Thursday, February 6, 2020

இந்தியாவின் இமாலய இலக்கை விரட்டி வென்ற நியூஸிலாந்து


ஹமில்டனில்   நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள்  போட்டியில்  வெற்றி பெற்ற நியூஸிலாந்து புதிய சாதனை படைத்தது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா நான்கு விக்கெற்களை இழந்து 347ஓட்டங்கள் எடுத்தது. 347 எனும் இமாலய இலக்கை நியூஸிலாந்தினால் நெருங்க முடியாது  என அனைவரும் எண்ணியிருந்த வேளை 48.1 ஓவர்களில் ஆறு  விக்கெற்களை இழந்து 348  ஓட்டங்கள் குவித்த நியூஸிலாந்து வெற்றி பெற்றது.

இந்திய அணியில் ஜாதவ், ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்றனர். இந்தியாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ரோஹித் சர்மா, ஆகிய இருவரும் காயம் காரணமாக அணியில் இடம் சேர்க்கப்படவில்லை.இடம்பெற்றார்கள். ஒருநாள் கிறிக்கெற்றுக்கு  அறிமுகமான  பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகிய இருவரும்   ஆர ம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களம் இறங்கினர்.

பந்துவீச்சுக்குச் சாதகமான சூழல் நிலவியபோதும் புதிய தொடக்க ஜோடியான மயங்க் அகர்வால் - பிரித்வி ஷா ஆகிய இருவரும்  தமது இடத்தை உறுதி செய்வதற்காக துடிப்புடன் விளையாடினார்கள். இந்த ஜோடி 50 ஓட்டங்களைச் சேர்த்தபோது பிரித்விஷா 20 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.  மயங் அகர்வாலுடன்  கோலி ஜோடி சேர்ந்தார். மயங் அகர்வால் 31 ஓட்டங்களில் ஆட்டமிழக்க ஷ்ரேயாஸ் ஐயார், கோலியுடன் இணைந்தார்.  ஷ்ரேயஸ் ஐயர் ஆரம்பத்தில் மிகவும் தடுமாறினார். நிதானமாகவேஓட்டங்கள் சேர்த்தார்.  ஒன்பதாவது ஓவரில் இணைந்த இந்த ஜோடி 25-வது ஓவரின் முடிவில் பிரிந்தது. 51 ஓட்டங்கள் எடுத்த கோலி ஆட்டமிழந்தார்.  இந்திய அணி இரண்டு விக்கெற்களை இழந்து 134 ஓட்டங்கள் எடுத்தது.  கோலியும், ஷ்ரேயஸ் ஐயரும் இணைந்து 102 ஓட்டங்கள் எடுத்தனர். ஸ்ரேயாஸ் ஐய்யருடன், ராகுல் களம் புகுந்தார். எந்த இடத்தில் ஆடச்சொன்னாலும் அசத்தாமல் விலையாடும் ராகுல் தனக்கே உரிய பாணியில் விளையாடினார்.

  66 பந்துகளில் அரை சதமெடுத்தார் ஷ்ரேயஸ் ஐயர். விரைவாக ஓட்டங்கள் எடுப்பார் என்கிற நம்பிக்கையில் தான் இந்திய அணி நிர்வாகம் ராகுலை 5-ம் நிலை வீரராகக் களமிறக்குகிறது. அந்த நம்பிக்கையை இந்த முறையும் ராகுல் வீணாக்கவில்லை. 35-வது ஓவரில் சோதி பந்துவீச்சில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்கள் அடித்தார். பிறகு செளதி வீசிய ஓவரிலும் தொடர்ச்சியாக இரு சிக்ஸர்கள் அடித்தார். செளதி வீசிய 40-வது ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்தார் ஐயர். 40-வது ஓவரின் முடிவில் இந்திய அணி 3 விக்கெற் இழப்புக்கு 251 ஓட்டங்கள் எடுத்தது.

ஐயரும், ராகுலும் பிரமாதமாக விளையாடியதால் இன்னொரு 100 ஓட்டங்கள் கூட்டணி இந்திய அணிக்குக் கிடைத்தது. 2015-க்குப் பிறகு முதல்முறையாக 3-வது, 4-வது விக்கெட்டுகளுக்கு இந்திய அணி 100 ஓட்டங்களைக் கடந்தது.  இவர்கள் இருவரும் சேர்ந்து 136 ஓட்டங்கள் எடுத்தனர். தனது முதலாவது ஒரு நாள் சத்தை அடித்த ஸ்ரேயாஸ் அய்யர் 103 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

மணிஷ் பாண்டேக்குப் பதிலாக இந்திய அணியில் இடம்பிடித்த ஜாதவ்,  ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். ராகுலும் ஜாதவும் கடைசி 5 ஓவர்களில் அதிரடியாக விளையாடி  56 ஓட்டங்கள் சேர்த்தார்கள்.  ராகுல் 64 பந்துகளில் 6 சிக்ஸர்இ 3 பவுண்டரிகளுடன் 88 ஓட்டங்களும் ஜாதவ் 1 சிக்ஸர்  3 பவுண்டரிகளுடன் 26 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

இந்திய அணிக்கு எதிராக நியூஸிலாந்து அணி 280 ஓட்டங்களுக்கு மேல் இலக்கை விரட்டியதில்லை. இதனால் இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெல்லும் என்கிற நம்பிக்கை இந்திய ரசிகர்களுக்கு ஏற்பட்டது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான குப்திலையும்,நிக்கோல்ஸ்சையும் 15 ஆவது ஓவர் வரை இந்திய வீரர்களால் பிரிக்க முடியவில்லை. இவர்கள் இருவரும் 85 ஓட்டங்கள் சேர்த்தார்கள். 32 ஓட்டங்களில் குப்தில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த  ப்ளண்டல் ஒன்பது ஓட்டங்களுடன் வெளியேறினார். ரெய்லர், நிக்கோல்ஸ் ஜோடி விளையாட்டை நியூஸிலாந்தின் பக்கம் திருப்பியது.

82 பந்துகளில் 78 ஓட்டங்கள் எடுத்த நிகோல்ஸை கோலி ரன் அவுட் செய்தார். இது ஒரு அற்புதமான ஆட்டமிழப்பு. ரெய்லர், லதாம்     கூட்டணி  இந்தியாவின் சவாலுக்கு பதிலடி கொடுத்தது. இவர்கள் இருவரும் விரைவாக ஓட்டங்களைக் குவித்தனர். குல்தீப் யாதவ்,  ஷர்துல் தாக்குர் ஆகிய இருவருடைய ஓவர்களையும் குறிவைத்துத் தாக்கினார்கள்.   தாக்குர் வீசிய 40-வது ஓவரில் டெய்லரும் லதமும் 22  ஓட்டங்கள் எடுத்தார்கள். 48 பந்துகளில் 2 சிக்ஸர்கள்  8 பவுண்டரிகளுடன் 69 ஓட்டங்கள் எடுத்த லதம்இ குல்தீபின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  இவர்கள் இருவரும் இணைந்து 124 ஓட்டங்கள் எடுத்தனர்.

73 பந்துகளில் சதமடித்தார் டெய்லர். ஷமி வீசிய 46-வது ஓவரில் நீஷம் 9 ஓட்டங்களிலும் கிராண்ட்ஹோம்  ஒரு ஓட்டத்துடனும்  ஆட்டமிழந்தார்கள். இதனால் ரி20 ஆட்டங்களில் ஏற்பட்டதுபோல நியூஸிலாந்து அணி மீண்டும் தடம் புரளுமா என்கிற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் டெய்லர் கடைசிவரைக் களத்தில் இருந்து அணியைப் பத்திரமாகக் கரை சேர்த்தார்.

   48.1 ஓவர்களில் 6 விக்கெற் இழப்புக்கு 348 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது நியூஸிலாந்து அணி. டெய்லர் 109, சான்ட்னர் 12 ஓட்டங்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். ஷர்துல் தாக்குர் 9 ஓவர்களில் 1 விக்கெட் எடுத்து 80 ஓட்டங்கள் கொடுத்தார். குல்தீப் யாதவ்  10 ஓவர்களில் 2 விக்கெட் எடுத்து 84 ஓட்டங்கள் கொடுத்தார்.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது நியூஸிலாந்து அணி. 2-வது ஒருநாள் போட்டிபெப்ரவரி 8 ஆம் திகதி நடைபெறுகிறது.

No comments: