ஜேர்மனிய உதைபந்தாட்ட தேசிய அணியின் முன்னாள் கப்டனும் கோல்கீப்பரும், 2014 உலகக்கிண்ண சம்பியன் வீரருமான மனுவல் நியூயர் தேசிய அணிக்கு மீண்டும் வருவதற்கான வாய்ப்பு பரபரப்பாகப்
பேசப்படுகிறது.
39
வயதான பேயர்ன் மியூனிக் கோல்கீப்பர் விளையாடுவதற்கு தகுதியாக இருப்பதாக அவரது மன்னேஜர்
தாமஸ் க்ரோத் தெரிவித்தார்.
தற்போதைய
முதல் தேர்வான கோல்கீப்பர் மார்க்-ஆண்ட்ரே
டெர் ஸ்டீகன் முதுகு அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓரங்கட்டப்பட்டதால், மனுவல் நொயரின்
மீள் வருகைக்கான கோரிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. லோதர் மாத்தேயஸ், பாஸ்டியன் ஸ்வைன்ஸ்டீகர்
, செப் மேயர் உள்ளிட்ட பல முன்னாள் சர்வதேச வீரர்கள், மனுவலை மீண்டும் அழைத்து வருமாறு பகிரங்கமாக வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.
12
ஆண்டுகளுக்குப் பிறகு மிக ஜேர்மனிய தேசிய உதைபந்தாட்ட
அணியில் மனுவல் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு
எழுந்துள்ளது.
மனுவல் நொயர், ஜேர்மனி,உதைபந்தாட்டம், விளையாட்டு,

No comments:
Post a Comment