எட்டு அணிகள் பங்கேற்கும் 11–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிறிக்கெற் போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி ஏப்ரல் 7 ஆம் திகதி தொடங்கும் ஐ.பி.எல். திருவிழா மே 27 ஆம் திகதி வரை நடக்கிறது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க போட்டியில்
நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சுடன் மோதுகிறது.
ஒன்பது
நகரங்களில் மொத்தம் 51 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் 60 லீக் ஆட்டங்கள், 3
பிளே ஆஃப் மற்றும் இறுதி போட்டிகள் என ஒட்டுமொத்தமாக 64 போட்டிகள் இடம்பெறுகின்றன
இந்த சீசனில் நேரம் மாற்றப்பட்டு மாலை 5.30 மணி, இரவு 7 மணிகளில் ஆட்டங்கள் தொடங்கும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. போட்டி நேரத்தை மாற்றுவதற்கு அணிகளின் உரிமையாளர்களும், ஒளிபரப்பு நிறுவனத்தாரும் எதி£ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நேரத்தை மறுபடியும் ஐ.பி.எல். நிர்வாகம் மாற்றியுள்ளது. முந்தைய ஆண்டுகள் போலவே இரவு 8 மணிக்கு தொடங்கும். ஒரே நாளில் இரண்டு போட்டிகள் இடம்பெறும் போது ஒரு ஆட்டம் மாலை 4 மணிக்கு ஆரம்பமாகும்.
No comments:
Post a Comment