்துக்கு எதிராக, 1934) 5 ஆவது வரிசையில் மூன்று சதம் அடித்திருக்கிறார்.
129 ஆண்டு கால சிட்னி மைதான வரலாற்றில் முச்சதம் அடித்த முதல் வீரர் என்ற மகத்தான சிறப்பும் கிளார்க் வசம் ஆகியுள்ளது. இதற்கு முன்பு 1903 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் டிப் போஸ்டர் 287 ஓட்டங்கள் எடுத்ததே இங்கு அதிகபட்சமாக இருந்தது. மூன்று சதம் அடிக்கப்பட்ட 19 ஆவது மைதானம் சிட்னியாகும். ஆண்டிகுவா, ஹெட்டிங்லே ஆகிய மைதானங்களில் தலா மூன்று முறை முச்சதங்கள் பதிவாகியுள்ளன.
இந்த டெஸ்ட்டில் மைக்கேல் கிளார்க் ரிக்கி பொண்டிங் ஜோடி 4 ஆவது விக்கெட்டுக்கு 288 ஓட்டங்களும் மைக்கல் கிளார்க், மைக் ஹஸி ஜோடி 5ஆவது விக்கட்டுக்கு 334 ஓட்டங்களும் சேகரித்தனர்.
டெஸ்ட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் இரண்டு முறை 250 ஓட்டங்களுக்கு மேல் பார்ட்னஷிப் அமைந்தது இதுவே முதல் முறையாகும்.
முச்சதம் அடிக்கப்பட்ட முந்தைய 24 ஆட்டங்களில் 8 மட்டுமே அந்த அணியின் வெற்றியில் முடிந்திருக்கின்றது. மற்ற ஆட்டங்கள் சமனாகின.
ரமணி

சூரன்.ஏ.ரவிவர்மாமெட்ரோநியூஸ் 09/01/12



No comments: