விஜயின்
அரசியல் பிரவேசம் பெரும்
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலாவது மாநாட்டில்
அனல் பறக்கப் பேசிய விஜய், திராவிட முன்னேற்றக் கழகத்தையும், பாரதீய ஜனதாவையும் ஒரு
பிடி பிடித்துள்ளார். அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றி விஜய் எதுவுமே பேசவில்லை.
மத்திய
அரசையும் , தமிழக
அரசையும் போட்டுத்தாக்கிய
விஜயின் மனதில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புனிதமானதாகத் தெரிந்தது.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர விஜய் விரும்புவதாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.விஜயின் தமிழக வெற்ரிக் கழகத்தின் சார்பில்
கருத்துத் தெரிவிக்கும் பொதுச்
செயலாளர் புஸ்லி
ஆனந்தன் வாயைத் திறக்காமல் மெளனம் காத்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடனான கூட்டணி உண்மையாக இருக்கும்
என்ற சந்தேகம் நிலவியது.
மெகா
கூட்டணி அமைக்கும் கனவில் இருக்கும் எடப்பாடிக்கு விஜயின்
சமிக்ஞை தேனாக இனித்தது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி இல்லை என புஸ்லி ஆனந்தன்
பகிரங்கமாக அறிவித்ததால் கூட்டணிக்
கதவு மூடப்பட்டது. இந்த இடை வெளியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் ,தமிழக
வெற்றிக் கழகத்துக்கும் இடையில் நடைபெற்ற இரகசியப் பேச்சுவார்த்தை முறிவடைந்து விட்டதாகசெய்தி வெளியாகியது.
அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகம் 20 தொகுதிகளைக் கொடுக்க முன்வந்தபோதும், 60 தொகுதிகளும், துணை முதல்வர் பதவியும் வேண்டும் என விஜய்தரப்பு அடம்
பிடித்துள்ளது. இதனால் இரகசியப்
பேச்சுவார்த்தை முறிவடைந்தது.
விஜயுடன் கூட்டணி சேர பல கட்சிகள் தயாராக இருக்கின்றன. ஆனால், எந்தக் கட்சியும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு பலமான வேட்பாளர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இல்லை. விஜயும், புஸ்லி ஆனந்தும் மட்டும்தான் தெரிந்த முகங்களாக இருக்கின்றன. விஜய் இருப்பதால் வெற்றி பெற்று விடலாம் என புஸ்லி ஆனந்தும் மற்றவர்களும் நம்புகின்றனர்.
திராவிட
முன்னேற்றக் கழகத்தில் உள்ள கட்சிகளில் ஒருசில வெளியேறும் என்ற
எதிர் பார்ப்பில் எடப்பாடி இருக்கிறார். விஜய் தரப்பும் அதே நிலைப் பாட்டில் இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் திருமாவளவன் அடிக்கடி
முரண்படுகிறார்.அவரது கட்சிப் பிரமுகரான ஆதவன் அர்ஜுனா திராவிட முன்னேற்றக் கழகத்தை பகிரங்கமாக விமர்சிக்கிறார். இந்தக் காரணங்களினால் திருமாவின்
வெளியேற்றத்தை எடப்பாடியும், விஜயும் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். முதலமைச்சர் ஸ்டாலினும், திருமாவளவனும் சுமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்தி அந்தப்
பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்கள்.
திராவிட
முன்னேற்றக் கழகமும், அண்ணா திரவிட முன்னேற்றக் கழகமும் தமிழகத்தில் 65 சதவீத வாக்குகளைக் கொண்டுள்ளன.
ஏனைய கட்சிகள் மிகுதியான
35 சதவீத வாக்குகளைப் பங்கு போட்டுள்ளன. விஜயின்
தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் எத்தனை சதவீத வாக்குகளைப் பெறும் என்பது தேர்தலுக்குப் பின்பே தெரியவரும்.
நடிகர்
விஜய், அரசியல்தலைவரானதும் சென்னையில் நடைபெறும் அம்பேத்கர் புத்தகவிழாவில் கலந்துகொள்ளப்போவதாகவும் அந்த நிகழ்ச்சியில் திருமாவளவனும் பங்கேற்பார் என்ற தகவல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணல் அம்பேத்காரின் வழியில் அரசியல் நடத்துபவர் திருமாவளவன். விஜயும் தனது அரசியல் வழிகாட்டியாக அம்பேத்காரைப் பின்பற்றுகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் திருமாவளவனுக்கும் இடையிலான பஞ்சாயத்து முடிவுக்கு வந்த வேளையில் டிசம்பர் 6 ஆம் திகதி புத்தக
வெளியீட்டு விழா நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்தை 1999-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக விசிக முன்வைத்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் கடந்த செப்.ரெம்பர் 12 ஆம் திகதி நிர்வாகிகளுடன் பேசும்போது, ஆட்சியில் பங்கு தொடர்பான கருத்தை திருமாவளவன் தெரிவித்திருந்தார். இந்த காணொலி, வெளிநாட்டு பயணத்தை முடித்து முதல்வர் தமிழகம் திரும்பிய நிலையில், திருமாவளவனின் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து நீக்கப்பட்டது சர்ச்சையானது. எனினும், இந்த கருத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என திருமாவளவன் உறுதிபட தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே,
விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, விசிக இல்லாமல் வடமாவட்டங்களில் திமுக வென்றிருக்க முடியாது என்பது உள்ளிட்ட விமர்சனங்களை தெரிவித்த நிலையில், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், கூட்டணியில் தொடர்கிறோம் எனக் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் திருமாவளவன்.
இந்நிலையில்,
கடந்த 27ம் திகதி
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்திய கட்சித் தலைவர் விஜய், கூட்டணியில் சேருவோருக்கு ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று அறிவித்தார். இதன்மூலம் அவர் விசிகஉள்ளிட்ட கட்சிகளுக்கு மறைமுகமாக கூட்டணி அழைப்பு விடுப்பதாகபேசப்பட்டது.
விஜய்யின்
ஆட்சியில் பங்கு தொடர்பான கருத்துக்கு விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆதரவு தெரிவித்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். குறிப்பாக விசிக தலைவர் திருமாவளவனோ, "பண்டிகை காலத்து தள்ளுபடி விற்பனைபோல" ஆட்சியதிகாரத்தில் பங்கு என்ற அரசியல் உத்திவெளிப்பட்டுள்ளது என கடும் விமர்சனங்களை
முன்வைத்திருந்தார். இந்த கருத்து மோதல்களுக்கு இடையே, இரு தலைவர்களும் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஒரே மேடையை பகிர்ந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு
வார இதழ் சார்பில் சட்டமேதை அம்பேத்கர் குறித்த தொகுப்பு ஒன்று தயாராகி வருகிறது. இத்தொகுப்பில் நீதிபதி சந்துரு, இந்து என்.ராம், விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உட்பட 40-க்கும் மேற்பட்டோர் பங்களிப்பு செய்துள்ளனர். சென்னையில் வரும் டிசம்பர் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க அம்பேத்கரை கொள்கை தலைவர்களாக ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில்விசிக தலைவர் திருமாவளவனுக்கும், தவெக தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த
நிலையில் சென்னையில் நடைபெற உள்ள அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில்
கட்சி ஆரம்பித்த தவெக தலைவர் விஜய். கடந்த மாதம் நடந்திய மாநாட்டின் மூலம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தினர் தவெக தலைவர் விஜய். மாநாடு நடந்து கிட்டதட்ட 20 நாட்களுக்கு மேலான நிலையில் இன்று வரை மாநாட்டில் விஜய் பேசிய பேச்சு குறித்து தான் அரசியல் கட்சி தலைவர்கள் இன்றுவரை ஆதரவாகவும், எதிராகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த
செய்திக்கு திருமாவளவன் பல முறை மறுப்பு
தெரிவித்தார். இதுகுறித்து திருமாவளவன் கூறுகையில், 2026ம் ஆண்டு நடைபெறும்
சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் தான் நாங்கள் கூட்டணி வைப்போம் என்றும் உறுதியாக தெரிவித்தார்.புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பது குறித்து பின்னர் தான் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், சென்னையில் டிசம்பர் 6ம் திகதி நடைபெற உள்ள புத்த வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையைக் கொண்டு தான் திருமாவளவன் பங்கேற்க மறுப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. திருமாவளவன் மறுப்பு தெரிவித்த நிலையில், தவெக தலைவர் விஜய்யின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று பல்வேறு தரப்பினர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஒவ்வொரு விஷயத்திற்கும் வித்தியாசமாக முடிவெடுக்கும் விஜய் இதற்கு என்ன முடிவெடிப்பார் என்று பெருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ரமணி
24/11/24
No comments:
Post a Comment