வடக்கே
போகும் மெயில் நூல் வெளியீட்டு
விழாவில் திரு.கே.எஸ்.சிவகுமாரன் ஆற்றிய சிறப்புரை
தலைவர் அவர்களுக்கும் மேடையில்
வீற்றிருப்பவர்களுக்கும் சபையோருக்கும் வணக்கம்.
நான் பேச வந்திருப்பது
புத்தகத்தைப்பற்றியல்ல.எனக்குப்பணிக்கப்பட்ட விசயம் ரவிவர்மாவின் புதியதொரு
பக்கத்தைப்பற்றி எடுத்துக்கூறுவதாகும். அவர் பத்திரிகைகளில் வெவ்வேறு
துறைகளைப்பற்றி எழுதியுள்ளார். அதில் ஒன்று சினிமா.இந்த விசயத்திப்பற்றிப்பேசமுன்னர் இந்த விழாவிலேராஜ ஸ்ரீ காந்தன் அவர்களுக்கு
நான் மெளனமாக எனது காணிக்கையை
அல்லது அன்பைத்தெரியப்படுத்துகிறேன்.அவருடைய சிறுகதைகளில் ஒன்றான
ஜேன் ஆச்சியை நான் ஆங்கிலத்தில்
மொழி பெயர்த்து அது ரஜீவ விஜய
சிங்க அவர்கள்தொகுத்த பிரிஜிஸ் என்றதொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது.
நண்பர்
சூரன் ரவிவர்மா அவர்கள் ஒரு
பத்திரிகையாளர்
என்பதை அறிவோம் ஆயினும்
அவர் தன்னை
முன்னிலைப்படுத்திச்செயற்படாததனால்
அவர் பற்றிய
முழு விபரங்களையும் நான் அறியவில்லை.
வீரகேசரிபத்திரிகையில்ஒருகட்டுரையைவெளியிடுவதற்காகஅலுவலகத்துக்குச்சென்றபோது ரவிவர்மா அவர்களைத்தற்செயலாகச்சந்தித்தேன். அப்போது
அவர் மெட்ரோ
நியூஸ் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். பின்னர் தினகரன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் திரு.
ராஜ ஸ்ரீ காந்தனின்
உறவினர் என்பதையும்
அறிந்தேன்.
திரு ரவிவர்மா அவர்கள் அரசியல் திறனாய்வாளராகவும் வெளிநாட்டுச்செய்திப்பகுப்பாளராகவும்
மெட்ரோவில் எழுதுவதை சில
வேளைகளில் நான் பார்திருக்கிறேன்.கொழும்புதமிழ்ச்சங்க விழா
ஒன்றில் கலந்துகொண்டபோது தனது நூல் ஒன்றை
வெளியிடப்போவதாகவும்
அந்தவிழாவிலே நான் கலந்து கொள்ள வேண்டும்
என்றும் கேட்டுக்கொண்டார்.நானும் அதற்கு
உடன் பட்டேன்.அதன் பின்னர் அவர்
என்னிடம் கூறினார் புத்தக் வெளியீட்டு விழாவிலே
தனது
நூலைத்திறனாய்வு செய்ய வேண்டியதில்லை தான் எழுதிய
சினிமாக்கட்டுரைகளை வைத்து
சிறப்பான விமர்சனத்தை அறிமுகம் செய்யவேண்டும் என்றார்.
எனக்குத்தர்ம
சங்கடமான நிலைமை ரவிவர்மாவின்
சினிமாக்கட்டுரைகளைப்படித்ததில்லை. தமிழில் சினிமாக்கட்டுரைகளை
எழுதுவதை நான் அண்மைக்காலமாக நிறுத்தி வைத்துள்ளேன்.
ரவிவர்மா
ஒருகற்றை பத்திரிகைக்கட்டுரைகளைத்தந்தார். ரமணி என்ற
பெயரில் ரவிவர்மா எழுதிய கட்டுரைகளைப்படிக்கத்தந்தார். இதற்கு நான் அவருக்கு நன்றி
சொல்லவேண்டும்.ஏனெனில் ரவிவர்மா அவர்கள் எனக்கு
புதியதொரு தமிழ்
சினிமாவைக்காட்டியுள்ளார்.
சினிமா பற்றிய
இவரது பார்வை
என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.தொடர்ச்சியாக
இருநூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை திரைக்கு
வராத சங்கதி என்ற
தலைப்பில் எழுதியுள்ளார்.பாடல் பிறந்த கதை
என்றதலைப்பில் கவிஞர் கண்ணதாசனின்
பாடல்கள் பற்றிய மற்றொருதொடரை எழுதியுள்ளார்.எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின்
மறைவுபற்றிய கட்டுரை,
மைக்கல் ஜக்
ஷன் என்ற
அமெரிக்க நாட்டிய பாடகர்
பற்றிய கட்டுரை தமிழ்
வாசகர்களுக்கு
அவரைப்பற்றிய நல்லதொரு அறிமுகத்தைக்கொடுத்துள்ளது.
சிவாஜிகணேசனின்
மறைவு குறித்து
இமயம் சரிந்தது என்ற தலைப்பில்
தினக்குரல் புதன் வசந்தத்தில் கட்டுரை
எழுதியுள்ளார். சின்னத்திரையைச்சீரழிக்கும்
தற்கொலைகள்
என்ற கட்டுரயை
எழுதியுள்ளார். ரவிவர்மா
அவர்கள் சமூக அக்கறை கொண்ட பத்திரிகையாளர்.அவருடையஜனரஞ்சகக்கட்டுரைகள்
இதற்குச்சான்று.
வீரகேசரி
வார வெளியீட்டில் இவர் எழுதிய
கட்டுரைகள்
கனதியானவை திரை உலகில் பறிக்கப்பட்ட கதைகள்,தமிழில் வெளியான பிறமொழிப்படங்கள்,தடம் மாறிய
தமிழ்ப்படங்கள் என்பன
சிறப்பானவை.
திரைப்படத்தை
ஆழமாக்கணிப்பிட்டு திறனாய்வுசெய்வது இது இலக்கியத்திறனாய்வுபோன்றதாகும்.திரைப்படத்தில் உள்ள
சீர்கேடுகளை அம்பலப்படுத்தி கண்டனம்
அல்லது விமர்சனம்
என்ற வகையில் வெளியிடுவது.சினிமா பற்றிய கருத்துக்களை சுவாரஸ்சியமாக ஜனரஞ்சகமாக வாசகர்களுக்கு கொடுப்பது.இந்தமூன்று
வகையிலும் சிறப்பாக தகவலகளை வாசகர்களுக்கு கொடுத்துள்ளார்
ரவிவர்மா.
No comments:
Post a Comment