அபுதாபியில் நடைபெற்ற ஆசியக்கிண்ணப் போட்டியில் ஹொங்கொங்கை எதிர்த்து விளையாடிய பங்களாதேஷ் 7 விக்கெற்களால் வெற்றி பெற்றது.
ஆசியக் கிண்ண 2025 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 11ஆம் திகதி
அபுதாபியில் மூன்றாவது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்
வகிக்கும் பங்களாதேஷ், ஹொங்கொங் ஆகியன மோதின.நாணயச்
சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் முதலில் பந்து
வீச்சைத் தெரிவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய
ஹொங்கொங் 20 ஓவர்களில் 7 விக்கெற்களை இழந்து 143 ஓட்டங்கள் எடுத்தது.
நிஷாகத் கான்
42, ஜீசன் அலி 30, கப்டன் யாசிம் முர்டசா 28
ஓட்டங்கள் எடுத்தார்கள். பங்களாதேஷ்
அணியின் டஸ்கின் அகமது, தன்ஜிம் ஹசன், ரிசாத்
ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்து
அசத்தினார்கள்.
144 ஓட்ட எண்ணிக்கையுடன் களம் இறாங்கியதுஅ பங்களாதேஷ் ச துவக்க
வீரர்கள் பர்வேஸ் ஹொசைன் 19, தன்சிட் ஹசன் 14
ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த
கப்டன் லிட்டன் தாஸ் அதிரடியாக விளையாடினார். அவருடன் சேர்ந்து விளையாடிய தவ்ஹீத் ஹாரிடாய்
நங்கூரமாக கை கொடுத்தார். அதிரடி காட்டிய லிட்டன் தாஸ் அரை சதத்தை அடித்து
59 (39) ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஹரிடாய் 35* (36) ஓட்டங்கள் எடுத்தார். 17.4 ஓவர்களில் 3 விக்கெற்களை இழந்த பங்களாதேஷ்
144 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.ஹொங்கொங்குக்கு எதிரான பங்களாதேஷின் முதல் ரி20
வெற்றி இது.
2014 ஆம்
ஆண்டு நடந்த ரி 20 போட்டியில்பங்களாதேஷும், ஹொங்கொங்கும் முதன் முதலில் விளையாடின. சொந்த மண்ணில் நடந்த போட்டியில்
பங்களாதேஷ் 2 விக்கெற்களால் தோல்வியடைந்து.
சமூக வலைத்தளங்கள் அப்போது பங்களாதேஷை மோசமாகக் கிண்டல் செய்தன. இரண்டாவதி ரி20
போட்டியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் வெற்றி பெற்று நிம்மதியடைந்தது.
அசை சதம் அடித்த
கப்டன் லிட்டன் தாஸ் க்கு ஆட்டநாயகன் விருது
வழங்கப்பட்டது. தை வென்றார். சபீர் ரஹ்மானுக்கு
பின் (2016இல் இலங்கைக்கு எதிராக) ஆசிய ரி20
கிண்ணப் போட்டியில் அரை சதத்தை அடித்த வங்கதேச வீரர் என்ற சாதனையையும் அவர்
படைத்தார்.
No comments:
Post a Comment