கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மூத்த மகன் வியாழக்கிழமை போத்துகலின் 16 வயதுக்குட்பட்ட தேசிய அணியில் அறிமுகமானார்.
துருக்கியில்
நடைபெற்று வரும் ஃபெடரேஷன்ஸ்  கிண்ணப் போட்டியில்
துருக்கியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்திய போத்துகல் அணியில், கிறிஸ்டியானின்ஹோ என்று
அழைக்கப்படும் 15 வயது கிறிஸ்டியானோ டோஸ் சாண்டோஸ், 90வது நிமிடத்தில் மாற்று வீரராக
களமிறங்கினார்.
சவூதி அரேபியாவில் உள்ள அல்-நாசரின் இளைஞர் அகாடமிக்காக விளையாடும் இந்த டீனேஜ் வீரர், அவரது தந்தையின் அதே கிளப்பான அல்-நாசர், முன்பு போத்துகலின் U-15 அணிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

 
No comments:
Post a Comment