மக்கள்
அலையால் குலுங்கியது மதுரை
சாதித்துக்
காட்டினார் விஜய்
தமிழ்க
வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை
பாரபத்தி பகுதியில் கடந்த
வியாழக்கிழமை இலட்சக்
கணக்கான தொண்டர்களின் 506 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட
பிரமாண்டமான திடலில் நடைபெற்றது. இலட்சக்கணக்கான தொண்டர்கள் கூடி இருந்த இந்த
கூட்டத்தில் விஜய் வழக்கம் போல்
தீம் சாங் வெளியிட்டு, ரேம்ப்
வாக் சென்று தனது உரையை
துவக்கினார். விஜய் பேசுகையில், தங்களின்
கொள்கை எதிரி பாஜக என்றும்,
அரசியல் எதிரி திமுக தான்
என்றும் மீண்டும் வலியுறுத்தி பேசினார்.
பாஜக மற்றும் திமுக.,வை
மீண்டும் கடுமையாக தாக்கி பேசினார்
விஜய். பாஜக., உடன் கண்டிப்பாக
கூட்டணி கிடையாது என்றும் விஜய்
அறிவித்து விட்டார்.
4 மணிக்கு
தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த மாநாடு, ரசிகர்களின் பெரும்
கூட்டம் காரணமாக முன்கூட்டியே 3 மணிக்கே
தொடங்கியது.
நடிகர் விஜயின் பெற்றோர்களான எஸ்.ஏ.சந்திரசேகர் ஷோபா
ஆகியோருக்கும் மேடையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
விஜயின் மனைவியும் மகனும் மாநாட்டில்
பங்கு பற்றவில்லை.
243 தொகுதிகளிலும் தான் போட்டியிடுவதாக
நினைத்து வாக்களிக்குமாரு வேண்டுகோள் விடுத்தார். இதன் மூலம் கூட்டணி
இல்லை என்பதை சூசகமாகத் தெரிவித்துள்ளார்
விஜய்.
25 நிமிடங்கள்
விஜய் பேசினார். வழக்கம் போல்
திமுகவை கடுமையாக விமர்சித்தார்.பாஜக்வையும் அவர்
விட்டு வைக்கவில்லை. எட்ப்பாடி, ரஜினி ஆகியோரையும் சாதுவாக
சாடினார்.
பெரியார்,
அண்ணா, காமராஜர், அம்பேத்கார், விஜயகாந்த் ஆகியோரையும் துணைக்கு
அழைத்திருந்தார். பெரியாரின் கொள்கையைக் கடைப்பிடிக்கும் விஜய்யின் தொண்டர்கள் மேடையில்
யாகம் செய்தார்கள். அவர்கள் செய்த யாகம்
வினோதமானது. மழை
வரக்கூடாது என விஜயின்
ரசிகர்கள் யாகம் செய்தார்கள். மழை
வேண்டி மக்களும், விவசாயிகளும் யாகம்
செய்வது வழமையான சங்கதி. அஜித்தின் கடவுட் விஜயின் மாநாட்டுத் திடலில்
காட்சிப் படுத்தப்பட்டிருந்தது.
மதுரையில் நின்றுகொண்டு விஜயகாந்தை புகழ்ந்து பேசினார்., "மதுரை என்றால் நினைவுக்கு வருவது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுதான். நமது வைகை ஆறுதான். அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், மதுரை மீனாட்சி அம்மன்.இந்த மண்ணோட உண்மையான குணம் உணர்வுப்பூர்வமான மண். இந்த மண்ணில் வாழும் மக்களும் உணர்வுப்பூர்வமான ஆட்கள் தான்"
"இந்த மண்ணில்
கால் வைத்த பிறகு ஒருவரை
பற்றி தான் மனதில் ஓடிக்
கொண்டு இருந்தது. சினிமானாலும், அரசியல்
என்றாலும் சரி நமக்கு பிடித்தது
எம்ஜிஆர்.அவரோடு பழக எனக்கு
வாய்ப்பு கிடைக்கவில்லை அவரை போன்ற குணம்
கொண்ட விஜயகாந்த்துடன் பழகும் நிறைய வாய்ப்பு
கிடைத்தது. அவர் மதுரை மண்ணை
சேர்ந்தவர் தான். அவரை மறக்க
முடியுமா?." என்றார்.
திமுகவை தாக்கிப் பேசிய விஜயின்
பேச்சுகு அவரது தொண்டர்கள் ஆரவாரம்
செய்தார்கள். ஒரு சில இடங்கலில்
அவரது பேச்சு எல்லை மீறியது.
இவ்ஜய் பேசிய சில கீழ்த்தரமான
சொற்களால் பெண்கள் முகம்
சுழித்தார்கள்.
முதலமைச்சர்
ஸ்டாலினை அங்கிள், சித்தப்பா எனப் பேசியதை கட்சிசார்பற்றவர்கள்
கடுமையாகச் சாடியுள்ளனர். துப்புரவுப் பணியாளர்களின் போராட்டம் பற்றி விஜய் எதுவும்
பேசவில்லை.அம்புலன்ஸ் சாரதியை எடப்பாடி மிரட்டியதை
தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் கண்டித்தார்கள்.
விஜய் அதுபற்றி வாயைத் திறக்கவில்லை.
திமுகவையும்
சீமானையும் கடுமையாகச் சாடிய விஜய் , அவர்களின்
எதிர்ப்பு வாக்கைக் குறி வைக்கிறார்.
அதீத
வெயில் காரணமாக மாநாட்டில்
பங்கேற்ற பலருக்கும் உடநலக்குறைவு ஏற்பட்டிருந்தது. பலருக்கும் மாநாட்டு திடலிலேயே அமைக்கப்பட்டிருந்த
முதலுதவி மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும், சிலருக்கு முதலுதவி மட்டும்
போதுமானதாக இல்லை. இதையடுத்து சுமார்
10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அந்தளவுக்கு மதுரையில்
வெப்பம் மிக மோசமாகவே இருந்தது.
ஒருவர் மாரடைப்பால் இறந்துவிட்டார்.
மாநாடு
ஆரம்பமாவதற்கு முன்னர் மின்சாரம்
தாக்கி இளைஞர் ஒருவர்
மரணமானார். 100 அடி கொடிக்கம்பம் நிறுத்தப்பட்ட
போது கிறேன் அறுந்து விழுந்தது. உயிர்ச்
சேதம் எதுவும் ஏற்படவில்லை.
அங்கு நின்ற கார் ஒன்று
பலத்த சேதமடைந்தது.
பாரதீய
ஜனதாவையும், அதிமுகவையும் ஓரம்
கட்டி, திமுக எதிர் தவெக
என நிலைநாட்ட விஜய்
முயற்சிக்கிறார்.
கடந்த
காலங்களில் திமுக எதிர்ப்பு வாக்குகளை,
அதிமுகவும் , சீமானும் பங்கு போட்டன.
தனைத் தன்பக்கம் இழுக்க விஜய் திட்டம்
போடுகிறார்.
திமுக எதிர்ப்பு வாக்குகளையும்,
சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைத்து விஜய்யின்
அரசியல் நடவடிக்கை இருப்பதாக
அரசியல் விமர்சகர்கள்
கணிப்புகளை கூறுகிறார்கள்.
வழக்கமாக,
திமுகவின் எதிர்ப்பு வாக்குகளின் ஒரு
பகுதி பாஜகவுக்கம், பாஜகவின் எதிர்ப்பு வாக்குகளின்
ஒரு பகுதி திமுகவுக்கும்
செல்லும் நிலையில், இந்த இரு
எதிர்ப்பு வாக்குகளில் விஜய் எவ்வளவு பெறப்போகிறார்?
என்பதும் மிகப்பெரிய ஆர்வமாக உள்ளது.
அதேசமயம்,
விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என அவர்களது
தரப்பில் அதிகாரபூர்வமாக கூறிவிட்டதால், இனி அதிமுகவும் தவெக
கூட்டணிக்கு வர ஆர்வம்
காட்டாது. அந்தவகையில், நாம் தமிழர், பாமக,
தேமுதிக மற்றும் , கூட்டணிக்குள் இருக்கும்
கட்சிகளுக்கு வலையை விரிக்க துவங்கியிருக்கிறது
தவெக.
கடந்த
முறை விஜய் நடத்தியிருந்த முதலாம்
மாநாட்டில் திமுகவை மட்டுமே பிரதானமாக
குறி வைத்து விஜய் பேசியிருந்தார்.
இந்த
முறை எடப்பாடி,ரஜினி, சீமான் ஆகியோருடன் மோடியையும் தாக்கிப்
பேசினார்.
இலட்சக்
கணக்காகத் திரண்ட மக்கள் வெள்ளம்
வாக்காக மாறுமா என்பதை அறிய
2026 வரை காத்திருக்க வேண்டும்.
No comments:
Post a Comment