உலகக்கிண்ண உதை பந்தாட்டத்தின்
கால் இறுதிப்போட்டி
இன்று ஆரம்பமாகிறது.
பிரான்ஸ்,ஜேர்மனி,பெல்ஜியம்,நெதர்லாந்து,குரோஷியா ஆகிய
ஐந்து ஐரோப்பிய
நாடுகளும் பிறேஸில்,
ஆர்ஜென்ரீனா, கொலம்பியா ஆகிய மூன்று
தென்னமெரிக்கநாடுகளும் பலப்பரீட்சைக்குத்தயாராகிவிட்டன.
முதல் போட்டியில்
பிரான்ஸும் ஜேர்மனியும் களமிறங்குகின்றன.
பிரான்ஸ் 11 போட்டிகளிலும் ஜேர்மனி
8 போட்டிகளிலும் வெற்றிபெற்றன. 6 போட்டிகள் சமநிலையில் முடிந்தன.
பிரான்ஸ் 41 கோல்களும் ஜேர்மனி 42 கோல்களும் அடித்தன. பிரான்ஸ்
10 கோல்கள் அடித்தது. எதிராக இரண்டு கோல்கள்
அடிக்கப்பட்டன. ஜேர்மனி ஒன்பது கோல்கள் அடித்தது
எதிராக மூன்று
கோல்கள் அடிக்கப்பட்டன.
1958 ஆம் ஆன்டு மூன்றாவது
இடத்துக்கான போட்டியில் 6- 3 கோல்கணக்கில்
பிரான்ஸ் வென்றது.
1982 ஆம் ஆண்டு
அரை
இறுதிப்போட்டியில் இரண்டு நாடுகளும் தலா 3 கோல்கள் அடித்தன பெனால்றியில்
5- 4 கோல்கணக்கில் ஜேர்மனி
வெற்றி பெற்றது. 1986 ஆம்
ஆன்டு அரை
இறுதிப்போட்டியில் 2- 0 கோல் கணக்கில்
பிரான்ஸ் வெற்றி
பெற்றது.
உலகக்கிண்ணப்போட்டியில் பிரான்ஸ்
13முறையும் ஜேர்மனி 13 தடவையும் விளையாடத்தகுதிபெற்றன. தர்வரிசஒயில் ஜேர்மனி2 ஆவது இடத்திலும் பிரான்ஸ்
17 ஆவது
இடத்திலும்
உள்ளன.
ஜேர்மனி
மூன்று முறையும்
பிரான்ஸ் ஒரு
முறையும் சம்பியனாகின.
பிரான்ஸ் 10 கோல்களும் எதிராக இரண்டு கோல்களும் அடிக்கப்பட்டன. ஜேர்மனி ஒன்பது கோல்கள் அடித்தது.எதிராக மூன்று
கோல்கள்
அடிக்கப்பட்டன.
கடந்த மூன்று உலகக்கிண்ணப்போட்டிகளிலும்
ஜேர்மணி
அரைஇறுதியுடன் வெளியேறியது.பிரான்ஸ் வெற்றிபெறும்
என 51 சதவீதமானவர்களும்
ஜேர்மனி வெல்லும்
என 49 சதவீதமானவர்களும்
நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தென்னமெரிக்க நாடுகளான பிறேஸிலும்
கொலம்பியாவும்
இரண்டாவது போட்டியில்
சந்திக்கின்றன.இரண்டு நாடுகளும் மோதிய
போட்டிகளில் பிறேஸில் 15 போட்டிகளிலும் கொலம்பியா இரண்டு போட்டிகச்ளிலும் வெற்றி
பெற்றுள்ளன.எட்டுப்போட்டிகள்
வெற்றி தோல்வி
யின்றி முடிவடைந்தன.
பிறேஸில் 55கோல்களும்
கொலம்பியா
11கோல்களும்
அடித்தன.20
உலககிண்ண போட்டிகளிலும் விளையாடிய
பெருமையுடன்
பிறேஎஸில் மிளிர்கிறது.கொலம்பிய ஐந்துமுறை
உலகக்கிண்ணப்போட்டியில்
விளையாடத்தகுதி பெற்றது. த்ரவரிசையில்
பிறேஸில் மூன்றாவது இடத்திலும் கொலம்பியா எட்டாவது இடத்திலும் உள்ளன. பிறேஸில் ஐந்துமுறை
சம்பியனாகி சரித்திரம்
படைத்தது. பிறேஸில்
எட்டு கோல்கள் அடித்தது. எதிராக
மூன்று கோல்கள் அடிக்கப்பட்டன. கொலம்பியா 11 கோல்கள் அடித்தது எதிராக
இரண்டு
கோல்கள்
அடிக்கப்பட்டன.
பிறேஸில் வெற்றி
பெறும் என
54 சதவீதமானவர்களும் கொலம்பியா வெற்றி
பெறும் என
48 சதவீதமானவர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment