தென் ஆபிரிக்காவில் நடைபெறும் 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண
கிரிக்கெற் அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடிய இந்தியா 10 விக்கெற்றால் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. 'நடப்பு சாம்பியன்' இந்திய அணி 8வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறி சாதித்தது
. போர்ட்செப்ஸ்ரூமில் நடந்த முதல் அரையிறுதியில்
நாணயச் சுழற்சியில் வெற்ரி பெற்ற பாகிஸ்தான் முதழ்லில் துடுப்பெடுத்தாடியது.
பாகிஸ்தான் அணிக்கு ஹைதர் அலி,ஹுரைய்ரா ஜோடி ஆரம்ப்த்த்
உடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கினர். சுஷாந்த் பந்துவீச்சில் நான்கு ஓட்டங்கள் எடுத்த
ஹீரையா ஆட்டமிழந்தார். பிஷ்னாயின் சுழற்பந்தில் ஓட்டம் எடுக்காது பகத் ஆட்டமிழந்தார்
ஹைதர் அலியும் கப்டன் ரோகைல் நாசிரும் அணியை மீட்க முயற்சித்தனர். 56 ஓட்டங்கள் எடுத்த ஹைதர் அலி, ஜெய்ஸ்வாலின் பந்தி
ஆட்டமிழந்தார். அதன் பின்னர் பாகிஸ்தானின் வீர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
நான்கு விக்கெற்களை இழந்து 146 ஓட்டங்கள் எடுத்த
பாகிஸ்தான் 26 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 6 விக்கெற்களை இழந்தது.
கப்டன் நாசிர் அதிகபட்சமாக 62 ஓட்டங்ன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி 43.1 ஓவரில் 172 ஓட்டங்கள்
எடுத்தது. இந்தியா சார்பில் சுஷாந்த் மூன்று விக்கெற்களையும், கார்த்திக் தியாகி, ரவி பிஷ்னாய் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் ற்களையும்
வீழ்த்தினர்.
13 எனும் இலகுவான இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால், சக்சேனா ஜோடி நல்லதொரு கொடுத்தது. இருவரும் அவ்வப்போது பவுண்டரி அடிக்க ஓட்ட எண்ணிக்கை சீராக உயர்ந்தது.
இந்திய அணி 35.2 ஓவர்களில் விக்கெற் இழப்பின்றி 176 ஓட்டங்கள் எடுத்து 10 விக்கெற் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜெய்ஸ்வால் 105 ஓட்டங்களும்,சக்சேனா 59 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இளையோர் உலகக்கிண்ணத் தொடரில் இந்தியா ஏழாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
No comments:
Post a Comment