விக்கிரவாண்டி,நாங்குநேரி
ஆகிய தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்றது. ஜெயலிதாவின் மறைவுக்குப் பின்னர்
எடப்பாடியின் தலைமையில் அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின்
வசம் இருந்த விக்கிரவாண்டியையும், காங்கிரஸின் கையில் இருந்த நாங்குநேரியையும் அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றியதால் தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விக்கிரவாண்டியில்
திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக புகழேந்தியும், நாங்குநேரியில் காங்கிர வேட்பாளராக
ரூபி மனோகரனும் அறிவிக்கப்பட்டபோதே எதிர்ப்பு கிழம்பியது. அவர்கள் இருவரும் வெளியூரைச்
சேர்ந்தவர்கள். தொகுதியில் கட்சிப்பனி ஆற்ருபவர்கலைப் புறந்தள்ளி வெளியூரைச் சேர்ந்தவர்களை
வேட்பாளராக்கியதே முதல் கோணலாகியது அண்னா திராவிட
முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்களான முத்தமிழ்ச்செல்வன், நாராயணன் ஆகிய இருவரும் உள்ளூரைச்
சேர்ந்தவர்கள். பாரதீய ஜனதா, அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்ருக்கு எதிரான
அலை இருப்பதால் வெற்றி பெற்று விடலாம் என திராவிட முன்னேற்றக் கழகமும்,. காங்கிரஸும்
நம்பின.
கூட்டணிக்
கட்சிகள் அனைத்தையும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் களத்தில் இறக்கியது. திராவிட
முன்னேற்றக் கழகமும் காங்கிரஸும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றவில்லை.
ஸ்டாலினும் மகன் உதயநிதியும் கலந்துகொண்ட கூட்டங்களில் மக்கள் அதிகளவு கூடினார்கள்.
ஆனால், எதிர்பார்த்த வாக்கு கிடைக்கவில்லை. கனிமொழி, திருமாவளவன் போன்றவர்கள் பிரசாரம் செய்யவில்லை. விக்கிரவாண்டியில் எடப்பாடிக்கும்
ஸ்டாலினுக்கும் இடையேயான போட்டி கடைசி நேரத்தில்
ராமதாஸுக்கும் ஸ்டாலினுக்கும் எதிரான போட்டியாக
மாறியது. வன்னியரின் வாக்குக்காக இருவரும் பகீரதனப் பிரயத்தம் செய்தனர். வன்னியருக்கு
எதிரான பொன்முடியின் நிலைப்பாடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோல்விக்கு காரனமானது.
கடந்த தேர்தல்கலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான வாக்குகளை
கமலும் தினகரனும் பங்குபோட்டனர். இந்தத் தேர்தலில் அந்த வாக்குகள் மீண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச்
சென்றன. இடைத் தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் அல்ல என்பதால் ஆலும் கட்சிக்கு
மாக்கள் வாக்களித்தனர். வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயதால் ஆளும் கட்சி மக்கலைக்
கவனித்தது.
இடைத்தேர்தலின் வெற்றிக்கு
உரிமைகோரி ராமதாஸ் அரிக்கை வெளியிட்டார். அவர் வெளியிட்ட அறிக்கையில் எடப்பாடியின் பெயர் இல்லை. விஜயகாந்த் காரில் இருந்து கை அசைத்ததால்தான்
இடைத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வெற்றி பெற்றது என பிரேமலதா பெருமிதம் கொண்டார். எங்கள்ல் பிரசாரத்தால் தான்
வெற்றி கிடைத்ததென பாரதீய ஜனாவின் சார்பில் பொன்னார் மார் தட்டினார். உள்ளூராட்சித்
தேர்தலுக்காக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள்
இப்போதே துண்டு விரித்துள்ளனர்.
இடைத்தேதலின் வெற்றிக்கு கூட்டணிக்கட்சிகள் அனைத்தும் தான் காரணம்
என எடப்பாடி பழனிச்சாமி பட்டியலிட்டார். இந்த வெற்றியினால் எடப்பாடியின் கை ஓங்குகி
உள்ளது. பன்னீரின் பலம் குறைந்துள்ளது. விஜயகாந்தின் வீட்டுக்குச் சென்ற வி.சி.சண்முகம்
இடைத்தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டியில் ராமதாஸின் குரலே ஓங்கி ஒலித்தது. ஆனால், விஜயகாந்தின் வீட்டுக்குச்
சென்று நன்றி சொன்னதன் அரசியலை ராமதாஸ் உணர்ந்திருப்பார். உள்ளூராட்சித்தேர்தலின்போது
உரசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment