திராவிட முன்னேற்றக் கழக அரசின் மீது மக்கள் வெறுப்டைந்துள்ளனர். பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடித்தது. சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது என எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அவை உண்மையா, பொய்யா என அரிவதற்குரிய சந்தர்ப்பம் ஒன்று உருவாகி உள்ளது. கிழக்கு ஈரோடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானதால் அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்படுள்ளது.
கிழக்கு ஈரோடு தொகுதியில் அண்ணா திராவிட முன்னாற்றக் கழகம்,
பாரதீய ஜனதா ஆகியவை போட்டியிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்கடிக்குமா என்ற
எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
காங்கிரஸ்
சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும்
ஒரு இடைத் தேர்தலைச் சந்திக்க உள்ளது. ஈரோடு
கிழக்கு தொகுதி கடந்த ஒரு ஆண்டுக்குள் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை இழந்திருக்கிறது.
மூன்றாஅவ்து முறை தேர்தலுக்குத் தயாராகி உள்ளது.
2021 இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பாக இளங்கோவனின்
திருமகன் ஈவெரா போட்டியிட்டு 67,300 வாக்குகளைப்
பெற்றார். அப்போது அவரை எதிர்த்து தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் யுவராஜா போட்டியிட்டு
58,396 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார்.
திருமகன் மறைவுக்குப் பின்னர் அந்தத் தொகுதியில்திரவிட
முன்னேற்றக் கழகம் போட்டியிடும் என்ற எதிர் பார்ப்பு எழுந்தது. ஆனால், ஈரோடு கிழக்குத் தொகுதியை விட்டுக் கொடுக்க கங்கிரஸ்
தயாராக இல்லை. வேட்பாளர் தெரிவுக்காக காங்கிரஸில்
குடுமிப் பிடிச் சண்டை நடந்தது.
காங்கிரஸ் கட்சியே எதிர் பார்க்காத நிலையில் ஸ்டாலின் முடிவு எடுத்தார். திருமகனின் தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்தார். அதைக் காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல; இளங்கோவனே எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் அவர் கொரோனா தொற்று ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு அப்போதுதான் சுகமடைந்தார். அவரை தேர்தல் பிரச்சார களத்தில் இறங்கிவிடுவது சரியாக இருக்குமா என பலரும் நினைத்தனர். ஒரு பக்கம் மகனின் இழப்பு மற்றொரு பக்கம் உடல்நிலை என அவர் பல துன்பங்களை அனுபவித்து வந்தநிலையில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவில் களம் கண்டார் இளங்கோவன்.
ஈரோடு
இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. தேர்தல் பிரசாரத்தை திராவிட முன்னேற்றக்
கழகம் கையில் எடுத்தது.
'ஈரோடு கிழக்கு' என்ற புதிய ஃபார்முலாவை திராவிட
முன்னேற்றக் கழகம் அறிமுகம் செய்தது. அதை எதிர்க்கட்சிகள்
கடுமையாக எதிர்த்தன. அதனைச் சுட்டிக் காட்டி
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், விஜயகாந்தின் கட்சியும் இடைத் தேர்தலைப்
புறக் கணித்தன.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் கையில் தொகுதி தேர்தல்
பணிகளை ஒப்படைத்தது திராவிட முன்னேற்றக்கழகம்.
1,10,556 வாக்குகளைப் பெற்று இளங்கோவன் அமோக வெற்றியைப் பெற்றார். இளங்கோவனின் திடீர் மறைவை அடுத்து விரைவில் ஈரோடு
கிழக்கு தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த முறையும் திராவிட முன்னேற்றக் கழகம் களத்தில் இறங்கக் கூடும்
என சிலர் கருதிய நிலையில் 'ஈரோடு 'திமுக கூட்டணி
வசமாகும்' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற
உள்ளது. அந்த இடைவெளியில் கூடுதலாக ஒரு எம்.எல்.ஏவை பெறுவதால் திராவிட முன்னேற்றக்
கழகத்துக்கு இலாபமும் கிடைக்கப் போவதில்லை.
எனவே தேவையற்ற ரிஸ்க்கை திராவிட முன்னேற்றக்
கழகம் எடுக்காது.
2025
ஆம் ஆண்டு ஜனவரி அல்லது பெப்ரவரியில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது.
அதனுடன் சேர்த்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்படலாம். இடைத் தேர்தலில்
போட்டியிடுவதற்கு காங்கிரஸ் கட்சிக்குள் வழமைபோல் அடிபிடி ஏற்பட்டுள்ளது.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின்
இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத், ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் இடையே தீவிரமான
போட்டி நிலவி வருகிறது. திருமகன் ஈ.வே.ரா மறைவுக்குப் பிறகு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட
முதலில் சஞ்சய் சம்பத்திடம்தான் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்
போட்டியிட ஆர்வம் காட்டவில்லை. இளங்கோவன் போட்டியிடுவதை அப்போது திராவிட முன்னேற்றக் கழகம்
விரும்பியது. இந்த முறை தேர்தலில் போட்டியிட
சஞ்சய் சம்பத் விரும்புகிறார். டெல்லி தலைமையிடமும் இளங்கோவனின் ஆதரவாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின்
சிபார்சில் ராஜன் முயற்சி செய்கிறார்.. இவர் கடந்த சட்டமன்றத் தேர்தல்,
பிறகு நடந்த இடைத்தேர்தலின் போதும் சீட் பெறுவதற்குத் தீவிரம் காட்டினார். ஆனால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு
டெல்லியிலிருந்த செல்வாக்கால் அமைதியானார்.
இளங்கோவனின் தீவிர ஆதரவாளராக இருந்து பின்னாளில்
அவரிடமிருந்து விலகிய முன்னாள் மாவட்ட தலைவர் ஈபி ரவியும் முயன்று வருகிறார். இதற்கிடையில்
முன்னாள் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ஆதரவாளரை களமிறக்க தீவிரம்
காட்டி வருகிறார்.
ஒரு
வருடப் பதவிக்காக தேர்தலில் கோடிக்கணக்காகச் செலவளிக்க வேண்டும் என்பதையும் நினைவில்
கொள்ள வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டாம் மட்டத் தலைவர்களும் கிழக்கு ஈரோடு இடைத் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இருக்கின்றனர்.
ஈரோடு
கிழக்கு இடத் தேர்தல் எடப்பாடிக்கு திரிசங்கு
சொர்க்கமாக உள்ளது.இடைத் தேர்தலில் அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகம் நிச்சயம் தோல்வியடையும்.
எடப்பாடியின் தேர்தல் தோல்விப் பட்டியலில் ஒரு
எண்ணிக்கை கூடி அவருக்கு அவப் பெயரைத் கொடுக்கும். தொடர்ச்சியாக 10 தேர்தல்களில்
தோல்வியடைந்த எடப்பாடி காட்டமான ஒரு
அறிக்கையுடன் தேர்தலைப் புறக்கணிப்பார்.
விக்கிரவாண்டி
இடைத் தேர்தலை அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும், விஜயகாந்தின் கட்சியும் புறக்கணித்தன.
2026 தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் இருக்கும்
நிலையில், இந்த ஒரு தொகுதியில் மீண்டும் வாய்ப்பை இழந்து நிற்க எடப்பாடி தயாராக இல்லை என்பதே கள நிலவரமாக உள்ளது.
தனது இலக்கு எது என்பதை என்பதை விஜய் உறுதிசெய்துவிட்டார். அவரது வேலைத் திட்டத்தில் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் இடம்பெறப்போவதில்லை. கூட்டணிக்கு அழைப்பு விடுத்துக் காத்திருக்கிறார்.
சீமான்
சீறிக்கொண்டு வருவது உறுதி. எந்தத் தேர்தலையும் விடக்கூடாது என்பதே சீமானின் கொள்கை.
தோல்வியைப் பற்ரி அவர் கவலைப்படுவது இல்லை.
தமிழகத்தில்
பாரதீய ஜனதா வளர்ந்து விட்டதாக அறிக்கை விடும்
அண்ணாமலை என்ன செய்யப்போகிறார் எனத் தெரியவில்லை. எடப்பாடிக்குப் போட்டியாத
தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடையும் அண்ணாமலை
அறிக்கையுடன் நின்றுவிடும் நிலைதான் உள்ளது.
விக்கிரவாண்டியைப் போல கூட்டணிக் கட்சிக்கு கிழக்கு ஈரோடைத் தாரை வார்க்கும்
நிலையும் ஏற்படலாம்.
இடைத் தேர்தல் ஆளும் கட்சிக்குச் சாதகமானது என்ற
ஒரு நம்பிக்கையை இந்த ஈரோடு மீண்டும் உறுதிசெய்யும்.
ரமணி
29/12/24
தமிழன்,தம்ழிழகம்,ஸ்டாலின்,சீமான்,எடப்பாடி,மோடி
No comments:
Post a Comment