Wednesday, October 22, 2025

உலகக் கிண்ணம் 2026 தகுதி பெற்ற நாடுகள்

உலகக் கிண்ணம் 2026

தகுதி  பெற்ற நாடுகள்

கனடா,மெக்சிகோ,கனடச ஆகிய நாடுகளில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக்கிண்ண உதைபந்தாட்டத் தொடரில் விளையாடுவதற்கு   28 நாடுகள் தகுதி பெற்றுளன. 

உலகண்ணிண்ண உதைபந்தாட்டத்தொடரில் இது வரைகாலமும் 32 நாடுகள் விளையாடின அடுத்த ஆண்டு 48 நாடுகள் விளையாட உள்ளன.

ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து கேப் வெர்டே, என்ற நாடு முதன் முதலாக உலகக்கிண்ண உதைபந்தாட்டத் தொடரில் விளையாடத் தகுதி  பெற்றுள்ளது. இது ஆபிரிக்கக் கண்டத்தின் மேற்குக் கரைக்கு அப்பால் வட அட்லாண்டிக் பெருங்கடலில் மக்ரோனேசிய சூழல் வலயத்தில் அமைந்துள்ள பல தீவுக்கூட்டங்களைக் கொண்ட ஒரு குடியரசாகும்.10 தகுதிச் சுற்றுப் போட்டிகளில் விளையாடிய கேப்  வெர்டே  7 போட்டிகளில் வெற்றி பெற்று. ஒரு  போட்டியில் தோல்வியடைந்து இரண்டு போட்டிகளை சம நிலையில் முடித்தது.

2022 ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியை நடத்திய கட்டாரும் தகுதி பெற்ற நாடுகளில் ஒன்றாகும். ஐரோப்பாவில் இருந்து முதல் நாடாக இங்கிலாந்து தகுதி பெறுள்ளது.

2026 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடத் நாடுகளின்  முழுப் பட்டியல்

 உலகக் கிண்ணப் போட்டியை நடத்தும் நாடுகளான கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா

ஆசியக் கண்டத்தில் இருந்து அவுஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், ஜோர்தான், கட்டார், சவூதி அரேபியா, தென் கொரியா, உஸ்பெகிஸ்தான்

ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து அல்ஜீரியா, கேப் வெர்டே, எகிப்து, கானா, ஐவரி கோஸ்ட், மொராக்கோ, செனகல், தென்னாப்பிரிக்கா, துனிசியா

ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்து

ஓசியானியாவில் இருந்து நியூஸிலாந்து

தென் அமெரிக்காவில் இருந்து  ஆர்ஜென்ரீனா, பிறேஸில், கொலம்பியா, ஈக்வடார், பராகுவே, உருகுவே

லாட்வியாவை 5-0 என்ற கோல்  கணக்கில் வீழ்த்தி   உலகக்  கிண்ணப் போட்டிக்கு இங்கிலாந்து  தகுதி பெற்றது. 1966 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்ட சம்பியனாகிய பின்னர் இங்கிலாந்து ஆண்கள்  உதைபந்தாட்ட அணி பிரகாசிக்கவில்லை. 2009 ஆம் ஆண்டு முதல் அதன் கடைசி 37 உலகக் கிண்ண  தகுதிச் சுற்றுப் போட்டிகளில் அது தோற்கடிக்கப்படவில்லை. ஐரோப்பிய சம்பியன்ஷிப் தகுதிச் சுற்றுகளையும் சேர்த்து, 2015 முதல் 57 போட்டிகளில் வெற்றி பெற்றது.

  1993   ஆம் ஆண்டு முதல் 2021  ஆம் ஆண்டு வரை தகுதிச் சுற்றுகளில் ஸ்பெய்ன்  66  போட்டிகளில்   தோல்வியடைந்து முதலிடத்தில் உள்ளது.

2010 ஆம் ஆண்டு உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டியை நடத்திய பின்னர் முதல் முறையாக தென் ஆபிரிக்க மீண்டும் களமிறங்க உள்ளது. உலகக்கிண்ண  தகுதிச் சுற்றில் மூன்று புள்ளிகள் குறைக்கப்பட்டதன் அவமானத்தைத் தாண்டி தென்னாப்பிரிக்கா செவ்வாய்க்கிழமை தனது குழுவில் முதலிடத்தைப் பிடித்தது.

நெல்ஸ்ப்ரூட்டில் நடந்த போட்டியில்   ருவாண்டாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி குரூப் சி பிரிவில்   தென்னாப்பிரிக்கா  முதலிடத்தைப் பிடித்தது.  சி பிரிவில் முதல் இடத்தில் இருந்த   பெனின்  , உயோவில் நடந்த போட்டியில் நைஜீரியாவிடம் 4-0 என்ற  கோல் கணக்கில் தோல்வியடைந்ததால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு சரிந்தது.நைஜீரியாவும், பெனினும் தலா 17 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். கோல் கணக்கில் நைஜீரியா இரண்டாவது இடத்தில் உள்ளது.


 உலகக்கிண்ண  தகுதிச் சுற்றில் 40 வயதான  கிறிஸ்டியானோ ரொனால்டோ  41 கோல்கள் அடித்து  புதிய சாதனை படைத்துள்ளார்.

1998  / 2016  ஆண்டுகளுக்கிடையில்   குவாத்தமாலா  ச வீரர் கார்லோஸ் ரூயிஸ்  39 கோல்கள் அடித்ததே இதுவரை சாதனையாக  இருந்தது.  ஹங்கேரிக்கு எதிராக  நடந்த போட்டியில்   இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம் ரொனால்டோ அந்த சாதனையை  முறியடித்துள்ளார். போத்துகலுக்கு இன்னமும் இரண்டு போட்டிகள்  இருப்பதனால் அவரின் கோல் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த வரிசையில் 39 கோல்களுடன் லியோனல் மெஸ்ஸி மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.ஆர்ஜென்ரீனாவுக்கான தகுதிகான் ச்ற்றுப் போட்டிகள் அனைத்தும்  முடிந்து விட்டன.

 

ரமணி

19/10/25

  

No comments: