உலகக்கிண்ண உதைபந்தாட்டப்போட்டியின் முதல் சுற்று
முடிவடைந்துவிட்டது. இரண்டாவது சுற்றில்
விளையாட 16 நாடுகள் தகுதிபெற்றுள்ளன. எதிர்பார்க்கப்பட்ட
சில நாடுகள்
வெளியேறி எதிர்பார்க்காத
சில நாடுகள்
உள்ளே வந்துள்ளன.
"ஏ" பிரிவில் பிறேசிலும்
குரோஷியாவும் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறும் என
எதிர்பார்த்தேன். ஆனால், மெக்சிகோ உள்ளே வந்து
விட்டது. இதற்கு
மெக்சிகோவின் கோல்கீப்பர் தான் முக்கிய காரணம்.மூன்று போட்டிகளிலும்
மெக்சிகோவுக்கு எதிராக ஒரே ஒருகோல்தான் அடிக்கப்பட்டது.
பிறேசிலுக்கு ந்திரான போட்டியைச்சமப்படுத்தியதால்தான்
மெக்சிகோ இரண்டாவது
சுற்றில் விளையாட
தகுதி பெற்றது.
பிறேசில் 7,குரோஷியா6, மெக்சிகோ4 கோலகள் அடித்தன.
"பி" பிரிவிலிருந்து ஸ்பெய்னும்
நெதர்லாந்தும்
அடுத்த சுற்றுக்கு
தகுதி
பெறும் என
நினைத்தேன். நெதர்லாந்துடன் சிலிர்த்தெழுந்த சிலி
உள்ளே போய்விட்டது. முதல் போட்டியில்
நெந்தர்லாந்திடம் ஸ்பெய்ன்
தோல்வியடையும்
என எதிர்பார்த்தேன்.
ஆனால், இப்படி அவமானமாக
ட்பெய்ன் வெளியேறும்
என நான்
நினைக்கவில்லை.
உலகக்கைண்ண சம்பியன்
யூரோ சம்பியன்,
கொன்படரேஷன் கிண்ணப்போட்டியில்
இறுதிவரை
முன்னேறிய நாடு என்பதனால் பெரிதாக எதிர்பார்த்தேன்.
ஸ்பெயின் அணியுடைய
கோல் கீப்பரின் செயற்பாடு திருப்திகரமாக இல்லை என
ஆறு மாதங்களுக்கு
முன்னர்
ஒரு சஞ்சிகையில் படித்தேன். அது
உண்மையாகிவிட்டது. நெதர்லாந்து மூன்று
போட்டிகளிலும்
வெற்றி பெற்றது 10 கோல்கள் அடித்தது. எதிராக
மூன்று கோல்கள் அடிக்கப்பட்டன. சிலி
ஐந்து கோல்கள் அடித்தது. மூன்று
கோல்கள்
எதிராக அடிக்கப்பட்டன. ஸ்பெய்ன்
ஒரு போட்டியில்
மட்டும்
வெற்றி பெற்றது.நான்கு
கோல்கள்
அடுத்தது
எதிராக ஏழு
கோல்கள்
அடிக்கப்பட்டன.
"சி: பிரிவில் இருந்து
கிரீஸ், ஐவரிகோஸ்ற் ஆகியனவற்றை எஆன்
எதிர்பார்த்தேன்.மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்ற
கொலம்பியா
முன்னேறியது.
ஒருவெற்றி ஒருதோல்வி,
ஒருபோட்டியச்சமப்படுத்தி
கிரீஸ் தகுதி பெற்றது.கொலம்பியா ஒன்பது கோலகள் அடித்தது
எதிராக இரண்டு கோல்கள் மட்டும் அடிக்கப்பட்டன. கிரீஸ்
இரண்டு
கோல்கள்
மட்டும்
அடித்தது.
எதிராக நான்கு
கோல்கள்
அடிக்கப்பட்டன.
இங்கிலாந்து, இத்தாலி, உருகுவே,
கொஸ்ரரிகா
ஆகியன
"டி' பிரிவில்
மோதின. சம்பியன்களின் பிரிவான
இதன்
மீதி அதிக
எதிர்பார்ப்பு இருந்தது. இங்கிலாந்தயும்
இத்தாலியையும் எதிர்பார்த்தேன் இரன்டும் என்னை
ஏமாற்றிவிட்டன. கொஸ்ரரிகாவும் உருகுவேயும்
உள்ளேவந்துவிட்டன. இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று
ஒரு போட்டியைச்சமப்படுத்தி கொஸ்ரரிக்கா முதலிடம் பிடித்தது.
இரண்டு
வெற்றி ஒரு
தோல்வியுடன்
உருகுவே இரண்டாமிடம்
பிடித்தது.இத்தாலி ஒருபோட்டியில்
வெற்ரிபெற்று இரண்டு பீட்டிகளில்
தால்வியடைந்தது. இங்கிலாந்து
ஒரு போட்டியைச்சமப்படுத்தி இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது.கொஸ்ரரிகா நான்கு
கோல்கள்
அடித்தது
ந்திராக ஒரு
கோல் மட்டும் அடிக்கப்பட்டது.உருகுவே
நான்கு கோல்கள் அடித்தது எதிராக
நான்கு கோல்கள் அடிக்கப்பட்டன.
"ஈ" பிரிவில் பிரான்ஸும்,
சுவிட்ஸர்லாந்தும்
தெரிவாகி என்
மானத்தைக்காப்பாற்றின.
பிரான்ஸ் இரண்டு வெற்றி
ஒரு போட்டியைச்
சமப்படுத்தியது. சுவிஸ்
இரண்டு
வெற்றி ஒரு
தோல்வி.பிரான்ஸ்
எட்டு கோல்கள் அடுத்தது எதிராக
இரண்டு
கோல்கள்
அடிக்கப்பட்டன.
சுவிஸ் ஏழு
கோல்க அடித்தது எதிராக
ஆறு கோல்கள் அடிக்கப்பட்டன. ஐந்து
கோல்கள்
பிரான்ஸ் அடித்தது.
"எஃப் " பிரிவிலிருந்து
ஆர்ஜென்ரீனாவையும் பொஸ்னியாவையும் எதிர்பார்த்தேன்.
தகுதிகாண்
போட்டியில் ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி முதன் முதலாக உலகக்கிண்ணப்போட்டியில் விளையாடத் தகுதிபெற்ற பொஸ்னியா
ஏமாற்றிவிட்டது. மூன்று போட்டிகளிலும் வெற்ரிபெற்ற
ஆர்ஜென்ரீனா ஆறு கோல்கள் அடித்தது.
எதிராக மூன்று
கோல்கள்
அடிக்கப்பட்டன.ஒரு வெற்றி
ஒரு தோல்வி
ஒரு போட்டியச்சமப்படுத்தி
நைஜீரியா இரண்டாவது
சுற்றுக்குத் தெரிவாகியது.நஜீரியா
மூன்று கோல்கள் அடித்தது. எதிராக
மூன்று கோல்கள்
அடிக்கப்பட்டன.
"ஜி"இரிவிலிருந்து ஜேர்மனியையும் போத்துகலையும் எதிர்பார்த்தேன்.
போத்துகலின்
கனவை அமெரிகா
சிதறடித்துவிட்டது.
இரண்டு
போட்டிகளில்
வெற்ரிபெற்று ஒருபோட்டியைச்சமப்படுத்திய
ஜேர்மனி
ஏழு கோல்கள் அடித்தது.எதிராக
இரண்டு
கோல்கள்
அடிக்கப்பட்டன.
அமெரிக்காவும் போத்துகலும் தலாஒரு போட்டியில்
வெற்றிபெற்று, ஒருபோட்டியைச்சமப்படுத்தி,
ஒரு போட்டியில்
தோல்வியடைந்தன. இரண்டும் நான்கு
புள்ளிகள்
பெற்றன.
நான்கு கோல்கள் அடித்தன. அமெரிக்காவுக்கு
எதிராக எஆன்கு
கோல்கள்
அடிக்கப்பட்டன.
போத்துகலுக்கு
எதிராக ஏழுகோல்கள் அடிக்கப்பட்டன. அதில்
நான்கு கோல்களை ஜேர்மனி அடித்தது.ஆகையினால்
அமெரிக்கா உள்ளே
வந்து
விட்டது.
போத்துகல் சுவீடன் ஆகியவற்றுக்கிடையிலேயான
பிளே ஓவ்
போட்டியில் வெற்றிபெற்ற போத்துகல் உலகக்கிண்ணப்போட்டியில் விளையாடத்தகுதி
பெற்றது.
இப்போட்டி ரொனால்டோ,இப்ராமிகோவிச் ஆகியோருக்கிடையேயான
பலப்பரீட்சையாகவே பார்க்கப்பட்டது.
"எச்" பிரிவிலிருந்து பெல்ஜியத்தையும் ரஷ்யாவையும் எதிர்பார்த்தேன்.அல்ஜீரியா உள்ளே
வந்து
விட்டது.மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்ற
பெல்ஜியம்
நான்கு கோல்கள் அடித்தது. எதிராக
ஒருகோல் மட்டும் அடிக்கப்பட்டது.ஒரு வெற்றி, ஒரு
தோல்வி ஒரு
போட்டியைச் சமப்படுத்திய
அல்ஜீரியா ஆறு
கோல்கள்
அடித்தது.
எதிராக ஐந்து
கோல்கள்
அடிக்கப்பட்டன.
பிறேஸில் - ஜேர்மனி,
ஆர்ஜென்ரீனா- நெதர்லாந்து ஆகியன
அரை இறுதிவரை
முன்னேறும் என எதிர்பார்க்கிறேன்.
No comments:
Post a Comment