ஜெயலலிதா
தப்புச்செய்யவில்லை என்று வாதிடுவதைத்தவிர்த்து அரசியல் காழ்ப்புணர்ச்சியின்
காரணமாக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது என்பதை முன்னிறுத்தியே அவரது வழக்கறிஞர்கள்
வாதாடினார்கள். ஜெயலலிதாவுக்கு எதிரான வருமானத்துக்கு அதிகமான
சொத்துச் சேர்த்த வழக்கு கர்நாடகத்துக்கும் தமிழகத்துக்கும் இடையேயான பனிப்போரை
அதிகமாக்கி உள்ளது.நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு மிகவும் கடுமையானது.
ஜெயலலிதாவுக்கு எதிராக நான்கு வருட சிறைத்தண்டனையும் 100 கோடிரூபா அபராதமும் விதித்தார்.சசிகலா,இளவரசி,சுதாகரன் ஆகியோருக்கு தலா இரண்டு வருட
சிறைத்தண்டனையும் 10 கோடிரூபா அபராதமும் விதித்து தீர்ப்பு
வழங்கப்பட்டது.
நீதிபதி
குன்ஹாவின் தீர்ப்பு ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை முடக்கியது. ஜெயலலிதாவின்
அரசியல் எதிரிகள் குதூகலப்பட்டார்கள். தனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை
எதிர்த்து அப்பீல் செய்து 21 நாள் சிறை வாசத்தின் பின்னர் தமிழகத்துக்குத்
திரும்பினார். ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கை மூன்று மாதத்தினுள் முடிக்க வேண்டும்
என நீதிமன்றம் கட்டளையிட்டது.
ஆயிரக்கணக்கான
அப்பீல்வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது
ஜெயலலிதாவின் அப்பீல் வழக்கு மட்டும்
சுடச்சுட நடைபெற்றது. இந்தியாவே இந்த வழக்கை உன்னிப்பாக அவதானித்தது.
தீர்ப்பு நாளன்று ஒட்டுமொத்த இந்தியாவும் கர்நாடகாவை நோக்கியது. 19 வருட வழக்கின் தீர்ப்பு மூன்று நிமிடங்களில் வாசிக்கப்பட்டது.ஜெயலலிதா,சசிகலா,இளவரசி, சுதாகரன் ஆகிய
மூவரும் நிரபராதிகள் என் தீர்ப்பளிக்கப்பட்டது.
அண்ணா திராவிட
முன்னேற்றக் கழம்,அதனுடைய
தோழமைக்கட்சிகள், பாரதீய ஜனதாக் கட்சி ஆகியன மகிழ்ச்சியடைந்தன.
ஏனைய கட்சிகள் அனைத்தும் அதிர்ச்சியில் உறைந்தன. நீதிபதி குமாரசாமி வழங்கிய
தீர்ப்பில் உள்ள கணக்குப்பிழை சாமானியர்களையும் சந்தேகப்பட வைத்தது.நீதியின்
மீது ஏற்பட்ட சந்தேகத்தை கர்நாடக அரசுதான் தீர்க்க வேன்டும்.ஆனால் கர்நாடகம்
மெளனமாக இருந்தது. தமிழக அரசியல் தலைவர்கள் கர்நாடகத்துக்கு
நெந்ருக்கடி கொடுத்தனர். எதற்கும் அசராத கர்நாடக அரசு சட்டப்பிரச்சினைகளை
முன்வைத்து தாமதப்படுத்தியது.
கர்நாடக அட்வகேட்
ஜெனரல் ரவிக்குமார், அரசதரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா
ஆகியோர் அப்பீல் செய்ய வேண்டும் எனப்பரிந்துரைத்தனர். ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்குக்கு பிள்ளையார்
சுழிபோட்ட சுப்பிரமணியன் சுவாமி அப்பீல் செய்யப்போவதாக அறிவித்து இராஜினாமாக்
கடிதத்தை தயாராக வைத்திருக்கும் படி சவால் விட்டார். சுப்பிரமணியன் போட்ட பிள்ளையார் சுழியை பூதமாக்கி ஜெயலலிதாவை கதிகலங்க
வைத்த கருணாநிதி கர்நாடக அரசு
அப்பீல் செய்யவில்லை என்றால் தாம்
அப்பீல் செய்வதாக நாள் குறித்தார்.
காங்கிரஸ் கட்சியின்
ஆளுகையில் இருக்கும் கர்நாடக அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது.
சோனியா அல்லது ராகுலின் உத்தரவு இல்லாமல் எதையும் செய்யும் அதிகாரம் கர்நாடக
அரசுக்கு இல்லை என்பது வெளிப்படையான ரகசியம்.அதனால்தான் சட்டப்பிரச்சினைகளை
முன்வைத்து காலத்தை இழுத்தடித்தது. மேலிடத்தில் இருந்து உத்தரவு கிடைத்ததும்
அப்பீல் செய்யப்போவதாக அறிவித்தது.
2ஜி ஊழல் விவகாரத்தினால் திராவிட முன்னேற்றக் கழகத்தை
தள்ளி வைத்திருக்கும் ராகுல் ஜெயலலிதாவுக்கு எதிரான ஊழல் வ்பழக்கில் அவசரம்
காட்டாது நிதானமாக இருந்தது அரசியல்
அரங்கில் நெருடலை ஏற்படுத்தி உள்ளது. எடியூரப்பாவின் ஆட்சியில் நடைபெற்ற
முறைகேட்டை எதிர்த்து 350 கி,மீற்றர் பாத
யாத்திரை சென்ற கர்நாடக முதல்வர் சித்தராமையா ஜெயலலிதாவுக்கு எதிராக அப்பீல் செய்ய தயக்கம்
காட்டியது புரியாத புதிராக உள்ளது.
ஜெயலலிதா நிரபராதி
என வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக அப்பீல் செய்வதற்கு இரண்டு வழிமுறைகள்
உள்ளன.நீதிபது குமாரசாமி வழங்கிய தீர்ப்புக்கு தடை வாங்குவது அல்லது உயர்நீதிமன்றத்தில்
அப்பீல் செய்வது.நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு செல்லாது என தடை வாங்கினால்
அடுத்த நிமிடம் ஜெயலலிதாவின் பதவி பறிக்கப்பட்டுவிடும். தீர்ப்புக்கு தடை
வாங்கப்போவதாக் அரச வழக்கறிஞர் ஆச்சார்யா கோடி காட்டி உள்ளார்.முதல்வராகப்பதவி
ஏற்ற ஜெயலலிதா சட்டப்பேரவை உறுப்பினராவதற்காக தமிழகத்தில் இடைத்தேர்தல்
நடைபெற நாள் குறிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு
எதிராக 14 வழக்குகள்
தாக்கல் செய்யப்பட்டன. சட்டத்தில் உள்ள சந்துபொந்து இந்து இடுக்கெல்லாம்
புகுந்து நிரபராதி என நீதிமன்றம் ஜெயலலிதாவை
விடுதலை செய்தது. சட்டப்படி ஜெயலலிதா நிரபராதி என்றாலும் அண்ணாதிராவிட
முன்னேற்றக் கழக ஆதரவாளர்களைத்தவிர
மற்றவர்கள்
அவரை குற்றவாளி என்றே நினைக்கின்றனர்.
ஜெயலலிதா நிரபராதி
என்ற தீர்ப்புக்கு எதிராக தடை வாங்கப்படுவதையே அவர் விரும்புகிறார். அரசியல்
காழ்ப்புணர்ச்சியினால் தனது ப்தவி பறிக்கப்பட்டது என்ற பிரசாரம் தொண்டர்கள்
மத்தியில் தனது செல்வாக்கை அதிகரிக்கும் என நம்புகிறார்.
No comments:
Post a Comment