Thursday, November 27, 2008

இலங்கைப் பிரச்சினையில் தீவிரம்காட்டும்தமிழகக் கலைஞர்கள்


இலங்கையில் நடைபெறும் யுத்தத்தினால்தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்பமும் துயரமும் தமிழகத்தில் பெரும் உணர்வலைகளைஏற்படுத்தியுள்ளது.பழ. நெடுமாறன், வைகோ, திருமாவளவன்,டாக்டர் ராமதாஸ் ஆகியோரின் ஆதிக்கத்தில்இருந்த இலங்கைத் தமிழ் மக்கள் விவகாரம்இப்போது சினிமா கலைஞர்களின் கரங்களில்சென்றுள்ளது. இலங்கைத் தமிழ் மக்களுக்குஆதரவாக பாரதிராஜா கொடுத்த உணர்ச்சிகரமான குரல் தமிழக அரசியல்வாதிகளையேஅதிர வைத்தது. இதுவரை காலமும் அரசியலாகப் பார்க்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினை
மக்கள் மனதில் உணர்ச்சிகளைத் தூண்டி புது வடிவம் பெற்றுள்ளது.
எம். ஜி. ஆருக்குப் பின்னர் தமிழக அரசியலை ஆட்டிப் படைக்கப் போகும் நடிகர் யார்என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் என்ற பதில் ஒருமித்த குரலாக எழுந்தது.தமிழக அரசியல் சினிமாவுடன் பின்னிப்பிணைந்திருப்பதனால் தமிழகத்தின் அடுத்தமுதல்வர் ரஜினிகாந்த் தான் என்று அவரது ரசிகர்கள் முடிவு கட்டினர். ரஜினியின் நடவடிக்கைஅனைத்தும் அரசியலாகவேபார்க்கப்பட்டன. ரஜினியின் திரைப்பட வசனங்கள்அனைத்தும் இதனை ஊர்ஜிதம் செய்தன.ரஜினியை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்த வேளையில் அதிரடியாக அரசியலில்நுழைந்து தனது பலத்தை வெளிக்காட்டினார்விஜயகாந்த். கறுப்பு எம். ஜி. ஆர். என்றஅடைமொழியுடன் அரசியல் அரங்கில்நுழைந்த விஜயகாந்த் அரசியல்வாதிகளைஅச்சுறுத்தினார். விஜயகாந்தின் அரசியல் பிர
வேசம் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது.ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களை ரஜினி சந்திக்கப் போகிறார் என்ற செய்தி தேனாக இனித்தது.ஆனால் ரஜினியின் ரசிகர்களுடனான சந்திப்பு அவரது முடிவில் எந்த மாற்றத்தையும்ஏற்படுத்தவில்லை. நொந்து போயிருந்த ரஜினியின் ரசிகர்களுக்கு விஜயின் உண்ணாவிரதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.விஜயை முதல்வராக்கிப் பார்க்கவேண்டும்என்ற ஆசை அவரது தந்தை எஸ். ஏ. சந்திரசேகரிடம் இருக்கிறது. அவருடைய வழிகாட்டலால்தான் விஜய் அதிரடியாக முடிவுகளை
எடுக்கிறார்.
2011ஆம் ஆண்டு நடைபெறும் தமிழகத்தேர்தலில் மிக இலகுவாக வெற்றி பெற்றுமுதல்வராகலாம் என்ற எண்ணத்துடன் ஜெயலலிதா உள்ளார். காங்கிரஸ் கட்சி மீதும் திராவிடமுன்னேற்றக் கழகத்தின் மீதும் தமிழகமக்கள் வெறுப்படைந்துள்ளனர். ஆகையினால் 2011ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் இலகுவாக வெற்றிக் கனியைப் பறிக்கலாம் என்ற எண்ணத்துடன் ஜெயலலிதா உள்ளார்.ஆனால் மறு பக்கத்தில்,
விஜயகாந்த் அடுத்த முதல்வர் கனவில்மிதக்க, யாரும் எதிர்பாராத வகையில்தமிழக முதல்வர் போட்டியில் விஜய் களம்இறங்க உள்ளார்.
2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் விஜய் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் யுத்த நிறுத்தம் ஏற்பட்டு அமைதி திரும்பவேண்டும்போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்துதமிழகம் முழுவதும் போராட்டங்களும் பேரணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த
நிலையில் இலங்கையில் யுத்தம் நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதத்துக்குஅழைப்பு விடுத்தார் விஜய்.ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் விஜய்நடத்திய உண்ணாவிரதம் பெரு வெற்றி பெற்றது.அரசியல் கட்சிகளும் தொழிற் சங்கங்களும் போராட்டம் நடத்தி வரும்வேளையில்முக்கியமான தமிழ் நடிகர் நடத்திய உண்ணாவிரதம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
படும்போது தியேட்டரை அலங்கரித்து நடிகரின் படத்துக்கு கற்பூரம் கொளுத்தி பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்களுக்கு உண்ணாவிரதப் போராட்டம் புதுமையானதாக இருந்தது.தனது ரசிகர் மன்றத்தின் மூலம் நற்பணிசெய்து வந்த விஜய் தனது ரசிகர்களை அரசியலை நோக்கித் திருப்பியுள்ளார். விஜயின்
விருப்பத்திற்கேற்ப தமது உணர்வலைகளைரசிகர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.சென்னைக்கு வெளியே உள்ள நகரங்களிலும் விஜய் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக நடத்தினர்.விஜயின் விருப்பத்தை அவரது ரசிகர்கள்ஓரளவு பூர்த்தி செய்துள்ளனர். அனைவருடனு
ம் எளிதில் பழகாத விஜய் அரசியலில்வெற்றி பெறுவாரா என்றசந்தேகம் பலரிடம்உள்ளது. விஜயின் அண்மைக்கால நடவடிக்கைகள்
அதற்கு விடை கூறுகிறது.ரசிகர்களுடனும் வசதி குறைந்தவர்களுடனும்நெருங்கிப் பழகும் விஜய்விரைவில் தொண்டர்களுடனும் கலகலப்பாகப் பழ
குவார் என்கின்றனர் அவரை நன்கு தெரிந்தவர்கள்.விஜய் நடத்திய உண்ணாவிரதம் சினிமாவுக்குஅப்பால் அரசியல் கட்சித் தலைவர்களை ஈர்த்துள்ளது.
அரசியல் கட்சித்தலைவர்கள் விஜயுடன்ஒன்றாக அமர்ந்து அவரது உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தமது ஆதரவைத் தெரிவித்தனர்.

திராவிட முன்னேற்றக்கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் மீது வெறுப்புள்ள தமிழகமக்கள் சிலர் புதியதொரு அரசியல் மாற்றத்தைஎதிர்பார்த்துள்ளனர். விஜயகாந்தின்அரசியல் பிரவேசம் அவர்களின் எதிர்பார்ப்பை உற்சாகப்படுத்தியது. விஜயகாந்தின்
கட்சியில் இணைந்துள்ள பல அரசியல் பிரமுகர்கள் ஊழல் பேர்வழிகளாக இருப்பதால் புதிய மாற்றத்தை எதிர்பார்க்கும் வாக்காளர்கள்
ஏமாற்றமடைந்துள்ளனர்.தமிழகத்தில் மாற்றத்தை விரும்புபவர்கள்ரஜினி அல்லது விஜயின் அரசியல் பிரவேசத்தையே எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தமிழக மக்களின் வேண்டுகோள்களையும்தமிழக அரசின் தீர்மானத்தையும் மத்திய அரசுதொடர்ச்சியாகப் புறக்கணித்துக்கொண்டேவருகிறது. இலங்கையில் நடைபெறும் யுத்தம்நிறுத்தப்படவேண்டும் என்பதே தமிழகத்தின்ஒட்டுமொத்த குரலாக உள்ளது. தமிழகத்தின்
குரலுக்கு மத்திய அரசு உரிய கௌரவம்கொடுக்கவில்லை.
இலங்கையின் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித்தலைவரும் இந்தியாவில் நின்று கொண்டு யுத்தம் நடைபெறும் என்று சூளுரைத்துள்ளனர்.இவர்களின் இந்தக் கோஷம் தமிழகத்தைஉசுப்பி விட்டுள்ளது. தமிழகத்தின் போராட்டங்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.இலங்கையில் நடைபெறும் யுத்தத்தை
நிறுத்துவதற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையிலும் மத்திய அரசுஈடுபடவில்லை. தமிழகத்தின் போராட்டங்கள்எதனையும் மத்திய அரசு கவனத்தில் எடுக்கவில்லை. இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினையில் தலையிடாமைக்கு இந்திய மத்தியஅரசு பல காரணங்களைக் கூறுகின்றது. அதேவேளை இந்தியத் தமிழ் மீனவர்கள் கொல்லப்படுவதற்கும் தாக்கப்படுவதற்கும் உரிய நடவடிக்கையை இந்திய மத்திய அரசு இதுவரைஎடுக்கவில்லை.
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படமாட்டாது என்று இலங்கை அரசு பலதடவை உறுதியளித்துள்ளது.அந்த உறுதிமொழிகள் எல்லாம் காற்றில்
கலந்து விட்டன. இலங்கைத் தமிழ் மக்கள்படும் அவலங்களைத் துடைப்பதற்கு இந்தியஅரசின் வெளிநாட்டுக் கொள்கை தடை போடுகிறது என்று மத்திய அரசு காரணம் கூறினாலும் இந்திய தமிழக மீனவர்களைக் காப்பாற்றுவதற்கு என்ன தடை உள்ளது என்பதை வெளி
ப்படையாகக் கூறவில்லை.இந்திய மத்தியஅரசினதும் தமிழக அரசினதும் அடுத்தகட்டநடவடிக்கையை தமிழ் பேசும் உலகம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு 23 11 2008

No comments: