காலையில் பலி மாலையில் விபத்து
மதுரையில் கர்ஜித்த சிங்கம்
நடிகர்
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனது
இரண்டாவது மாநில மாநாட்டை மதுரை,
பரபத்தி பகுதியில் உள்ள 506 ஏக்கர்
பரப்பளவில் நேற்று
வியாழக்கிழமை பிரம்மாண்டமாக நடத்தி முடித்தது.
மாலை 4 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த
மாநாடு, இலட்சக்கணக்கான
மக்கள் கூடியதால் முன்கூட்டியே 3 மணிக்கே
தொடங்கியது.
மாநாட்டு
அரங்கம் முழுவதும் தொண்டர்களாலும்,
ரசிகர்களாலும் நிரம்பி வழிந்தது.
மாநாட்டுக்காக பதாகையைக்
கட்டிய இளைஞர் ஒருவர் மின்சாரம்
தாக்கி உயிரிழந்தார்.
சுமார்
100 அடிஉயரமான கொடிக்கம்பம் நிலை நாட்டப்பட்ட போது
கிறேன் கேபிள்
அறுந்ததால் கொடிக்கம்பம் விழுந்து கார் ஒன்று சேதமாகியது.
கொடிக் கம்பத்துக்கு அருகே இருந்தவர்கள் சிதறி
ஓடியதால் பெரும் ஆபத்து விலகியது.
விக்ரவாண்டியில்
நடைபெற்ற முதலாவது மாநில
மாநாட்டில் கலந்துகொண்ட நான்கு இளைஞர்கள்
பலியானார்கள். அப்போது விஜய் நேரில்
செல்லவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.விக்ரவாண்டியைப் போன்று அசம்பாவிதம் எதுவும்
நடகக்கூடாது என்பதில் ஏற்பாட்டாளர்கள் மிகுந்த
அவதானத்துடன் இருந்தார்கள். ஆஅனால், அவர்களையும் மீறி
அசம்பாவிதங்கள் நடந்துள்ளன.
தமிழகம்
மட்டுமல்லாது இந்தியாவே வியந்து பார்க்கும்
வகையில் மாநாடு நடை பெற்றது. அதிக
வெப்பம், கட்டுக்கடங்காத
கூட்டம் ஆகியவற்றால் சுமார் 60 பேர் மயங்கி
விழுந்தார்கள். இருவர்
மாரடைப்பால் மரணமானார்கள்.
விஜயின்
வருகைக்காக சுமார் 2 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் காத்திருந்தார்கள்.
விஜயைக்
கண்டதும் ஆரவார
கோஷம் வானைப் பிளந்தது. விஷேடமாக
அமைக்கப்பட்ட நடைபாதையில்
கையை அசைத்தபடி விஜய் நடந்தார்.
விஜயைப் பார்த்த பின்னர் கூட்ட மெது
மெதுவாகக் கலையத் தொடங்கியது.
விஜயி பேச்சைக்
கேட்க அரசியல் ஆய்வாளர்கள் ஆவலாக இருந்தார்கள்.
விஜய் பேசத் தொடங்கியதும் அவர்
மீதிருந்த மதிப்பு ஒட்டுமொத்தமாகச்
சரிந்து விட்டது.
முதல்வரை
அங்கிள் என்றார்
பிரதமர்
மோடியை நரேந்திர மோடிஜீ என்றார்.
விஜய் பேசிய
ஒரு சில சொற்களால்
அங்கிருந்த பெண்கள் முகம்
சுழித்தார்கள்.
விஜயின்
முக்கிய எதிரி திமுகதான்.
பாரதீயா
ஜனதா, அதிமுக ஆகிய கட்சிகளை
ஒப்புக்கு திட்டினார்.
கமலையும்,
சீமானையும் கண்டபடி விமர்சித்தார். ரஜினியையும் லேசகச்
சீண்டிப்பார்த்தார்.
காமராஜரும், அண்ணாவும் தனது அர்சியல் வழிகாட்டிகள் என விஜய் சொன்னார். காமராஜர் மீதும் அண்ணாவின் மீதும் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர்கள் விஜய்க்கு வாக்களிக்க மாட்டார்கள்.
காமராஜருக்கு காங்கிரஸ்
கட்சி இருக்க்கிறது. அண்ணாவை
திமுகவும், அதிமுகவும் பங்கு போட்டுள்ளன.
எம்.ஜி.ஆரையும்,
மதுரையின் மைந்த விஜயகாந்தையும் நினைவு
படுத்தினார்.
அதிமுகவை
விட்டு எம்.ஜி.ஆரின்
விசுவாசிகள் வெளியேற
மாட்டார்கள். விஜயகாந்துக்கு என தனியாக
ஒரு கட்சி இருக்கிறது.
எந்தக்
கட்சியுடனும் கூட்டணி இல்லை. தமிழகத்தின்
234 தொகுதிகளிலும்
தவெக போட்டியிடும் சகல தொகுதிகளிலும் விஜய்தான்
வேட்பாளர் என்றார்.
அதிமுகவுடனும்,
பாரதீய ஜனதாவுடனும் நடைபெற்ற
பேச்சு வர்த்தை தோல்வியடைந்ததை சாதுரியமாக
மறைத்துவிட்டார் விஜய்.
அரசியல்
ரீதியாகவும் ,கொள்கை ரீதியாகவும் விஜயை
எதிர்க்கும் தமிழக அரசியல் கட்சிகள்
அனைத்தும் விஜயிக் குறி வைத்துள்ளன.
ஆகையால் விஜய் நினைப்பது போல்
இலகுவாக வெற்றியடைய முடியாது. விஜய் போட்டியிடும்
தொகுதியில் கணிசமான வாக்குகளைப் பெறலாம்.
விஜய் எதிர்பார்ப்பது போல் 234 தொகுதிகளிலும் தவெகவுக்கு
யாரும் வாக்களிக்க மாட்டார்கள்.
தமிழக
வெற்றிக் கழகம் ஒரு வலிமையான
அரசியல் சக்தி என்பதை நிரூபிக்கவும்,
தொண்டர்களை அணிதிரட்டவும் இந்த மாநாடு ஒரு
முக்கிய சக்தியை வெளிப்படுத்தும் களமாக
பார்க்கப்படுகிறது.
தவெகவின்
ஐந்து கொள்கைத் தலைவர்கள் தவிர
தற்போது புதிதாதக மறைந்த முதல்வர்களான
அண்ணாதுரை , எம்ஜிஆர் ஆகியோரது படங்களும்
இடம் பிடித்துள்ளன. இதில் அண்ணாதுரை திமுகவை
நிறுவியவர். எம்ஜிஆர் அதிமுகவின் நிறுவனர்
என்பது சுவாரஸ்யமானது.
மாநாட்டு
வளாகத்தில் மிகப் பெரிய அளவில்
பல்வேறு வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்படன..
70க்கும் மேற்பட்ட எல்இடி திரைகள்
, 200 சிசிடிவி கமராக்கள்,பெண்களுக்கு தனி
இடங்கள், குடிநீர், கழிப்பறைகள் ,தாய்ப்பால்
கொடுக்கும் அறைகள் உள்ளிட்ட சிறப்பு
வசதிகள் என்பன அமைக்கப்பட்டன.
தனக்கு
இருக்கும் செல்வாக்கை விஜய் வெளிப்படுத்திவிட்டார். இந்த மக்கள்
கூட்டம் வாக்காக மாறுமா என்பதை
அறிவதற்கு 2026 ஆம் ஆண்டு வரை
காத்திருக்க வேண்டி உள்ளது.
No comments:
Post a Comment