அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிறிக்கெற் அணி 'பார்டர்- - கவாஸ்கர்' டிராபி தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் கடந்த 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் ஆரம்பமானது.
இத்தொடரில்
இந்தியாவின் அஷ்வின் 38, அவுஸ்திரேலியாவின் நேதன் லியான் 36, 'சுழல்' ஜாலம் நிகழ்த்த உள்ளனர். ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலில் அஷ்வின்
105 போட்டிகளில் ,
536 விக்கெற்களை எடுத்து 7 ஆவது இடத்திலும், 8 ஆவது இடத்தில்
லியான் (129 போட்டிகளில் 530 விக்கெற்கள
எடுத்து இருக்கிறார்.
இருவரும்
எப்படி பார்டர்-கவாஸ்கர் தொடரில் ஒட்டுமொத்தமாக அஷ்வின் 114 விக்கெட் (22 போட்டி), லியான் 116 விக்கெட் (26 போட்டி) வீழ்த்தியுள்ளனர். இதில் அவுஸ்திரேலிய மண்ணில் அஷ்வின் 39 விக்கெட் (10 போட்டி), லியான், 60 விக்கெட் (15 போட்டி) சாய்த்துள்ளனர்.
சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு சராசரியில் ஆசிய மண்ணில் அஷ்வின் (21.76), லியானை (30.81) முந்துகிறார். ஆசியாவுக்கு வெளியே அஷ்வினைவிட (33.14), லியான் (30.09) அசத்தியுள்ளார். உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் அஷ்வின் (40 போட்டி, 194 விக்.,), லியான் (43 போட்டி, 187 விக்.,) முதலிரண்டு இடங்களில் உள்ளனர்.
No comments:
Post a Comment