Monday, February 3, 2020

நியூஸிலாந்தில் சாதித்தது இந்தியா



நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி ரி20 போட்டிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 5  போட்டிகள் கொண்ட ரி20 தொடரை 5-0 என முழுமையாக கைப்பற்றியுள்ளது. நியூஸிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 5-ஆவதும் , கடைசியுமான டி20 ஆட்டம்  ஞாயிற்றுக்கிழமை மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்றது. இந்திய அணியில் விராட் கோலி இடம் பெறவில்லை.   ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்தியா விளையாடியது.  நாணயச்சுழற்சியில்  வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 163  ஓட்டங்கள் எடுத்தது.

கேஎல் ராகுல்,சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சஞ்சு சாம்சன்   இரண்டு ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து கேஎல் ராகுலுடன்  ரோஹித் சர்மா ஜோடி சேர்ந்தார்.  இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோஹித் சர்மா 35 பந்துகளில் 3 பவுண்டரி,2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். மறுமுனையில் கேஎல் ராகுல் 45  ஓட்டங்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். கேஎல் ராகுல் ஆட்டமிழக்கும்போது இந்தியா 11.3 ஓவர்களில் 93  ஓட்டங்கள் எடுத்திருந்தது.
 60 ஓட்டங்கள் எடுத்த  காயம் காரணமாக ரோஹித் வெளியேறினார். அப்போது இந்தியா 138  ஓட்டங்கள் எடுத்திருந்தது. அதன்பின் நியூஸிலாந்தின் நேர்த்தியான பந்து வீச்சுஇந்திய வீரர்களைத் தடுமாறவைத்தது. ,ர் இந்தியாவால் ஓட்டங்கள் குவிக்க இயலவில்லை 

19 ஓவர்களில் இந்தியா மூன்று விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரை டிம் சவுத்தி வீசினார். முதல் பந்தை சிக்சருக்கும், 2-வது பந்தை பவுண்டரிக்கும் விரட்டினார் மணிஷ் பாண்டே. அதன்பின் நான்கு பந்தில் ஐந்து ஓட்டங்களே அடித்தனர். கடைசி ஓவரில் 15 ஓட்டங்கள் அடிக்க இந்தியா 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்கள்  எடுத்தது.. ஷ்ரேயாஸ் அய்யர் 31 பந்தில் 33  ஓட்டங்களுடனும், மணிஷ் பாண்டே 4 பந்தில் 11  ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து அணி சார்பில் குகலின் 4 ஓவரில் 25 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார்

164 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி  20 ஓவர்களில் ஒன்பது விகெற்களை இழந்து 156 ஓட்டங்கள் எடுத்தது.ஏழு விக்கெற்களால் தோல்வியடைந்தது.  . அந்த அணிக்கு தொடக்கம் படுமோசமாக அமைந்தது. முதல் விக்கெட்டாக கப்தில் வெறும் 2  ஓட்டங்களுக்கு பூம்ரா வேகத்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து  அதிரடி காட்டிய கோலின் முன்ரோ 6 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து வாஷிங்டன் சுந்தர் ஓவரில் போல்டானார். அடுத்து களமிறங்கிய டாம் புரூஸும் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதனால், அந்த அணி 17 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதையடுத்து,சைஃப்ர்ட்டுடன் ராஸ் டெய்லர் இணைந்தார். இந்த இணை தொடக்கத்தில் விக்கெட்டைப் பாதுகாத்து விளையாடியது. இதன்பிறகு, ரன் ரேட்டை உயர்த்தும் நோக்கில் இருவரும் அதிரடிக்கு மாற முயற்சித்தனர்.
இந்த சூழலில் இந்திய அணி ஷிவம் துபேவை பந்துவீச அழைத்தது. இவருடைய ஓவருக்கு முன் நியூஸிலாந்து அணி 9 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 64 ரஓட்டங்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், 10-வது ஓவரை வீசிய துபே 34 ஓட்டங்களை வாரி வழங்கினார். இதனால், இந்த ஓவரின் முடிவில் நியூஸிலாந்து அணி 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 98 ஓட்டங்களை எட்டி வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டை எளிதாக்கியது. வெற்றி பெற ஒரு ஓவருக்கு 7-க்கும் குறைவான ஓட்டங்களே தேவை என்ற நிலை ஏற்பட்டது. எனவே, ஆட்டம் மீண்டும் நியூஸிலாந்து பக்கம் திரும்பியது.
ஆனால், இந்திய அணி கடந்த இரண்டு ஆட்டங்களைப்போல் விடாமுயற்சியோடு ஆட்டத்தை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 29 பந்துகளில் அரைசதம் அடித்து நம்பிக்கையளித்து வந்த சைஃபர்ட் அரைசதம் அடித்த கையோடு சரியாக 50 ஓட்டங்களுக்கு சைனி பந்தில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் இந்திய அணியின் வெற்றிக்கான கதவைத் திறந்தது. அடுத்த ஓவரில் பூம்ரா யார்க்கரில் மிட்செல் 2 ஓட்டங்களுக்கு போல்டானார்.

இதனால், அனுபவ வீரரான ராஸ் டெய்லர் மீது பொறுப்பும் நெருக்கடியும் அதிகரித்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டும் மீண்டும் உயரத் தொடங்கியது.
இந்நிலையில், ஷர்துல் தாக்கூர் மீண்டும் ஒரு அற்புதமான ஓவரை வீசி நியூஸிலாந்துக்கு இரட்டை அடி கொடுத்தார். இந்த ஓவரின் 3-வது பந்தில் சான்டனரையும், 5-வது பந்தில் குக்லெயினையும் ஆட்டமிழக்கச் செய்தார் ஷர்துல் தாக்கூர்.
இந்த நெருக்கடியிலேயே அடுத்த சைனி வீசிய 18 ஆவது  ஓவரின்   முதல் பந்தில்     53 ஓட்டங்களில்  ராஸ் டெய்லர் ஆட்டமிழந்தார். இதனால், கடைசி இரண்டு ஓவர்களி நியூஸிலாந்து அணியின் வெற்றிக்கு 24 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இந்நிலையில்இ 19-வது ஓவரை வீசிய பும்ரா வெறும்  மூன்று ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து,நியூஸிலாந்து அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த சௌதியின் விக்கெட்டையும் கைப்பற்றினார்.
  நியூஸிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 21 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஒரு விக்கெட் மட்டுமே மீதமிருந்தது. இந்த ஓவரை ஷர்துல் தாக்கூர் வீசினார். இதில், சோதி இரண்டு இமாலய சிக்ஸர்கள் அடித்து அச்சுறுத்தினார்.  என்றாலும்  13 ஓட்டங்கள் மட்டுமே நியூஸிலாந்து அணிக்கு கிடைத்தது.

    இந்திய ஏழு ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்திய அணித் தரப்பில் பும்ரா மூன்று விக்கெட்டுகளையும், நவ்தீப் சைனிஇ ஷர்துல் தாக்கூர்ஆகியோர்  தலாஇரண்டு விக்கெட்டுகளையும்  . வாஷிங்டன் சுந்தர்  ஒரு  விக்கெட்டையும்  கைப்பற்றினர்.

கடந்த இரண்டு ஆட்டங்களில் கையில் இருந்த வெற்றி வாய்ப்புகளைத் தவறவிட்டு சூப்பர் ஓவர் வரை எடுத்துச் சென்று தோல்வியடைந்த நியூஸிலாந்து அணிஇ இந்த ஆட்டத்திலும் அதே தவறைச் செய்துள்ளது. தொடக்கத்தில் திணறினாலும், சைஃப்ர்ட்,டெய்லர் இணை நியூஸிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பை எளிதாக்கியது. ஆனால், முக்கியமான கட்டத்திலும் நெருக்கடியை எதிர்கொள்வதிலும் திணறிய நியூஸிலாந்து இந்த தொடரின் 5-வது ஆட்டத்திலும் தோல்வியடைந்தது.

No comments: