தமிழ்த்திரை
உலகில் ஓகோ எனப் புகழ்
பெற்றிருந்த வேளையில் படாபட் ஜெயலட்சுமி,ஷோபனா,சில்க்ஸ்மிதா,விஜி,மோனல்,லக்சுமி
ஸ்ரீ போன்ற நடிகைகள் தற்கொலை
செய்து பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தனர்.
இதே வரிசையில் இன்று சின்னத்திரை நடிகைகளான
ஷாலினி, மயூரி, வைஷ்ணவி,ஷரத்தா
என தற்கொலை பட்டியல் நீண்டு
கொண்டே இருக்கிறது.
நடிகைகளின் தற்கொலை பற்றிய மர்மம்
இன்னும் துலங்கவில்லை. இதனால் இவர்களுக்கு முக்கிய
இரண்டு காரணங்கள் இருப்பதாக திரை உலக வட்டாரத்திலிருந்து
கசியும் செய்திகள் தெரிவிக்கின்றன.
முதலாவது காதல்,இரண்டாவது குடும்ப
அரவணைப்பு இல்லாமை. ஸ்மிதா, மோனல்,படாபட்
ஜெயலட்சுமி,ஷரத்தா,வைஷ்ணவி ஆகியோரின்
தர்கொலையின் பின்னணியில் காதல் இருப்பதாகத் தெரிய
வருகிறது.ஆனால் அவற்றை நிரூபிக்க
முடியாததால் விசாரணகள் அனைத்தும் அப்படியே முடங்கியுள்ளன.
மெகா சீரியலுக்காக
அழுது வடியும் நடிகைகள் நிஜவாழ்வில்
ஏற்படும் சோகத்தை
தாங்க முடியாது தற்கொலையில் முடித்துக்
கொள்கின்றனர்.
அபலைப் பெண்களை
திரையிலும்,சின்னத்திரையிலும் ஏமாற்றும்
கதாபாத்திரங்கள்
நிஜ
வாழ்வில் அவர்களை
நிழல் போல் தொடர்வதனால் இந்த
மாதிரியாக அவர்கள்
அவசரஅவரசமாக தமது வாழ்க்கையை
முடித்துக் கொள்கின்றனர்.
சின்னத்திரை பற்றிக் கேள்விப்படும்
செய்திகள் நிஜமாகவே கண்களில்
இரத்ததை வரவழைக்கும்
சக்தி வாய்ந்தவை.புகழின்
உச்சியில் இருக்கும் நடிகைகளை
விழுத்துவதற்கென்றே சிலர் சின்னத்திரைக்குள்
நுழைகின்றனர்.
புகழ்,செல்வாக்கு,அந்தஸ்து என்று
உயரத்தில் இருக்கும்
போது கண்டதும் காதல் கொள்ளும் நடிகைகள்
நிஜத்தை உணரும் போது ஏமாற்றத்தைத் தாங்க முடியாது தற்கொலையைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
செல்வந்த குடும்பத்தச்
சேர்ந்த இளைஞன் அவன். பார்ப்பதற்குக் கண்ணியமானவன் போல்
தோன்றினான். ஆனால் அவனது மனதில் நச்சுப்பாம்பு
குடி கொண்டிருந்தது.சின்னத்திரை
இயக்குநரை மடக்கி மெகா விருந்தொன்று
வைத்தான்.அவனது
விருந்தில் மயக்கிய இயக்குநர் பணக்கார இளைஞனுக்கு தனது மெகா தொடரிலே சிறு வேடம் கொடுத்தார்.அதுவரை அமைதியாக இருந்த
அவன் மெகா தொடரில் நடிக்கத் தொடங்கியதும் தனது சுயரூபத்தைக் காட்டத்தொடங்கினார்.
அழகான இளம்
பெண்களைக் கண்டதும் உன்னைப் போல் ஹோம்லியான
பெண்ணைத்தான் தேடுகின்றேன் என்று தன் வலையில்
வீழ்த்திவிடுவான்.அப்புறம் அந்தப் பெண்ணின் கதி
அவ்வளவு தான்.இப்படியாக அவன்
பல பெண்களை ஏமாற்றுவான்.தாம்
ஏமாறியது தெரிந்ததும் அதனைப் பொறுக்க முடியாத
நடிகை தற்கொலையை மிக இலகுவாகத் தேர்ந்தெடுப்பாள்.
அம்மா,அப்பா,சகோதரர்கள்,நண்பர்கள்,உறவினர்கள்,என தன் வட்டத்துக்குள்
இருக்கும் அனைவரும் அப்பெண்ணுக்கு அந்நியமாகவே தோன்றுவர்.காதலித்தவர் மட்டுமே அவள் மனதில்
நிரந்தரமானவன் என்ற எண்ணம் ஏற்படும்.நடிகையின் தற்கொலையுடன் அவளது காதல் முடிந்து
விடும்.ஆனால் அவளை ஏமாற்றியவனோ
புதிய காதலியைத் தேடி வலை விரிக்க
ஆரம்பித்து விடுவான்.
தொலைக்காட்சியின் மிகச் சிறந்த தொகுப்பாளினி
அவள்.அவளுக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் உண்டு.சின்னத்திரை நடிகைகளின் வசந்த
வாழ்வு பற்றிக் கேள்விப்பட்டவள் மெகாத் தொடரில் நடிக்கத் தொடங்கினாள்.சின்னத்திரை அவளை
வாரி அணைத்துக்கொண்டது.ரசிகர்கள் அவளுக்கு அன்புத் தொல்லை கொடுத்தனர்.
அவளின் வாழ்க்கையில் புதிய வசந்தம் பிறந்தது.புதிய
இடம்,புதிய நண்பர்கள்,புதிய வாழ்வு என அகலக் கால் வைத்தாள்.வெளிநாட்டுப் பயணங்கள் நண்பர்களுடன்
அரட்டை என்பன முதலிடம் பெற்றது.குடும்பம், கணவன் பிள்ளை என்பன இரண்டாமிடத்துக்குத்
தள்ளப்பட்டது.முடிவு விவாகரத்துப் பெறும் நிலை ஏற்பட்டது.நடிகை விவாகரத்து செய்து விட்டாள்.
கணவனும் குழ்ந்தையும் ஆளுக்கொரு மூலையில் துவண்டு போயுள்ளனர்.
இளமை குன்றாத அழகுடன் காட்சியளிக்கும்
அந்தச் சின்னத்திரை நாயகிக்கு ஒரு மகன் உள்ளான்.அம்மா என்று அழைக்கும் மகன் உறுத்தலாக
இருக்க அக்கா எனக் கூப்பிடுமாறு உத்தரவிட்டாள்.அம்மா என்று அழைக்க ஆசைப்படும் மகன்
இப்போ பாட்டியை அம்மா என்கிறான்.
கல்லூரி ஆசிரியர் ஒருவர் சின்னத்திரையில்
கலக்குவதைப் பார்த்த ஆசிரியை ஒருவரும் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.ஒரு குழந்தைக்குத்
தாயான அந்த ஆசிரியையை நண்பர்கள் புகழ்ந்தனர்.ஒரு குழந்தைக்கு அம்மாவா நம்ப முடியவில்லை
எவ்வளவு இளமையாக இருக்கிறீர்கள் என்று நண்பர்களின் வார்த்தையில் கரைந்தாள் அந்த ஆசிரியை.
உங்களை டி.வியில் பார்த்தேன். ஐயோ எவ்வளோ
அழகா இருக்கீங்க என்ற தொலைபேசிப் புகழ்கள் அவளை மயக்கின.பாடசாலையும் குடும்பமும் பின்னுக்குத்
தள்ளப்பட்டன.சின்னத்திரை நண்பர்கள் முன்னிலை பெற்றனர்.அவள் கேட்ட பொருட்களை அன்பளிப்பாக
வழங்க
ஆண்கள் வரிசையில் நின்றனர்.
அப்பா,அம்மா வைத்த பெயரை ஸ்டைலாக மாற்றி
விட்டார். மகனை அக்காவின் மகன் என்கிறாள்.சின்னத்திரை தந்த மாயம் அந்த ஆசிரியையை முற்றுலுமாக
மாற்றிவிட்டது.
சின்னத்திரை நடிகைகளை மசியவைக்க புதிய
உத்திகளை சின்னத்தரை இயக்குநர்கள் கையாள்கிறார்கள்.அந்த இயக்குநர் விரும்பும் நடிகையைச்
சுற்றியேகதை நிகழும்.அவளது வசனங்கள் அனல் பறக்கும்.
ரசிகைகளும்,ரசிகர்களும் அவளைச் சுற்றியே வட்டமிடுவார்கள்.கோவில், தியேட்டர்,பீச்,பூங்கா
எங்கு சென்றாலும் அவளைக் கூட்டம் மொய்த்துவிடும்.
திடீரென அவளது பாத்திரம் அப்படியே கைவிடப்பட்டு
விடும். ஒருவாரம்,இரண்டு வாரம் அவளை வைத்து படப்பிடிப்பு நடைபெறாது என்ன விசயம் என்று
கேட்டால் இயக்குநர் கோபமாக இருக்கார், அவரைச் சந்தித்தால் சரிப்பட்டுவிடும் என்பார்கள்.
இயக்குநரை சந்தித்து அவரது விருப்பத்தை அவள் நிறைவேற்றினால்
அவளது பாத்திரம் மீண்டும் மெருகேறிவிடும். இல்லையேல் அவ்வளவு தான்.இப்படியான ஏமாற்றங்களே
தற்கொலைக்குத் தூண்டுகின்றன.
ஒன்றரை வருடத்தில் வரிசையாக நான்கு
நடிகைகள் தற்கொலை செய்துள்ளனர்.சாருகேஷ் என்ற இளைஞன் பணப்பிரச்சினையால் தற்கொலை செய்தான்.ஏனைய
நடிகைகளின் மரணம் மர்மமாகவே உள்ளது.
உள்வியல் தாக்கமே தற்கொலைக்கு முக்கிய
காரணம் எனப்படுகிறது.நடிகைகளின் தற்கொலையைத் தடுக்க எத்தனையோ முயற்சிகள் நடைபெறுகின்றன.என்றாலும்
இதற்கொரு முடிவு வருவதாகத் தெரியவில்லை.
ரமணி
மெட்ரோநியூஸ் 02 ஜூன்
2006
No comments:
Post a Comment