Friday, December 23, 2011

பாராடத் தயாராகிறது தமிழகம் மௌனம் காக்கிறது மத்திய அரசு

பகுதிகளுக்குத் திருப்பிவிட வேண்டும். அணையின் உயரம் குறைந்தால் தமிழகத்திற்கு நீர் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படாது என்பதே கேரளத்தின் உள்நோக்கமாகும்.
முல்லைப் பெரியõற்றில் தமிழகத்துக்கு இருந்த உரிமைகள் மெதுமெதுவாக கேரள வசம் சென்று விட்டன. அணையைப் பாதுகாப்பது, மீன் பிடிப்பதுபோன்ற உரிமைகள் தமிழகத்தின் வசம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டன. இழந்த உரிமைகளை மீண்டும்பெற வேண்டும் என்பதற்காக கேரள எல்லையில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் என்பன நடைபெறுகின்றன. கம்பம், குமிளி பகுதியில் உள்ள இளைஞர்கள் உணர்ச்சி வசப்பட்டுள்ளனர். கேரள எல்லையை நோக்கித் தினமும் செல்லும் மக்கள் படையை பொலிஸõர் சமாதானமாக திருப்பி அனுப்புகின்றனர். சில வேளைகளில் தடியடி நடத்தி கலைக்கின்றனர்.
கேரளாவில் உள்ள தமிழர்கள் மீது ஆங்காங்கே சில தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதற்குப் பதிலடியாக தமிழகத்தில் உள்ள கேரளக்காரர்களின்
சொத்துக்கள் நாசமாக்கப்படுகின்றன. இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் யுத்தம்போல் எல்லையில் மக்கள் பதற்றப்பட்டு கொண்டிருக்கையில் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எதுவுமே எடுக்காது மௌனம் காக்கிறது.
முல்லைப்பெரியாறு அணையில் பாதுகாப்பை மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமும் இதனை வலியுறுத்தியுள்ளார். தமிழக கேரள எல்லையில் கொந்தளிக்கும் மக்களை அமைதிப்படுத்த வேண்டிய மத்திய அரசு மெத்தனமாக உள்ளது. எந்த ஒரு அரசியல் கட்சியின் வேண்டுகோளும் இன்றி தமிழக மக்கள் ஒன்று கூடிப்போராட்டம் நடத்துகின்றனர். தமிழக அரசியல் கட்சிகளும் ஆங்காங்கே போராட்டங்களை நடத்துகின்றன. அமைதி காக்கும்படி முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தாலும் அமைதியாக இருப்பதற்கும் தாங்கள் தயாராக இல்லை. மத்திய அரசு தலையிட்டு உறுதியான முடிவை எடுத்தால் தமிழகமும் கேரளாவும் அமைதி பூங்காவாக இருக்கும். இல்லையேல் காஷ்மீரைப்போன்ற ஒரு பிரச்சினைக்கு முகம் கொடுக்கும் நிலை ஏற்படும்.

முல்லைப்பெரியாறு விவகாரத்தினால் தமிழக கேரள எல்லையில் ஏற்பட்ட பதற்றம் தொடர்கிறது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை உதாசீனம் செய்யும் கேரள அரசை எதிர்த்து மத்திய அரசு மௌனம் காக்கிறது. முல்லைப்பெரியாறு அணை வலு விழந்துள்ளது. ஆகையினால் புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரள அரசின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அணை பலமாக உள்ளது. அணையின் உயரத்தைக் குறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் உயரத்தைக் குறைக்க வேண்டும். முல்லைப்பெரியாற்றின் மேலதிக நீரை கேரளாவில் வேறு
தமிழக அமைச்சர்கள் இருவர் நீக்கப்பட்டு புதியவர்கள் இருவர் அமைச்சராகியுள்ளனர்.
செல்வி ராமஜெயம் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பரஞ்சோதி அமைச்சரவையில் இருந்து இராஜினாமாச் செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளளார். திறமை இல்லாமையாலும் கட்சிக்குள் கலகத்தை ஏற்படுத்தியதாலும் ராமஜெயத்தின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. திறமை இல்லாத ஒருவர் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா எப்படிச் சந்தர்ப்பமளித்தார் என்ற கேள்விக்குவிடை தெரியாது தொண்டர்கள் தவிக்கின்றனர்.
திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பரஞ்சோதியின் பெயர் அறிவிக்கப்பட்டபோது அவர் மீது புகாரும் கிளம்பியது. கணவனை இழந்த டாக்டர் ராணிக்கும் பரஞ்சோதிக்கும் இடையேயான நெருக்கம் திருமணத்தில் முடிந்தது. முதல் மனைவியை விவாகரத்துச் செய்வதற்காக தன்னிடமிருந்து பணம், நகை என்பனவற்றை வாங்கிக் கொண்டு தன்னை பரஞ்சோதி ஏமாற்றி விட்டார் என்று டாக்டர் ராணி புகார் தெரிவித்தார். பரஞ்சோதிக்கு எதிரான புகாரை பொலிஸார் ஏற்றுக் கொள்ளாததனால் நீதிமன்றத்தின் உதவியுடன் பரஞ்சோதி மீது புகார் செய்தானர் டாக்டர் ராணி. பரஞ்சோதிக்கு எதிரான புகார் வலுவாக இருந்ததனால் அவரை இராஜினாமாச் செய்யுமாறு பணித்தõர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் விசுவாசத்துக்குரியவர்களில் பரஞ்சோதியும் ஒருவர். அதனால் தான் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படாது இராஜினாமாச் செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
தமிழக சட்ட சபைத் தேர்தலில் திருச்சி மேற்குத் தொகுதியில் வெற்றி பெற்றவர் மரியம் பிச்சை. அமைச்சர் பதவி ஏற்ற மரியம் பிச்சை சட்ட சபை நடவடிக்கையில் கலந்து கொள்வதற்காக சென்னையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில் விபத்தில் மரணமானார். திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரானார். பரஞ்சோதி 33 நாட்களில் அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்தார். மரியம் பிச்சையும் பரஞ்சோதியும் அமைச்சராக சட்ட சபைக்குச் செல்லவில்லை. அமைச்சரின் தொகுதி என்ற பெருமையை திருச்சி மேற்கு இழந்து நிற்கிறது.
ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்து தூக்கி எறியப்படுபவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. அமைச்சரவையில் இருந்து ஒருவர் நீக்கப்படும்போது அதற்கான உண்மையான காரணத்தை தமிழக அரசு வெளியிடுவதில்லை. திறமையற்றவர் தகுதியற்றவர் இதனால் தான் நீக்கப்படுகிறார் என்று பொதுவாக கணிக்கப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதாவின் அடுத்த இலக்கு யார் என்பதே தமிழக அமைச்சர்களின் மனதில் உள்ள கேள்வியாக உள்ளது.
வர்மா
சூரன்,ஏ,ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 18/12/11


No comments: