Wednesday, August 26, 2020

அண்டர்சன் 600 விக்கெட் வீழ்த்தி சாதனை

 


இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் அண்டர்சன், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 600 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் இச்சாதனையை படைத்த முதல் வேகப்பந்து வீச்சாளர் ஆனார்.

பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு டெஸ்ட் முடிவில் இங்கிலாந்து 1 - 0 என முன்னிலையில் உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சவுத்தாம்டனில் நடக்கிறது. பாலோ ஆன் பெற்ற பாக்., அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.


கடைசி நாளான நேற்று, பாக்., கப்டன் அசார் அலி விக்கெட்டை வீழ்த்திய ஆண்டர்சன், டெஸ்ட் போட்டியில் 600 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார். இதன் மூலம் 600 விக்கெட் எடுத்த முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.

இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் அண்டர்சன் தற்ப்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் அதிகமான விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார். பந்தை ஸ்விங் செய்வதில் மன்னன் ஆவார்.


டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில், முத்தையா முரளிதரன் (800), ஷேன் வார்ன் (708) அனில் கும்ப்ளே (619) ஆகியோருக்கு அடுத்தபடியாக 4-வது இடத்தில் ஆண்டர்சன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

No comments: