Monday, January 2, 2012

ஏமாற்றியது இந்தியா: சாதித்தது அவுஸ்திரேலியா


பெரும் எதிர்பார்ப்புடன் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற இந்திய அணி முதலாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது. கிறிஸ்மஸ் தினத்துக்கு அடுத்த நாளான பொக்ஸிங்டே என்றழைக்கப்படும் கொண்டாட்ட நாளில் மெல்பேர்னில் ஆரம்பமான டெஸ்ட் போட்டியில் நான்காம் வெற்றியைக் கையில் வைத்திருந்த இந்திய அணி அவுஸ்திரேலியப் பந்து வீச்சாளர்களிடம் சரணடைந்து வெற்றியைப் பறிகொடுத்தது. முதல் டெஸ்ட்போட்டியில் தோல்வி என்ற டோனியின்ராசி மெல்பேர்னிலும் தொடர்ந்தது.
சச்சின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. சச்சின் சதமடிக்கவில்லை என்றாலும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் நம்பிக்கையளிக்கும் வகையில் விளையாடினார்.அவுஸ்திரேலிய வீரர்களான பொண் டிங், ஹசி ஆகியோர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. தமது துடுப்பாட்டத்தினால் விமர்சனங்களின் வாயை இருவரும் அடைத்தனர். இந்தியப் பந்து வீச்சாளர்களுக்கும் அவுஸ்திரேலியப் பந்து வீச்சாளர்களுக்கும் இடையேயான கடுமையான போட்டியில் அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் வெற்றிபெற்றனர்.
இந்தியத் துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்றிய போதும் சச்சினும் அஸ்வினும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் போராடினார்கள். உமேஸ் யாதவ் தன்பங்குக்கு சிறிது நேரம் அச்சுறுத்தினார்.
அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்ஸில் 333 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 282 ஓட்டங்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 240 ஓட்டங்கள் எடுத்தது. 292 என்ற வெற்றி இலக்குடன் உணவு இடைவேளைக்கு சிறிது முன் களமிறங்கியது. இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு 292 ஓட்டம் மிக இலகுவானது என்று ரசிகர்கள் நம்பினார்கள். ஆனால் அவுஸ்திரேலிய பந்து வீச்சுக்கு முகங்கொடுக்கமுடியாத இந்தியா நான்காம் நாள் 169 ஓட்டங்கள் எடுத்து படுதோல்வியடைந்தது.
இந்திய, அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் ஒரேநாளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஹிபொன்ஸ், பற்றிசன், சஹீர்கான், உமேஸ் யாதவ், அஸ்வின், சிடில் ஆகியோர் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தி விக்கெட் வேட்டை நடத்தினார்கள். 2003 ஆம் ஆண்டு அடிலெ# ட்டில் அவுஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் 230 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் விரட்டிய இந்திய அணி ஆறு விக்கெட்களை இழந்து 233 ஓட்டங்கள் எடுத்து ஒரேஒருமுறை மட் டும் வெற்றிபெற்றது.
இந்திய அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான கம்பீரின் இடம் பறி@பாகும் அபாயம் உள்ளது. 2010ஆம் ஆண்டு ஜனவரியில் பங்களாதேஷûக்கு எதிரான போட்டியில் சதமடித்த கம்பீர் அதன் பின்னர் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி எட்டு அரைச்சதமடித்துள்ளார். 2008ஆம் ஆண்டு டெஸ்ட்போட்டிகளில் விளையாடி மூன்றுசதம் ஆறு அரைச்சதம் உட்பட 1134 ஓட்டங்கள் எடுத்தார். 2009ஆம் ஆண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி நான்குசதம் ஒரு அரைச்சதம் உட்பட 727 ஓட்டங்கள் எடுத்தார். 2010ஆம் ஆண்டு 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒருசதம் நான்கு அரைச்சதம் உட்பட 524 ஓட்டங்கள் எடுத்தார். கடந்த ஆண்டு எட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி நான்கு அரைச்சதம் உட்பட 470 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.
அந்நிய மண்ணில் தடுமாறும் ட்ராவிட்டின் அண்மைய சோகம் அவுஸ்திரேலியாவிலும் தொடர்ந்தது கடைசியாக ட்ராவிட் விளையாடிய ஆறு இன்னிங்ஸ்களில் முறையே 4,30,2,2,24,2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மெல்பேர்னில் இதுவரை ஏழு இன்னிங்ஸ்களில் விளையாடிய ட்ராவிட் 113 ஓட்டங்கள் தான் எடுத்தார். 2007ஆம் ஆண்டு அதிகபட்சமாக 42 ஓட்டங்கள் எடுத்தார்.
அவுஸ்திரேலியாவில் பயிற்சியாளர் பிளட்ச்சரின் தோல்வி இந்திய அணியையும் பீடித்துள்ளது. இவரது பயிற்சியின் கீழ் 2002 03ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற இங்கிலாந்து 41 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. 2005ஆம் ஆண்டு மீண்டும் அவுஸ்திரே லியாவுக்குச் சென்ற இங்கிலாந்து ஐந்து போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்தது. பிளட்ச்சரின் பயிற்சியின் கீழ் இங்கிலாந்து, இந்திய அணிகள் 11 டெஸ்ட்போட்டிகளில் விளையாடி 10 போட்டிகளில் தோல்வியடைந்தன. பிளட்சர் பயிற்சியாளரான பின்னர். கடந்த ஆறுமாதங்களில் வெளிநாட்டில் விளையாடிய இந்தியா மேற்கு இந்தியத் தீவுகளில் (10) வெற்றிபெற்றது. இங்கிலாந்து (40) தோல்வியடைந்தது. அவுஸ்திரேலியாவிலும். முதல் டெஸ்ட்டில் தோல்வியடைந்தது.
இந்திய, அவுஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட்போட்டி நாளை செவ்வாய்க்கிழமை சிட்னியில் ஆரம்பமாகிறது. சிட்னி மைதானத்தில் நடைபெறும் 100 ஆவது டெஸ்ட் போட்டி இது.
சிட்னி மைதானம் வேகப்பந்துக்கு சாதகம் என்பதால் அவுஸ்திரேலியாவுக்கு பிரகாசமாக உள்ளது. சிட்னியில் 1882ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய இங்கிலாந்து அணிகளின் முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.
சிட்னி மைதானத்தில் கடந்த ஆண்டு விளையாடிய இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகியவை முதலில் துடுப்பெடுத்தாடி குறைந்த ஓட்டங்களையே பெற்றன.
வானதி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ் 02/01/12

No comments: