தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு ஒருவாரம் இருக்கும் நிலையில் தினமலர்
பத்திரிகையும் நியூஸ் 7
தொலைக்காட்சியும் இனைந்து
நடத்திய கருத்துக் கணிப்பு தமிழக அரசியல் தலைவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
மூன்றாவது அணியாக முளைத்த மக்கள் நலக் கூட்டணி தேர்தலில் அதிக தாக்கத்தை
ஏற்படுத்தும் எனக் கருதப்பட்டது.
கருத்துக் கணிப்பின் முடிவின்படி எதிர்பார்த்த தாக்கத்தை மூன்றாவது அணியால்
ஏற்படுத்த முடியாது எனத்தெரிய வந்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகத்துக்கும் இடையிலான வாக்கு விகிதத்தை மக்கள் நலக் கூட்டணி
சிதைத்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு உதவும் என்றே
கருதப்பட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோல்வியையும் மக்கள் நலக்
கூட்டனியின் பலவீனத்தையும் கருத்துக் கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது. தமிழகத்தின்
மேற்குமண்டலமான கொங்கு மண்டலம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரும்புக்
கோட்டை என வர்ணிக்கப்படுகிறது. எம்.ஜி.ஆரின் தீவிரவிசுவாசிகள் நிறைந்த அங்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்
செல்வாக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
மேற்கு மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் 57 தொகுதிகள் உள்ளன. 33 தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம்
வெற்றிபெறும் எனவும் 24 தொகுதிகளில் அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெரும் எனவும் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
கடந்த சட்ட சபைத் தேர்தலின் போது மேற்கு
மண்டலத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகம் 33 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
அண்ணா அண்ணா திராவிட முன்னேற்ற கழக
கூட்டணியில் இருந்த விஜயகாந்தின் கட்சி எட்டுத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. மாக்ஸிஸ்ட் கட்சியும் கொம்யூனிஸ்ட் கட்சியும் தலா மூன்று தொகுதிகளில்
வெற்றி பெற்றன. அண்ணா திராவிட முன்னேற்றக்
கழக கூட்டணி 57 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திராவிட
முன்னேற்றக் கழகம் நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. இன்று நிலைமை மாறி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு
மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கருணாநிதி இந்தக் கணிப்பால் அதிச்சியடைந்துள்ளர். எதிர்பாரத
வெற்றி கிடைக்கும் என்பதால் திராவிட முன்னேற்றக் கழகம் உற்சாகம் அடைந்துள்ளது.
அன்புமணி தோல்வியடைவார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என வைகோ தெரிவித்துள்ளார். கருத்துக் கணிப்பை நம்ப
முடியாது என ராமதாஸ் அறிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகம் பணம் கொடுத்து
நடத்திய கருத்துக கணிப்பு என சிலர்
சொல்கிறார்கள்.
அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு உதவும்
என்று நினைக்கப்பட்ட மூன்றாவது அணியால் அக்கட்சிக்கு பின்னடைவுதான் ஏற்பட்டுள்ளது
என்பது நியூஸ்-7 கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.எப்போதுமே பலமாக
காணப்படும் மேற்கு மண்டலத்திலுள்ள தொகுதிகளில் நடத்தப்பட்ட இக்கருத்து கணிப்பில் திராவிட
முன்னேற்றக் கழக த்துக்கு 33 தொகுதிகளும் அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு 24 தொகுதிகளும்தான் கிடைக்கும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.இம்மண்டலத்தின் பல தொகுதிகளில் பட்டாளி மக்கள் கட்சி அல்லது மக்கள் நல கூட்டணி 3வது இடத்தை
பிடிக்கிறது. பாரதீய ஜனதாக் கட்சி கணிசமாக
எழுச்சியடைந்துள்ளது
வாக்கு சிதறுவதால் ஆளும் கட்சிக்கு லாபம் என்று
எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மக்கள் நல
கூட்டணி , பாட்டாளி மக்கள் கட்சி, பாரதீய
ஜனதாக் கட்சி என வாக்குகள் சிதறியபோதிலும்
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாகவே கருத்துக் கணிப்பு முடிவுகள்
அமைந்துள்ளன
இந்திய .கொம்யூனிஸ்ட் கட்சி பாரதீய ஜனதாக் கட்சி வாசனின்
தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியன ஜெயலலிதாவின் தலைமையில் தேர்தலைச் சந்திக்க
விரும்பின. அக்கட்சிகளை
உதாசீனப்படுத்தினார் ஜெயலலிதா. பாரதீய
ஜனதாக் கட்சி 9 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது
ஜெயலலிதா மனது வைத்திருந்தால் அந்த வாக்கு வங்கி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குக்
கிடைத்திருக்கும். அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகத்துக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளை பாரதீய ஜனதாக் கட்சி
பிரிக்கிறது. .
மக்கள் நல கூட்டணியிலுள்ளஇந்திய .கொம்யூனிஸ்ட், தமிழ் மாநில
காங்கிரஸ் ஆகியவற்றுடன் இணைந்து ஜெயலலிதா
தேர்தலைச் சந்தித்திருந்தால்திருப்பூர் உள்ளிட்ட தொழிலாளர் பெருக்கம் கொண்ட
மண்டலங்களில் வாக்கு சிதறாமல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குக் கிடைத்திருக்கும்.
மக்கள் நல
கூட்டணியிலுள்ள சில கட்சிகள், பாட்டாளி மக்கள் கட்சி, பாரதீய ஜனதாக் கட்சி போன்ற கட்சிகள் சிதறிக்கிடப்பது உண்மையிலேயே
இப்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தான் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில
தொகுதிகளில்தான் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குக் கிடைக்க வேண்டிய வாக்குகளை மக்கள் நலக் .கூட்டணி பிரித்துள்ளது
என்பதை கருத்துக் கணிப்பு நிரூபித்துள்ளது.
கொங்கு மண்டலத்தில் உள்ள பிரச்சினையை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சரியான முறையில்
அணுகித் தீர்க்கவில்லை. வெற்றி பெற்ற
உறுப்பினர்கள் தொகுதிகளை கவனிக்கவில்லை.
கடந்த தேர்தலின்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இடம் பெற்ற
விஜயகாந்த், இடதுசாரிகள் ஆகியோர் மக்கள்நலக் கூட்டணியில் உள்ளனர். இதன் காரணமாக
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி கேள்விக்குறியாகி உள்ளது.
மேற்கு மண்டலத்தில்
நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு தமிழகத்தின் ஏனைய பகுதிகளையும் பாதிக்கும் என்பதால்
தமிழக தேர்தல் மிகவும் சூடாகி உள்ளது.
வர்மா
2 comments:
தினமலர் பத்திரிகை பிராமண பத்திரிகையாக இருந்தாலும், அது திமுகவிடம் விலை போய் விட்டது என்று தான் சொல்வேன். ஜெயலலிதா முதல் அமைச்சராக மறுபடியும் பதவி ஏற்பார்!
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அன்புடன்
வர்மா.
Post a Comment