பாரதீய
ஜனதாக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக உத்தியோக
பூர்வமாக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடி திருச்சியில் தனது
பிரசாரத்தை ஆரம்பிக்க உள்ளார்.திருச்சி ஜி
கோணர் மைதானத்தில் நடைபெற உள்ள இக்
கூட்டம் பாரதீய ஜனதாக் கட்சியினரிடையே
மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.இதேவேளை பிரதமர் கனவிலுள்ள
ஜெயலலிதாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.திராவிட முன்னேற்றக்
கழகம் தமிழகத்தில் ஆட்சி செய்தபோது
திருச்சியில் உள்ள இதே மைதானத்தில்
இருந்துதான் ஜெயலலிதா, தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார் .திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு
எதிராக ஜெயலலிதா ஆரம்பித்த போராட்டம் அவரை முதல்வர் கதிரையில்
அமர்த்தியது.முன்னதாக திராவிட முன்னேற்றக் கழகமும்
இதே மைதானத்தில் தனது தேர்தல் அறிவிப்பை
வெளியிட்டு ஆட்சிபீடமேறியது.இந்த வரலாற்றை நினைவுபடுத்தும்
பாரதீய ஜனதாக்கட்சியினர்
மலைக்கோட்டையிலிருந்து செங்கோட்டைக்குப்போவது உறுதி என
நம்புகின்றனர்.
அத்வானி,மோடி ஆகியோருடன் மிகவும்
நெருக்கமான உறவைக்கொண்டிருப்பவர் ஜெயலலிதா.ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வையினால்தான்
தமிழகத்தில் பாரதீய
ஜனதாக்
கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது.காங்கிரஸைப் பரம வைரியாக்கருதும் ஜெயலலிதா பாரதீய
ஜனதாக்கட்சித்தலைவர்களுடன்சுமுகமானஉறவைக்கொண்டுள்ளார்.வாஜ்பாய்க்குப் பின்னர் தானே
பிரதமர்
என நம்பிக்கொண்டிருந்த அத்வானிக்கு
மோடியின் விஸ்வரூப வளர்ச்சி
அதிர்ச்சியைக்கொடுத்துள்ளது. மோடிக்கு எதிராக
பகிரங்கமாக் கருத்துத்
தெரிவித்த அத்வானியை பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்கள் உதாசீனம் செய்தனர்.இதனால்
மோடியை ஆதரிக்கவேண்டிய
நிலைக்கு அத்வானி தள்ளப்பட்டார். காங்கிரஸ் கட்சியை
எதிர்க்கும்அரசியல்தலைவர்கள்அனைவரும்மோடிக் வாழ்த்துத்தெரிவித்தனர்.குஜராத்தில் மோடி வெற்றி பெற்றபோதெல்லாம் உற்சாகமாக வாழ்த்துத்தெரிவித்த
ஜெயலலிதா இப்போது
வாயைத்திறக்கவில்லை.
காங்கிரஸ், பாரதீய
ஜனதாக்
கட்சி ஆகியவற்றுக்கு எதிரான
கட்சிகள்
ஒன்றிணைந்து மூன்றாவது அணி
உருவாகும் சந்தர்ப்பம் இருப்பதனால் அந்த அணியில்
இணைந்து பிரதமராகலாம் என்ற
ஆசை ஜெயலலிதாவிடம் உள்ளது.பிரதமர்
பதவியில்
கண் வைத்துள்ள
ஜெயலலிதா, தனக்குப்
போட்டியாகவந்திருக்கும்மோடிக்குவாழ்த்துத்தெரிவிக்கவிரும்பவில்லை.ஜெயலலிதாவின் மன ஓட்டத்தைப்புரிந்து கொண்ட
சோ, அவசரமாக அவரைச்
சந்தித்தார்.இச்
சந்திப்பு பற்றிய விபரம் வெளிவரவில்லை என்றாலும் இச்
சந்திப்புக்கான நோக்கம் என்ன என்பதை
மறைக்க முடியாது. இக்கட்டான நேரங்களில் ஜெயலலிதாவுக்கு ஆலோசனை வழங்குபவர்களில் முதன்மையானவர்
சோ.பாரதீய ஜனதாக் கட்சித்தலைவர்களுக்கும்
சோவுக்கும் மிக நெருக்கமான நட்பு
உள்ளது.மூன்றாவது அணியைக்கைவிட்டு பாரதீய ஜனதாக்கட்சியை ஆதரிக்க
வேண்டும் என்று சோ
ஆலோசனை கூறி இருப்பார்.பிரதமர்
கனவில் மிதக்கும் ஜெயலலிதா, பாரதீய ஜனதாக் கட்சியுடன்
கூட்டணி சேர விரும்பமாட்டார்.
மாக்சிஸ்ட்,
கொம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் கூட்டணிசேர்ந்து
அதிக தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும் என்பதே
ஜெயலலிதாவின் விருப்பம். ஆகையினால் மத்தியில் ஆட்சியைப்பிடிக்கும் தகுதி உள்ள பாரதீய ஜனதாக்
கட்சியை அவர் ஒதுக்கித்தள்ளியுள்ளார்.திராவிட முன்னேற்றக் கழகத்தையும் காங்கிரஸ் கட்சியையும் இப்போதைக்குப் பிரிக்க முடியாது.கூட்டணிக்குள் எவ்வளவோ குத்துப்பாடு
இருந்தாலும் உன்னால் நான் கெட்டேன்,
என்னால் நான் கெட்டேன்எனஇரண்டுகட்சிகளும்கையைக்குலுக்கிக்கொண்டுள்ளன.திருமாவளவன்டாக்டர் கிருஸ்ணசாமி
ஆகியோருடன் முஸ்லிம் தலைவர்கள்
சிலரும் இக்கூட்டணியுடன் கை கோர்ப்பார்கள்.
தமிழகத்தில்
பலமான
வாக்கு வங்கியைக்கொண்டுள்ள
திராவிடமுன்னேற்றக் கழகமும், அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகமும் கைவிட்டதனால் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலின் போது பலமான கூட்டணியை அமைக்கவேண்டிய
கட்டாய நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளது பாரதீய ஜனதாக் கட்சி.தமிழக சட்ட
மன்றத்
தேர்தலின் போது கூட்டணி அமைத்துப்போட்டியிட பாரதீய ஜனதாக் கட்சி
முன்வரவில்லை.ஆனால்,
நாடாளுமன்றத்தேர்தலின்
வெற்றி மிகவும் முக்கியமானதால் பலம் வாய்ந்த
வெற்றிக்கூட்டணி இல்லாமல்
தமிழகத்தில் போட்டியிட முடியாது.
தமிழகத்தின் பிரதான
தலைவர்களான வைகோ,விஜயகாந்த் ஆகியோரின்
மீது பாரதீய ஜனதாக் கட்சியின் பார்வை விழுந்துள்ளது.
வாஜ்பாய்,அத்வானி ஆகியோரின்
மதிப்புக்குரியவர் வைகோ.அவருடைய நியாயமான
கோரிக்கைகளை வாஜ்பாயும்
அத்வானியும் நிறைவேற்றியுள்ளனர்.தனி ஒரு ஆளாக
கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் எதிர்த்து
நின்று வெற்றி பெற முடியாது
என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர்
வைகோ.ஆகையினால் வெற்றி பெறுவதற்கான கூட்டணி
ஒன்றை அவர் எதிர்
பார்க்கிறார்.
தமிழக சட்ட மன்றத்தேர்தலின் போது
திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரஸ்
கட்சியும் விஜயகாந்தின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த
போது அவர் தனது பரம வைரியான ஜெயலலிதாவிடம்
சரணடந்தார்.தான்
முதல்வரானதும் விஜயகாந்தைக்கை கழுவினார் ஜெயலலிதா.ராஜ்யசபா
தேர்தலின் போது மனைவியை அல்லது மைத்துணனை
நாடாளு மன்ற உறுப்பினராக்குவதற்காக
காங்கிரஸிடம் தூதனுப்பியவிஜயகாந்தை காத்திருக்கும்படி
கூறிய காங்கிரஸ் அவரைக்கைவிட்டு விட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் கையை
கெட்டியாகப்பிடித்தது.திராவிட முன்னேற்றக்கழகம், அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகம்,காங்கிரஸ்
ஆகிய மூன்று கட்சிகளுக்கும் பாடம் புகட்டும் முடிவில் இருக்கும்
விஜயகாந்த், பாரதீய ஜனதாவுடன் சேரும்
வாய்ப்பு உள்ளது.
பலம் வாய்ந்த
இரண்டு திராவிடக்கட்சிகளிடமும்
ஏமாந்த தமிழக
மக்கள்
மூன்றாவது அணியை ஆதரிக்கும் வாய்ப்பு உள்ளது.பிரதமர்
பதவிக்கு
மோடி அறிவிக்கப்பட்டதனால் முஸ்லிம் வாக்காளர்களின் ஆதரவை இக்கூட்டணி இழக்கும்
நிலை உள்ளது.
இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்
என்ற கருத்துக்கணிப்பில் மோடி முன்னிலையில் உள்ளார்.
ராகுல்,மன்மோகன் சிங், சோனியா, அத்வானி
ஆகியோர் பின்தங்கி உள்ளனர்.தமிழகத்தில் நடந்த
கருத்துக்கணிப்பில்மோடிக்கு
அடுத்த இடத்தில் ஜெயலலிதா உள்ளார்.இந்தியாவின் அடுத்த
பிரதமர் ஜெயலலிதா என்று அண்ணா திராவிட
முன்னேற்றக்கழகத்தினர் கோஷம் போட்டு வரும்
நிலையில் தமிழக மக்கள் மோடியை
முன்னிலைப்படுத்தி ஜெயலலிதாவை இரண்டாவது இடத்தில் வைத்துள்ளனர். கருணாநிதியையும் மோடியையும் ஒரு சேர வீழ்த்த
வேண்டிய வேண்டிய நிலையில் உள்ளார்
ஜெயலலிதா.
ரஜினியின்
மிக வேண்டிய நண்பர் மோடி.
ரஜினி சுகவீனமுற்றிருந்தபோது அவரது வீட்டுக்குச்சென்று நலம்
விசாரித்தவர்.மோடிக்கு ஆதரவாக ரஜினி குரல்
கொடுப்பார் என்று பாரதீய ஜனதாக்கட்சியினர்
நம்பிக்கொண்டிருக்கின்றனர்.1996
ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தேர்தலிலும்,1998 ஆம் ஆண்டு இந்தியப் பொதுத்தேர்தலிலும்
போதும் ரஜினியின் குரல் மேலோங்கியது.அப்போது கூட்டணிசேர்ந்த
கருணாநிதிக்கும் மூப்பனாருக்கும் ஆதரவாக
ரஜினி குரல் கொடுத்தார்.அவரது ரசிகர்கள்
தேர்தல் பிரசாரம் செய்தனர்.2004 ஆம் ஆண்டு
தேர்தலின் போது டாக்டர் ராமதாஸுடனான மனக்கசப்பின்
காரணமாக அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகம் பாரதீய ஜனதாக் கட்சி
கூட்டணிக்கு வாக்களித்தார்.அப்போது அவருடைய
எண்ணம் நிறைவேறவில்லை.
தமிழக அரசியல் தலைவர்களுடன் மிக நெருக்கமாகப்பழகும் ரஜினி
பாரதீய ஜனதாக் கட்சிக்கு
ஆதரவாகக்
குரல் கொடுக்கமாட்டார்
என்ற கருத்து நிலவுகிறது.சினிமாவிலும்
சமூகத்திலும்
தனது
அந்தஸ்தை உயர்த்திக்கொண்டிருக்கும்
ரஜினி அரசியலில் வீழ்ந்து
விடமாட்டார்.அவரது
புதிய படத்தை
ரசிகர்கள் எதிபார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் வேறு சிந்தனை
அவருக்கு ஏற்படாது
என்று ரஜினியை நன்கு அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
திருச்சியில் நடைபெற உள்ள கூட்டத்தினால் பாரதீய ஜனதாக்கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.தமிழகத்தில் மோடியின்
அலை வீசும் என்று அவர்கள் எதிபார்க்கின்றனர்.
No comments:
Post a Comment