Thursday, September 10, 2015

தேவரையாளி இந்துக்கல்லூரி ஸ்தாபகர் சைவப்பெரியார் சூரன்

                                பல்லவி
சூரன் புகழ் மண்ணில் நிலைத்திருக்கும் 
சூரிய சந்திரர் போல் மிளிர்ந்திருக்கும்
சைவமும் தமிழும் சுவைத்திருக்கும்
சரித்திரம் அதிலே பதிந்திருக்கும் {சூரன்}
                            அனுபல்லவி
தில்லைச் சிதம்பரத்தில் கோயில் கண்டோம்
திருநடம் புரிகின்ற கோல‌ம் கண்டோம்
ப‌ள்ளித்த‌ல‌ம் அருகே சோதி க‌ண்டோம்
வெள்ளி தோறும் உரைக்கும் நீதி கேட்டோம் {சூர‌ன்}
                                     ச‌ர‌ண‌ம்
க‌ல்விக் க‌ட‌ன் தீர்த்த‌ செல்ல‌க் க‌ணேச‌ன்
ந‌ன்றிக் க‌ட‌ன் என்றும் நிமிர்ந்திருக்கும்
சான்றோர்க‌ள் வாழ்வினுக்காய் ச‌ரித்திர‌ம் உருவாக்கி
நீண்ட‌ ப‌ய‌ண‌த்தால் வ‌ழி வ‌குத்தாய் {சூர‌ன்}
எண்ணும் எழுத்தும் த‌ந்து க‌ண் திற‌ந்தாய்
ஏற்ற‌மிடும் க‌ல்வி ஆற்ற‌ல் த்ந்தாய்
தூற்றும் ச‌மூக‌நிலை மாற்றி வைத்தாய்
போற்றும் அர‌ச‌நிலை ஆக்கி நின்றாய் {சூர‌ன்}
சாதிக் கொடுமை க‌ண்டு த‌ள‌ர‌வில்லை
சம‌த்துவ‌ம் வேண்டி எங்கும் அலைய‌வில்லை
நீதிக்காய் துணை நாடித் திரிய‌வில்லை
நிமிர்ந்த‌ ந‌டைப்பார்வை குறைய‌வில்லை {சூர‌ன்}
அண்ண‌மார் ஆல‌ய‌த்தின் ப‌லி த‌டுக்க‌
உந்த‌ன் த‌லை நீட்டியே கொலை த‌டுத்தாய்
அந்த‌ண‌ர் செய்கிரியை இல்ல‌ங்க‌ளில்
அனைத்தும் நிக‌ழ்த்திடுவாய் த‌மிழிசையில் {சூர‌ன்}
சி.செக‌ராச‌சிங்க‌ம்
யாதும் 2014

No comments: