இன்றையவிழாவுக்கு
தலைமைவகிக்கின்ற மதிப்புக்குரிய திரு தேவராஜ் அவர்களே
மற்றும் இந்த மேடையிலே பல்வேறு
உரைகளை ஆற்றுவதற்கு அமர்ந்திருக்கின்ற பெரியோர்களே,சபையிலே வீற்றிருக்கின்றெ பெரியோர்களே,
நண்பர்களே எல்லோருக்கும் என்னுடைய வணக்கத்தை முதல் கண் தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்றைய நிகழ்ச்சியிலே இரண்டு
அம்சங்கள் இடம் பெற இருக்கின்றன.
முதன்மையாக நூல்வெளியீடு அமைந்திருந்தாலும் அதனிலும் பார்க்க மேலாக திரு
ராஜ
ஸ்ரீ காந்தனுடைய நினைவுப்பேருரையை நாம் கேட்டிருந்தோம். திரு
மேமன் கவி அவர்கள் ராஜ
ஸ்ரீ காந்தனின்
கருத்துக்களின் ஆற்றல் பற்றி பல்வேறுதுறைகளில்
அவர் ஆற்றிய பணிகள்
பற்றி ஒரு காத்திரமான உரையை
இங்கு ஆற்றியுள்ளார். அவர்கால் வைத்த ஒவ்வொரு துறையும்
மிகச்செழிப்பாக இருந்தமைக்கு அவர் அயராது வழங்கிய
உழைப்பு மிகவும் முக்கியமான ஒருவிடயம்
என்று இங்கே சொன்னார்கள். இலக்கிய ஆக்கங்கள் பற்றி
அவை சிறப்பானவை.
சமூகங்கள் பற்றிய
பார்வையும்,அந்த சமூக
மேம்பாட்டுக்கு நேராகவும் மறைமுகமாகவும்
தெரிவித்த சில கருத்துக்கள் தொடர்பாகவும் உண்மையிலேயேநாங்கள்
விரிவாக ஆராயப்படவேண்டிய ஒரு தேவை இருக்கின்றது.
சமூகமேம்பாடுபற்றிச்சொல்லும்போது வடமராட்சியிலும்
சரி யாழ்ப்பானக்குடா நாட்டிலும் சரி பல்வேறு
தலைமுறைகள்
அந்த விடயத்திலே
மிகவும் ஆழமான
பணிகளை
ஆற்றிவந்துள்ளன. புதிய தலை
முறைகள் என்ற
வகையிலே காந்தனுடைய பணிகள் மிகவும்
வித்தியாசமாக இருக்கின்றன.அதற்கு வாய்ப்பாக
அமைந்தது பத்திரிகைத்துறையில்
அவர் வரைந்த கலை
நுட்பம். அவற்றினூடாக அவருடைய சேவை மிகப்பரந்தளவில் கொண்டுசெல்லுகின்ற ஒரு ஆழுமையும் அவருடன் சேர்ந்திருக்கும்.
எந்த விசயமென்றாலும்
அவருடன் பேசுகின்றபொழுது எந்த மனிதரையும்
ஊக்குவிக்கின்ற ஒரு மனப்பாங்கு அதன்விளைவாக அவருடைய வெற்றியைக் காணக்கூடிய மனச்சந்தோஷம் அவருடைய கருத்துக்களிலும் சொற்களிலும்
எப்பொழுதும் எப்பொழுது
இருக்கும்.
இனி அடுத்த முக்கிய நிகழ்ச்சியாக
நூல் வெளியீடு பற்றிப்பார்க்கின்றபோது, வடக்கே போகும் மெயில்
என்ற சிறுகதைத்தொகுதி பற்றிய அறிமுக உரையை
நிகழ்த்துமாறு என்னை அழைத்த விழா
ஏற்பாட்டாளர்களுக்கும் குறிப்பாக ரவிவர்மா அவர்களுக்கும் முதலில் நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன். எனது உரையானது நான்கு
விடயங்களை அடி ஒற்றி இருக்கும்
என்று சொல்லவிரும்புகிறேன்.
ஒன்று
நூலாசிரியர் பற்றிய பின்னணி, இந்த நூலிலே அடங்கி
இருக்கின்ற சிறுகதைகள் பற்றிய அறிமுகம்,இந்தச்சிறுகதைகள்
பற்றிய அளவும் அந்தக்கதைகள் வெளிப்படுத்துகின்ற
கருப்பொருளும், இறுதியாக இந்தச்சிறுகதைத்தொகுதியிலே ரவிவர்மா கையாண்ட மொழி நடை.
இலக்கிய உலகிலே பத்திரிகையாளராக
நடமாடுவது அபூர்வம் என்ற கருத்தினை அவுஸ்திரேலியாவிலிருந்து
இந்த நூலுக்கான ஆசி உரையை வழங்கிய
திரு.முருகபூபதி அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்தவிடயத்திலே தொடங்கி திரு.ரவிவர்மா அவர்களின் பின்புலம்
பற்றிக்குறிப்பிடுவது
சாலப்பொருந்தும் என நினைக்கிறேன். அவருடைய பின்னணிகள் சிலவற்றை திரு.தேவராஜா அவர்கள் ஏற்கெனவே சொல்லியிருந்தார்கள்.இருந்தாலும் அவற்றை மீளப்பார்ப்பது என்னுடைய கடப்பாடாகும்.ஆக்கத்திறன் என்பது ஒரு மனிதனிடம்
காணப்படுகின்ற நுண்மதியாகும்.உயர் நுண்மதியாகும் அதேவேளையிலே நாங்கள் இங்கு
காணுகின்ற படைப்பாளிகள்
அனைவரும் நுண்மதியாளர் என்றும் சொல்லமுடியாது.மறுபுறமாக
உயர் நுண்மதி
உள்ள எல்லோரும் படைப்பாளிகளாக
விளங்குகின்றார்கள் என்றும் சொல்லமுடியாது.ஆயினும், ஒரு படைப்பாளியாக
விளங்குவதற்கு
ஒருவர் இளமைக்காலத்தில் இருந்து தன்னுடைய சிந்தனை, செயல் அது தொடர்புடைய பல்வேறுவிடயங்களிலும் கருதொன்றிச்செயற்படுதல்,வாசித்தல் ஆகியன மிலவும்
முக்கியமாகும். இந்தவிடயத்தைப்பொறுத்தவரையில் ரவிவர்மாவினது வெளிப்பாடு
இப்பொழுதான் எங்களுக்குத்தெரியக்
கூடியதாக இருக்கின்றபோதிலும்
அவர் பாடசாலைக்காலத்தில் இருந்து எவ்வாறு
செயற்பட்டார் என்பது தொடர்பான
பின்புலம் பற்றி
பார்க்க வேண்டியதும் அவசியமாகும்.
ஒருகாலகட்டத்திலே
குறிப்பாக யாழ்ப்பாணத்திலே பிரித்தானியர்
ஆட்சிக்காலத்தில் கிறிஸ்தவ
மதம்
மிக உயர்ந்த காலகட்டத்தில்
யாழ்ப்பாணத்தில் சைவத்தையும்
தமிழையும் பாது
காப்பதற்கு ஆறுமுக
நாவலர் அவர்கள் பெரும்
தொண்டாற்றியிருக்கின்றார்கள். நாங்கள்
எல்லோரும் அறிந்த விடயம். ஆனல்,அதனையொத்த அதனிலும் மேலானா
சமூக ஈடுபாடு என்றவிடயத்தில் மிகவும் அக்கறை கூடியவராக இருந்த திரு.
சூரன் அவர்களும் நாவலரை ஒத்த பணியை ஆற்றி இருக்கின்றார்
என்பதை ஒருகட்டத்தில் பேராசியர் சிவத்தம்பி
அவர்களும் எடுத்துக்காட்டி இருக்கின்றார். இவருடைய கல்விப்பணி, சமயப்பணி
ஆகியன அந்தககாலத்திலே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுபற்றி நான் பெரிதாக
எடுத்துச்சொல்ல விரும்பவில்லை. இருந்தாலும்
மறுபக்கத்தில் திரு
சூரன் அவர்கள் ஒரு சிறந்த கலைஞர்,ஒரு சிறந்த,விமர்சகர் என்று
நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் .
பராசக்தி
படம்
வந்திருந்த கால
கட்டத்தில்
அந்தப்படத்தைப்பற்றிய கருத்து
முரண்பாடுகள் இருந்தன.
விமர்சனம்
பற்றிய பரந்த பார்வை
இல்லாத காலத்திலும் கூட ஒரு
சிறந்த விமர்சனத்தை எப்படிச்செய்யலாம் என்பதற்கு அவர்
ஒரு எடுத்துக்காட்டாக இருந்திருக்கின்றார்.
அதேபோல
ரவிவர்மா
அவர்களுடைய தந்தை திரு
ஏகாம்பரம் அவர்கள் ஒரு
சிறந்த ஓவியர்.
அவர் என்னுடைய பாலர் வகுப்பு
ஆசிரியரும் கூட. அவர் சார்ந்த ஓவியச்சிறப்புக்களும் ரவிவர்மாவிடம் இருக்கின்றது.இப்படியான
சில சிறப்புக்கள்
மரபணுசார்ந்த ஒருவரிலே இடம் பெறுகிறது.
அது கருவிலே திருவாக
உதித்ததுபோல இவருடைய
பிறப்பிலும் இது தொடர்பான
ஏற்பாடுக செய்யப்பட்டிருக்கவேண்டும் என நாங்கள் கருத
வேண்டும்.
அதேபோல பாடசாலைக்காலத்தில் மிகவும் வாய்த்த ஒருவிடயம் எங்களுடைய வாசிப்புப்பழக்கம். அந்த வாசிப்புப்பழக்கம் எங்களுக்கு பல்வேறு
மட்டங்களிலும் விமர்சிக்கப்படும் ஒரு
விடயமாக இருக்கின்றது.இருந்தாலும் வாசிக்கும்
போது ஏற்படுகின்ற அந்த
இன்பமும் சுகமும்
வசிப்புப்பழக்கத்தினூடாக வந்து சேருகிறது.
தேவரையாளி இந்துக்கல்லூரியிலே நீண்டகால அதிபராக இருந்த திரு.சீனித்தம்பி அவர்கள் சுற்றுவாசிப்பு
முறையை பாடசாலையிலே அறிமுகம்
செய்ததன் விளைவாக
எங்களில் பலர் ஆறாம் ஏழாம்
வகுப்புப்படிக்கும்
கால கட்டத்திலே
ஏறக்குறைய நாற்பது, ஐம்பது புத்தகங்களை வாசிப்பதற்குரிய வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுத்திருக்கின்றது. அவர்களில் ஒருவராகத்தான் எங்களுடைய
ரவிவர்மா
அவர்களும் இருக்கின்றார். அந்தப்பழக்கம் அவருக்கு இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
அவருடைசுய பார்வைகள் விரிவடைந்ததற்கு
வாசிப்புப்பழக்கம்
மிக முக்கியமாக இருக்கின்றது.
அதனிலும் மேலாக
அவருடன் சேர்ந்து
வாழ்ந்தவர் திரு
ராஜ
ஸ்ரீ காந்தன். அவருடையா பணிப்பாணைகளின் கீழ், ஆலோசனைகளின் கீழ்
தான் எண்ணுகின்ற விடயங்களை மிகவும்
புடம் போட்டு சிறந்த முறையில்வெளிக்கொணருவதற்கான
ஏற்பாடுகள் ஒரு சகபாடி என்ற
முறையில் காந்தனூடாகக்கிடைத்தது
அவருக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.
வடக்கே போகும் மெயில்
என்ற இந்த நூல்ராஜ
ஸ்ரீ,
காந்தனுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இந்த நூலுக்கான ஆசிஉரையை
அவுஸ்திரேலியாவிலிருந்து திரு முருகபூபதியும்,முன்னுரையை
கனடாவிலிருந்து திரு நவம் அவர்களும்
வழங்கியுள்ளனர். எல்லாமாக 16 சிறுகதைகள் இந்த தொகுதியிலேஇடம்பெற்றுள்ளன.இந்தத்தொகுதியிலுள்ள சிறுகதைகள்
ஆண்டுகளின் வரிசைப்படி 1979 ஆண்டு முதல் 2012 ஆம்
ஆண்டு வரை பல்வேறு சஞ்சிகைகளிலும்
பத்திரிகைகளிலும் வெளிவந்த 16 சிறுகதைகள் உள்ளன. சுடர்,ஈழநாடு
வாரமலர்,தினக்குரல்,தாயகம்,மல்லிகை,ஞானம்,யுத்ஃபுல் விகடன், மித்திரன்,கனடாவிலிருந்து வெளிவரும் யாதும்,ஜீவநதி,வீரகேசரி வாரவெளியீடு
ஆகியவற்றில் பிரசுரமான சிறுகதைகள் இத்தொகுதியில் உள்ளன. அவ்வக்காலங்களில் சமூகத்தில் இடம்பெற்றிருந்த விடயங்கள்
மற்றும் பிரச்சினைகள் இவருடைய கதைகளில் கருப்பொருளாக
உள்ளன. அவற்றுள்
முதலாவதாக உள்ள
சிறுகதை வடக்கே போகும் மெயில்.
இது இலங்கையில்
ஏற்பட்ட இனமுரண்பாடுகள் அதன் விளைவாக ஏற்பட்ட விளைவுகள்
ஆகியவற்றை வெளிப்படுத்துகின்ற கதையாக உள்ளது.1970 களிலே
இலங்கையில் நிலவிய அரசியல் சூழலில்
ரயில் பயணங்கள் மக்களுக்கு எற்படுத்திய
இடையூறுகள்அவற்றின் விளைவுகள்
ஆகியவற்றை இக்கதை வெளிப்படுத்துகின்றது. இன்னொரு ரயில் பயணம் ஆரம்பிக்கப்படும்போது
எப்படியான விளைவுகள்
ஏற்படும் என்பதை
மீட்டுப்பார்ப்பதற்கு இக்கதை அடிப்படியாக
உள்ளது.
பதினாறு கதைகளை இரண்டுவகையாகப்பிரிக்கலாம்.
ஒன்று ரவிவர்மா அவர்கள் 1990க்குமுன்னர்
எழுதிய கதைகளும்
அவற்றின் பின்புலங்களும் இரண்டு
1990க்குப்பின் எழுதிய கதைகளும் அவற்றின்
பின்புலங்களும் எவ்வாறு
வெளிப்படுத்துகின்றன. முதலாவது காலப்பகுதியிலே இவர் தொகுத்த
கதைகள்
தனிமனிதப்பிரச்சினைகளை
மையம் கொண்டு சமூகம் சார்ந்த
விடயங்களாக
அமைந்துள்ளதை அவதானிக்கமுடிகிறது.
இந்தத்தொகுதியிலே இடம் பெற்றுள்ள போனல் போகட்டும்,பொன்னுக்கிழவி மிலேனியம்
அப்பா, என்னைத்தெரியுமா ஆகிய கதைகள் இத்தகைய அடிப்படையில்
அமைந்துள்ளன.இதில் எடுத்தாளப்பட்ட பிரச்சினைகள் தனிமனித பிரச்சினைகளாக இருக்கின்றன. இந்தப்பிரச்சினைக்குரியகளம் அந்
தச் சூழலில்
இருக்கின்ற சமூகத்தினூடாக
எடுக்கப்பட்ட ஒரு
விடயமாக இருப்பதனாலே ஒருதனிமனிதனின்
பிரச்சினிகளில் காணுகின்ற
முடிவு எப்படி ஒரு சமூகத்தின் முடிவாக
இருக்கவேண்டும் என்ற வகையில்தான்
இந்தக்கதைகள்
அமைந்துள்ளன.
இலக்கியம் சமூக நோக்குடையதாக
இருக்க வேண்டும். அன்றாட வாழ்விலே மக்கள் எதிர்
கொள்ளும் சிரமங்கள்,சிக்கல்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தவேண்டும்.ஒருசமூகம் பிரச்சினையை எப்படிப்பார்க்கலாம், எப்படி
அணுகலாம்,எப்படித்தீர்வுகாணலாம் என்ற ஆலோசனைகளும் முன்
வைக்கப்பட்டுள்ளன.
இரண்டாவது
காலகட்டமான 90களின்
பின்னர் எழுதப்பட்ட
சிறுகதைகளைப்பார்க்கும்போது
சமகாலப்பிரச்சினைகளைத்தழுவியனவாக உள்ளன.இலங்கையின்
வரலாற்றுப்போக்கினை
மாற்றியமைத்த இனமுரண்பாடு,விடுதலைப்போராட்டங்கள் அதன் விளைவாக
ஏற்பட்ட மக்கள் அவலநிலை போன்றவற்றுக்கு முக்கியத்துவம்
அளிக்கின்ற கதைகளாக
உள்ளன. அண்மையிலே
திருவாளர் ஞானம்
அவர்கள் தனது சஞ்சிகையினூடாக வெளியிட்ட போர்க்கால இலக்கியங்கள் என்ற
தொகுதியை நாம் பார்த்திருக்கின்றோம். உண்மையிலேயே
போர்க்காலச்சூழலில் மக்ககள் எவ்வாறு
செயற்பட்டார்கள்?
அவர்களுடைய அவலங்கள்
என்ன? அந்த அவலங்களு க்குரிய காரணங்கள்
என்ன? அவற்றை உள்ளூர்
மட்டத்திலும்
சர்வதேச
மட்டத்திலும்
உள்ள படைப்பாளிகள்
எவ்வாறு பார்க்கிறார்கள்? அவற்றின்
ஊடாக என்ன படிப்பினையை
நாங்கள் படிக்க
வேண்டும் என்ற படிப்பினையை
அடக்கியது அந்தத் தொகுதி. ஏறக்குறைய அதை ஒத்த நிலையை நான் இந்தத்தொகுதியிலும் பார்க்கிறேன்.
ஆனால், இந்தக்கதைகள் நேரடியாக
இனமுரண் பாடுகளைப்பற்றிய
விடயங்களைக் கலந்துரையாடாமல் அதில்
சொல்லப்பட்ட கருப்பொருட்கள் தான் அவற்றைச்சிந்திக்கத்தூண்டுகின்ற பாங்கிலே அமைந்திருக்கின்றன.விடியலைத்தேடி,
குலதெய்வம், திக்குத்தெரியாத,தண்ணீர் தண்ணீர் ஆகிய கதைகள் ஏதோ
ஒரு வகையிலே இன
முரண்பாடுகளைச்சார்ந்தவையாக உள்ளன.
போர்க்காலச்சூழலால் சதாரண மககள்
மத்தியில் எழும்
மன எழுச்சிகள்,
அதனால் உண்டாகும் நெருக்கடிகள் ஆகியவற்றைத்தனது கதைகளினூடாக வெளிக்காட்டியமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்த இரண்டு
காலகட்டங்களிலும்தொகுக்கப்பட்ட கதைகள் இவ்வாறாக அமைகின்றன.
இனி இவருடைய மொழிக்கையாழ்கை
பற்றி நாங்கள் சிந்திக்கின்றபோது,
அண்மைக்கால சில இலக்கியங்களில்பயன்படுத்தப்படும் சில
சொற்பிரயோகங்கள் அவர்கள் சொல்வார்கள் மண்
வாசனை, களம் என்று. இப்படியான சொற்பிரயோகங்கள் சிலவேளையில் ஒரு செயற்கைத்தன்மையாகவும்
மாற்றம் பெறுகின்றன.
உண்மையிலேயே வாசிப்பவர்
அதைச் சரியாகப்
புரிந்து கொள்கின்ற விதத்தில் சொற்
பிரயோகங்கள்
அமையாது விட்டால் எந்தவிதமாகச்சிந்திக்க வேண்டும் என்ற சூழ்நிலையை வழங்காமல்
போய்விடலாம்.
ஆனால், அதற்கு
வித்தியாசமான முறையில்
இவருடைய மொழி நடை அமைந்துள்ளது
கவனிக்கப்படவேண்டியது. பாரதியார்
சொல்வதுபோல பொருள்புதிது
, சுவைபுதிது, சொல்லவந்த
முறை புதிது என்ற
விடயத்தைப்பார்க்கின்றபோது
அவற்றை ஒத்த தன்மை
இங்கும் காணப்படுகின்றது. மிக இலகுவான, படாடோபமற்ற, தெளிவான,
எடுத்துக்கொண்ட கருத்தை வாசிப்பவரின் உள்ளத்தில் புகுந்துவிடும் தன்மை உள்ளது.
தேவையற்ற சொற்சிலம்பங்கள் எந்தக்கதையிலும்
காணப்படவில்லை.இவையாவும் ரவிவர்மாவின்
கதைகளுக்கு
அணி சேர்த்துள்ளன.
ரவிவர்மா
அவர்கள் பத்திரிகைத்துறையில் ஈடுபடும்போது அவருக்கு யோசிப்பதற்குபல
விடயங்கள்
உள்ளன. ஆனால், இலக்கிய உலகிலே
கவனத்தில் இருக்கின்ற ஒரு
விடயமாக இந்தச்சிறுகதை நூல்
வெளியீடு அமைந்திருக்கின்றது. இதோடு மட்டும் அவருடைய
தொகுதி நின்று விடக்கூடாது.இன்னும்பலதொகுதிகள்
வெளிவரவேண்டும்என வாழ்த்துகிறேன். வணக்கம்
No comments:
Post a Comment