Monday, September 23, 2013

சச்சின் 200



கிரிக்கெற் சாம்ராஜ்யத்தின் முடிசூடாமன்னனாகத்திகழும் சச்சின் டெண்டுல்கர் 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் விளையாடும் 200 ஆவது டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கு இந்திய மைதானங்கள்கடும்போட்டியில்இறங்கியுள்ளன.200ஆவதுபோட்டிதென்.ஆபிரிக்காவில்நடைபெறவேண்டும்.இந்திய,தென்.ஆபிரிக்ககிரிக்கெற்கட்டுப்பாட்டுச்சபைகளின் முறுகல் நிலை காரணமாக சச்சின் தனது 200 ஆவது டெஸ்ட் போட்டியை தாயகத்தில் விளையாடும்  சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

   நவம்பர் 21 ஆம் திகதி முதல், 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதிவரை இந்திய அணி தென்.ஆபிரிக்கவில் விளையாடுவதற்கான போட்டி அட்டவணைவெளியிடப்பட்டுள்ளதுதனது ஒப்புதலின்றி ஒருதலைப்பட்சமாக வெளியிடப்பட்ட இந்த அட்டவணையினால் இந்தியா கடுப்படைந்துள்ளது. இரண்டுரி20,ஏழுஒருநாள்போட்டி,மூன்றுடெஸ்ட்போட்டிகொண்டதொடரில்போட்டிகளைக்குறைக்கும்படிஇந்தியாவேண்டுகோள்விடுத்துள்ளது.தென்.ஆபிரிக்ககிரிக்கெற்கட்டுப்பாட்டுச்சபைத்தலைவராகலார்கட்தெரிவுசெய்யப்பட்டதன்பின்னர்,இந்தியாவுக்கும்,தென்.ஆபிரிக்காவுக்கும் இடையிலான உறவு விரிசலடந்துள்ளது. சர்வதேச கிகிரிக்கெற் சபையின் பொறுப்புவாய்ந்த அதிகாரியாக சிவராம கிருஷ்ணன் தெரிவுசெய்யப்பட்டதை லார்கட் கடுமையாக விமர்சித்தார்.சிவராமகிருஷ்ணனின் தெரிவில் ஊழல் நடந்ததாகக் குற்றம் சுமத்தினார்.இதனால் இந்தியா கடுப்படைந்துள்ளது.

 வரலாற்றுச்சிறப்பு மிக்க சச்சினின் 200ஆவது டெஸ்ட் போட்டியை இந்தியாவில்நடத்துவதற்காகமேற்கு.இந்தியத்தீவுக்குஅழைப்புவிடுக்கப்பட்டது. நவம்பர் மாதம் இந்தியாவுக்குச்செல்லும் மேற்கு இந்தியத்தீவுகள் இரண்டு டெஸ்ட்,மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறதுஇந்த வருடம் இந்திய அணி 200 நாட்கள் கிரிக்கெற் விளையாடுகிறது.இதில் 25 நாட்கள் மட்டும் தான் இந்தியாவில் விளையாடுகிறது.இத்தொடரின் மூலம் கூடுதலாகச்சில நாட்கள் தாய் நாட்டில் விளையாடும் சந்தர்ப்பம் இந்திய அணிக்குக் கிடைத்துள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கு கொல்கத்தா மும்பை உட்பட பல மைதானங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் அமரும் வசதி உள்ளது.ரலாற்றுச்சிறப்புமிக்க பல போட்டிகளை நடத்திய பெருமை இதற்கு உண்டு.மும்பைவன்கடேமைதானம்65ஆயிரம்பார்வையாளர்களைக்கொண்டது.சச்சினின் சொந்த நகரம் என்ற பெருமை இதற்கு,உண்டு.

 சச்சின் 200 ஆவது டெஸ்ட் போட்டியை நெருங்கும் அதே சமயம் வழமைபோன்று அவர் மீதானஎதிர்பார்ப்பும் அழுத்தங்களும் அதிகரித்துள்ளனகடந்த மூன்று வருடங்களாக சச்சின் மைதானத்தில் இறங்கும் போதெல்லாம் செஞ்சரி அடிப்பாரா? ஓய்வு பெறுவாரா? என்ற இரண்டு கேள்விகளும் அவர் மீது தயவு தாட்சண்யமின்றி தொடுக்கப்பட்டன.200 ஆவதுடெஸ்ட் போட்டியில் சதம் அடிப்பாரா என்ற கேள்வியும் 200ஆவது போட்டியுடன்  ஓய்வு பெறவேண்டும் என்ற ஆலோசனையும்வழ போன்று தற்போதும்  வெளியாகியுள்ளன.ஓய்வுபெறும் வயதை சச்சின் கடந்துவிட்டார். ஆனாலும் ஓய்வுபெற அவர் விரும்பவில்லை.
 இந்தியாவுடனான முறுகல் நிலையால் தென் .ஆபிரிக்கா வருமான இழப்பை எதிர் நோக்கியுள்ளது.ஒரு தலைப்பட்சமான போட்டி அட்டவணையை தென். ஆபிரிக்கா மாற்றி அமைக்காது விட்டால் தென்.ஆபிரிக்கத்தொடரை   கைவிட்டு பாகிஸ்தான் அல்லது இலங்கையை இந்தியா அழைக்கும்  நிலை ஏற்படும்.

 2009 ஆம் ஆண்டு ஐபில் போட்டிகள் ந்டைபெற்றபோது இந்தியப்பொதுத்தேர்தல் நடைபெற்றது.அப்போது ஐபில் போட்டிக்கு பாதுகாப்புத்தரமுடியாது என இந்திய அரசாங்கம் கூறியதால் சிலபோட்டிகள் தென்.ஆபிரிக்காவில் நடைபெற்றன.அடுத்த ஆண்டு ஐபில் போட்டியும் இந்தியப்பொதுத் தேர்தலும் ஒரேநேரத்தில் நடைபெற இருப்பதனால் பதுகாப்புத் ரமுடியாது என  இந்திய அரசாங்கம் அறிவிக்கலாம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பங்களாதேஷில் அல் லது இலங்கையில் ஐபில் போட்டிகளை நடத்துவதற்கு இந்திய கிரிக்கெற் கட்டுப்பாட்டுச்சபை திட்டமிட்டுள்ளது.இதனால் தென்.ஆபிரிக்காவின் வருமானத்தில் பலத்த அடிவிழுந்துள்ளது.

No comments: